Thursday 7 August 2008

அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்

தினமினவில் வரும் செய்திகள் சூடு ஆறாமலே இரயாகரனின் வாந்தியாய் வரும், எனவே இரண்டையும் தனித்தனியாய் ஆராய வேண்டிய தேவை எனக்கு இல்லாமல் போகின்றது.
“போர்வெற்றி பற்றிய மாயை அடியோடு சாய்ந்து போய் விட்டது”,
“தொடர்தோல்விகளின் மனஉளைச்சல்களால் களத்தளபதிகளிடையே முரண்பாடு வலுவடைந்து கொண்டுவருகின்றது.”
“ அரசபடைகள் நிலங்களை மீட்டுக்கொண்டுவரும் அதேவேளை புலிகள் உதிரிகளாக காடுகள் நோக்கி ஓட்டம் எடுக்கின்றார்கள், மிகப் பெரிய அளவிலான புலிகள் தமது அமைப்புக்களில் இருந்து தலைமறைவாகிக் கொண்டிருக்கின்றார்கள்,”
இப்படி அரசஊடகங்கள்
பொய்மையின் உச்சத்தை போராட்டத்தின் மிக ஆரம்பத்திலேயே பயன்படுத்திவிட்டார்கள்.
இந்தக் கூற்றுக்கள் எப்போது சொல்லப்பட்டது?
ஜயசிக்குறு வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்த போதா?
இல்லை யாழ்மண் ஆக்கிரமிக்கப்பட்ட நடவடிக்கையின் போதா?
இல்லை அதற்க்கும் முந்தைய பாரிய நடவடிக்கைகளின் போதா?
இல்லையே எல்லாவற்றுக்கும் முன்னதாக மேற்க்கொள்ளபட்டிருந்த மிகச்சிறிய நடவடிக்கையின் போது.
மிச்சம் பின்னுக்கு என்று வைக்காமல் மொத்தமாய் பொய் சொல்லிவிட்டார்கள்,
எனவேதான் பின்னால் வரும் நடவடிக்கைகளுக்கு புதிய வழிமுறையை பின்பற்றுகின்றார்கள். அவை இப்படித்தான்,
நேற்றுவரை இருந்து வந்த உண்மயான போராடும் வலு இந்த நடவடிக்கையால் அடியோடு தகர்க்கப்பட்டு விட்டது.
நேற்றுவரை இருந்த மக்களாதரவு புலிகளின் தளம்பல் கொண்ட நிலைப்பாடுகளால் கைவிரிக்கத் துவங்கிவிட்டது.
பின் வரும் கூற்று இரயாகரன் வாய்மொழியில்..........

பி. இரயாகரன்.
உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு
பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?
நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான
அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.பலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக்
கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க.......................,


அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்
முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
புலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்து, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான
ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது.



ஐயா இன்னும் ஒரு கேள்வி !
ஒரு சிறியநாடுகூட தனது போக்கிற்று குறுக்கீடுசெய்யாத நிலையில் சர்வவல்லமை கொண்ட போரசசுகள் துணையுடன் போர் புரியும் ஒரு அரசை எதிர்த்து தனக்கென நிலத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைக்கின்ற அமைப்பின் உறுப்பினர் தொகையை கும்பல் என்று பெயரீடு செய்வது
தமிழ் இலக்கணத்துக்கு அமைவாகவா இல்லை இரயாரன்விருப்பத்துக்கு மரபு அமைதியாகின்றதா?