Tuesday 30 September 2008

சிறீலங்கா ஒரு பௌத்த நாடு! வெல்ல வருவோர்க்கு புதைக்கும் சுடுகாடு!

சிறீலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம்: எமது ஆட்சியில் புலிகளுக்கு இறுதித்தீர்வைக் காண்போம் -பிரதமர்
சிறிலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம். எனவே, இங்கு ஒருபோதும் பயங்கரவாதம் வெற்றிபெற முடியாது. பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும். எமது ஆட்சிக் காலத்திற்குள் விடுதலைப்புலி பயங்கரவாதத்திற்கு இறுதித்தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சைப்பிரசுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போனது. ஆனால், எமது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண்போம்.
எதிர்கால சந்ததியினர் சுமுகமாக வாழும் சூழலை உருவாக்குவோம். கிழக்கு மாகாணத்தை எமது படையினர் மீட்டெடுத்தனர். தற்போது அங்கு வாழும் மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் வடபகுதியிலும் இந்த நிலைமையே ஏற்படுத்துவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
வடக்கில் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும். இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.பௌத்த தர்மத்தின் அடிப்படையில் எமது நாடு அமையப்பெற்றுள்ளது.
மும்மணிகளின் ஆசீர்வாதங்களும் எமக்கு உண்டு. இது பௌத்த நாடு. எனவே, பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
(பதிவில் இருந்து http://www.pathivu.com/?p=4537)

ஐயா ரட்ணசிறிநாயக்கா!
இது பௌத்த நாடு இல்லை என்று சொல்லுகின்ற எதுவோ அதுதான் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வருமா?
பௌத்த தர்மம் எப்போது ஐயா தன் பொறுப்பை துப்பாக்கிகளிடம் ஒப்படைத்தது?
பௌத்த நாடு பயங்கரவாதத்தால் வெல்லப்பட முடியாது என்று உரைப்பது ஏனைய மதத்தை பழிக்கின்ற பொருள்தான் கொண்டிருக்கின்றது என்பது மறைபொருள் அல்லவா?

Monday 29 September 2008

சம்பூரே சாட்சி!

சிங்கள மண்ணில் மூன்றடி நிலத்தின் நிம்மதியாக ஒன்றுக்கு இருக்குக் உரிமை பறிபோய்விட்டால்கூட ஒரு நாட்டுக்கே வாழ்வுதரும் அமைதியை குலைத்து போர் புரிவது நியாயமானது.
தமிழ் மண்ணின் மொத்தமும் ஒன்றுக்கும் உரிமை இல்லாது அலைந்தாலும் அவர்கள் போரில் குதிப்பது நியாயம் துளியும் இல்லாதது.
இதுதான் சம்பூரில் துவக்கி வைத்த போரின் அறிவிப்பு!
இவை தமிழ் அடிவருடிகளின் அறிவுக்கூர்மைக்கு எட்டாதது.
‘கருத்தாளன் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் கருத்துக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படுகின்றதாம்’ என்று தேசம்நெற் தனக்குள்ளே சந்தோசப்படுக் கொள்கின்றது.
பரிதாபம் என்னவென்றால் அங்கு பதில் இடுவது அரிவரி வகுப்பினரே என்பதால் விசயஞானம் தூக்கலானவை நீக்கப்பட்டுவிடும்.
சத்தியக்கடுதாசி முகப்புக் குறள் ‘அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவோம்!’
இது செயலுக்கு சம்பந்தமில்லாக் குறள், அப்படி சம்பதந்தமானது இந்தக் குறள்தான்
‘தாயே என்றாலும் பணம் தந்தால் வேசி என்று பழிப்போம்!’
என்ன சத்தியக் கடுதாசி இக்குறளை மாற்றும் என்று நம்பலாமா?
அடுத்து இரயாகரன்;
ஒவ்வொரு பதில்களுக்கும் கேள்வி என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒன்று. செகிடு விசரில் புலம்புவதை ஒத்தது.
ஐயா உண்மை மருந்தளவுதான் உங்களிடம் இருந்தால் கூட விவாதத்திற்க்கு உங்களை இந்தளவு தொலைவில் ஒளித்துவைத்திருக்க வேண்டிய அவசியம்தான் வருமா?

அப்பாவிப் பிணங்களை எண்ணும் போட்டியில் பிராந்திய அரசுகள்!

தேர்தல் ஜனனாயகத்தின் சின்னம்தான் மறுக்கவில்லை,
துப்பாக்கிகளால் வலிந்த பிரசவம் செய்யப் படுகின்ற தேர்தல் முடிவுகளுக்கு பாராட்டுக்களை மூட்டை மூட்டையாக அனுப்பும் இந்த அரசுகள்,
அங்கே முடமாக்கப் பட்ட மனித உரிமைகள் பற்றி வாய்திறப்பார்களா?
அந்த விடுதலை நோக்கிய தவத்தை பயங்கரவாதம் என்று சேறுபூசம் அருகதை உண்டா இவர்களுக்கு!
இதோ பாருங்கள் ஊட்டி ஊட்டி உங்களால் வளர்க்கப்படும் அரசபயங்கரவாதம்,
அதன் பற்றக்ளுக்குள் தொங்கும் பாலகர் உடம்புகளை,
வயதான உடலங்களாய் இருந்திருந்தால் பயங்கரவாதி என்ற ஒரு சொல்லால்
உங்கள் கரவோசத்தை வாங்கிவிடுவார்கள்.
இதற்க்கும் ஒரு பொய்யால் முழங்காலையும் தலையையும் சேர்த்து முடிச்சு போடுவார்கள் ஏன் என்ற கேள்வி இல்லாத இடத்தில் பிழைப்பது அவர்கள் பதில்கள் அல்லவா?
பிராந்திய அரசுகளின் அட்டூளியம் எம்மண்ணில் இதோ பாருங்கள்!





Friday 12 September 2008

இந்தியாவின் பழைய இரும்புகளுக்கு கடையாகின்றதாம் இலங்கைப் படை!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலகத்திலும் நேற்றுக் காலை நடைபெற்றன. இச்சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்குமிடையிலான வெளிவிவகார மட்டத்திலான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன என்றும் 1952 ஆம் ஆண்டு இறப்பர், அரிசி மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை தொடர்ந்தும் இன்றுவரை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளமை குறித்து இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றும் அரச தகவல்கள் தெரிவித்தன

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

புரியாத புதிராய்த்தொடரும் புலிவிமானத்தின் துணிச்சல்களினால் குளம்புகிறது திவயின!

புலிகளின் விமானத்தை செலுத்தியவர்கள் தொடர்பாக சந்தேகம் தெரிவிப்பு

அண்மையில் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள கடற்படைத் தலைமையகத்தைக் குறிவைத்து புலிகள் இயக்க விமானப்பிரிவினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல் பற்றிய உயர்மட்ட விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின்போது புலிகள் இயக்கத்தின் விமானத் தாக்குதல்கள் பற்றி பல சந்தேகங்கள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தவகையில் மேற்படி திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலின்போது புலிகள் இயக்க விமானத்தைப் புலிகள் இயக்கத்தின் விமானப்பிரிவு உறுப்பினர்கள்தான் செலுத்தி வந்தார்களா எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, சம்பவத்தின்போது திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தலைமையகம் மற்றும் அண்டிய அனைத்துப் பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் இந்நிலையில் கடற்படைத் தலைமையகத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீச்சை நடத்தியிருப்பதாகவும் இவ்வாறு இருளிலும் தாக்குதல் இலக்கைத் தேடித் தாக்குதலை மேற்கொள்ள முடிந்திருப்பதே மேற்படி பாதுகாப்பு உயரதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறையின் குறித்த உயர்மட்டம் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப, புலிகள் இயக்கம் திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தின் மீது தொடுத்துள்ள விமானத் தாக்குதலின்போது விமானத்தை புலிகள் இயக்கத்தின் விமானமோட்டி செலுத்தாது வெளிநாடு ஒன்றைச்சேர்ந்த விமானமோட்டிகள் செலுத்தியிருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, புலிகள் இயக்கம் அதன் விமானத்தைச் செலுத்த வெளித்தரப்பிலிருந்து விமானமோட்டிகளை கூலிக்கு அமர்த்தியிருக்கலாம் என்பதே மேற்படி பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகமாகும். இந்த சந்தேகத்தின் சார்பில் புலிகள் இயக்கத்தின் உத்தேச விமானமோட்டிகள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டவர்களா, வெளிநாட்டவர்களாயின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்தத் தகவல்களும் பாதுகாப்பு உயரதிகாரிகள் தரப்பிலிருந்து தெரியவரவில்லை.

திவயின: 07.09.2008 ( தினக்குரலில் இருந்து)

இந்தியாவிடம்கூட இல்லாத பலம் தங்களிடம் என்கிறது திவயின!

சக்தி வாய்ந்த ஏவுகணைப்பலம் இந்தியாவிடம் இல்லை


கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் சிறிலங்கா அரசு அரச படையினரின் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு அத்தியாவசியமான நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துவருகிறது. இவ்வாறு சில மாதங்களின் முன்னர் செக்கோஸ்செலவக்கியா நாட்டிலிருந்து யுத்த களத்தில் தீவிர தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த கிராட் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்கா அரசு செக்கோஸ்செலவக்கியா அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது.
இதையறிந்த புலிகள் இயக்கம் உடனடியாக ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் பிரதிநிதிகள் பிரமுகர்கள் மூலமாக இந்த கிராட் ஏவுகணைகளின் கொள்வனவைத் தடுப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இவ்வாறு ஒரு நாடுகளிலிருக்கும் புலிகளுக்குச் சார்பான பிரபல அரசியல்வாதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகவும், அத்துடன் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தும் இவ்வாறு பல வகையிலும் செக்கோஸ்செலவக்கியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகள் வழங்கப்படுவதைத் தடுக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் சிறிலங்கா அரசு ஏனைய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதையிட்டு பொதுவாகவே அதிருப்தியடையும் அண்டைய நாடாகிய இந்தியாவும், மேற்படி கிராட் ஏவுகணைகளை செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து சிறிலங்கா அரசு வாங்குவதையிட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்திய அரசும் இவ்வாறு சிறிலங்காவுக்கு செக்கோஸ்செலவக்கியா அரசு கிராட் ஏவுகணைகள் வழங்குவதைத் தடுக்க மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், புலிகள் இயக்கத்தின் மேற்படி ஆதரவு வட்டாரங்களின் முயற்சிகளோ அல்லது வேறு நாடுகளின் அரசு சார்ந்த முயற்சிகளோ பயனளிக்கவில்லை. சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகளை வழங்குவதென்று தீர்மானத்தை செக்கோஸ்செலவக்கியா அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ மாற்றவில்லை. இதன் பயனாக அண்மையில் கிராட் ஏவுகணைகளை சிறிலங்கா அரசு பெரும் எண்ணிக்கையில் செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து பெற்றது. தற்போது இந்த கிராட் ஏவுகணைகளை வன்னி யுத்த நடவடிக்கைகளில் அரச படையினர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த கிராட் ஏவுகணை பலம் முன்னர் புலிகள் இயக்கத்தினர் ஆணையிறவு மீது தாக்குதல் மேற்கொண்டபோது அரச படையினரிடம் இருக்கவில்லை எனவும் இருந்திருந்தால் புலிகள் இயக்கத்தின் ஆணையிறவுத் தாக்குதலை முற்றாக முறியடித்திருக்கலாம் எனவும் உயர் மட்ட இராணுவத் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யுத்தகளத்தில் தீவிர யுத்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணை வகைகளில் கிராட் ஏவுகணைகள் மிகக் கூடுதலான தாக்குதல் பலம் வாய்ந்தவை எனவும், இவ்வாறான கிராட் ஏவுகணை பலம் இந்தியாவிடம் கூட கிடையாது எனவும் மேற்படி இராணுவ உயர் மட்ட தகவல் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளன.

திவயின: 7.09.2008 (தினக்குரலில் இருந்து)