Tuesday 21 October 2008

புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!

கடவுளே இல்லை என்ற கொள்கை உடையவன் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் வரைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
அதுபோலவே புலிகளை விமர்சிப்பவர்கள் அவர்களின் தகவல் களஞ்சியமாக இந்திய, சிங்கள அரசுகளின் ஊடகங்களே விளங்கும் போது உங்கள் விமர்சனங்களின் மரியாதை மிகவும் மட்டரகமாகவே ஈழத்தவர்களுக்கு விளங்குகின்றது. ஏன் என்றால் உங்கள் கருத்து தளத்தின் அடிப்படையே எங்களுக்கு உடன்பாடானதாய் இல்லை!
ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற கருத்திற்க்கு உடன்படுகின்றீர்களா?
· ஆம் என்றால் அந்த மக்களின் எண்ணங்களுக்கு கைகொடுப்பது உங்கள் கடமையா? இல்லையா?
· இல்லை என்றால் உலகமே பகையாக விளங்கும் அந்த அமைப்பை முப்பது ஆண்டு காலமாய் ஒரு அரசு உலகத்துணையோடு வெல்ல முடிய வில்லை என்றால் அதன் ஆதாரமாய் இருப்பது மக்கள் என்றுதானே பொருள். புலத்திலே புலிஆதரவை உணர்த்த கூடும் பிரமாண்டமான கூட்டங்களின் அடிப்படை என்னவாக இருக்கும்.
இந்தியா புலியைத்தான் விரோதிக்கின்றது மக்களை அல்ல என்ற கருத்திற்க்கு உடன்பாடானவரா?
· அப்படி என்றால் புலிவிரோதத்தின் துவக்கப் புள்ளி என்ன? ரஜீவின் மரணமோ அல்ல அமைதிப்படைக் கால கசப்புக்களோ என்றால் உங்களால் விவாதிக்க ஓரளவு அடிப்படை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை அல்லாமல் அந்த புலிவிரோதம் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்டது அமைதிப்படை வரவிற்க்கும் முந்தைய ஆண்டுகளில்த்தான் என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. புலியை அழிக்க வளர்த்து ஏவிய பிற குழுக்கள் இந்தியக் கரைகளில் துண்டங்களாக ஒதுங்கிய போது, தீவிர ஆதரவுச் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்தது என்ன காரணத்தினால் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்போது புலி தன் மக்கள் நலனில் காட்டிய உறுதிதான் பகையானது என்று சொல்ல வேறு என்னதான் காரணங்கள் வேண்டும். பின் அமைதிப்படையாய் ஈழத்தில் வந்த பிறகு துரோகப் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த அரவங்களைக் கொண்டுதான் பொதுசன நாசவேலைகள், புலிஅழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன.
பயங்கரவாதப் பண்பு கொண்டது புலிகளின் போராட்டம் என்ற கருத்து கொண்டவரா?
· புலிகளை அழிக்கும் இங்கையின் போருக்கு பின் உதைப்புக்களைப் பொருட்படுத்தாமலே அதன் ஆயுதவலிமைக்கு தோள்கொடுக்கின்றது இந்திய அரசு. அப்படி என்றால் ஊடகப்போரில் அதன் வசதிக்கு எத்துணை இலகுவாக கழுத்தறுப்பு செய்யமுடியும், ஒரு குழுவாக இருக்கு புலிகளுக்கு அந்த வசதி எத்துணை தூரமானாது. சிங்களம் ஒரு ஊரையே படுகொலை செய்யும் போது அதை மறைக்கின்ற வேலைகளயே இந்தியாவும் சேர்ந்து செய்கின்ற போது புலிகளின் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட சம்பவங்களை எந்த அளவிற்க்கு உயரமாக இரு அரசின் உபயத்திலும் உலகை வலம் வரும் அவைகள்.
· புத்தகத்திற்க்கு என்று எழுதும் கருத்துக்களை உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வசதியால் கூட கடைப்பிடிக்க முடியவில்லை தன் சொந்தககாலின் பலத்தில் மட்டும் நிற்க்கும் புலிகளுக்கு அவை பொருந்த வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் எனக்கு புரியவில்லை என்ன காரணத்தின் பொருட்டு உங்கள் அடம்பிடித்தல்கள்.

மகிந்தாவின் போர் புலிகளுக்கே எதிரானது மக்களுக்கு எதிரானாது அல்ல என்று நம்புகின்றீர்களா?
· போரின் தாக்கம் தேசத்தின் உயிரையே காவுகொள்ளக் கூடிய அளவு பெருந்தாக்கம் கண்டுள்ளது இந்த நிலையில் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று சொல்லும் அளவில் தமிழின உரிமைமீது செலுத்துகின்ற கவனம் விளங்குகின்றது சிங்களத்திற்க்கு. புலியின் அழிவிற்க்கு பின்னால்த்தான் கொடுக்கப் போவதையே என்ன வென்று காட்டுவோம் என அடம்பிடிக்கின்றது சிங்களம். சரி உலகத்தின் ஆதரவு உங்கள் தோள்களுக்கு வேண்டும் புலியை அழிக்க அவர்கள் மக்களுக்கு வளங்கும் உரிமையை அறிய என்ன குடுக்க உடன்படுகின்றீர்கள் என்பதை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை. புலிஅழிவின் பின் தமிழர்தரப்பிற்க்கு காட்டும் முழங்கையிற்க்கு அப்போது இவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதானே.
· புலிகள் கேட்கின்ற எதை சிங்களத்தால் தரமுடியாது, பணத்தையா அல்ல பதவிகளையா இல்லையே மக்களின் உரிமைதவிர வேறு எதைத்தான் கேட்டாலும் சிங்களம் அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கியே கொடுக்க ஆயத்தமாக உள்ளது. தம்மால் உடன்பட முடியாததைக் கேட்பதுதான் பயங்கரவாதம் என்பதே ஒவ்வொரு இனவாத அரசினதும் கொள்கையாகும்.

Sunday 19 October 2008

வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!

வளர்ந்த நம்கூடுகள் பிரிந்து நாம் தவிக்கின்றோம்
வானக் கூரையில் வாழ்வை நாம் களிக்கின்றோம்
வீதியில் வாழ்கை விதி எமக்காம்
ஊர்கள் தொலைத்தவர் ஊர்வல வீதியில்
எம் வாழ்கைக்கு கூடு ஒரு மரநிழல்தான்

கோழிவிலையை முட்டைக்கு கேட்கிறார்கள்
ஒருகை அரிசிக்கு வாழ்கை தவிக்கின்றது
பசி ஒன்றுதான் எமக்கு கடவுள் - இல்லை என்றால்
நாம் வாழ்ந்த வாழ்கை நினைவுகளே எமக் கொல்லும்
அதை அருகில் வரவிடாத, கூடவே எம்மோடு
வாழும் பசிதான் எமக்கு கடவுள்.

பட்டினியும் எதிரி எம்மேல் ஏவிவிட்ட ஏவுகணை
மிகை ஒலிக்காலன் வருகையில் அண்டமும் அதிரும்
குண்டுகள் தான் இறைத்தால் அணுவிலும் உயிர் சிதறும்
பசியில் வாடிக்கொண்டிருந்த உயிர்கள் சாவூரில் தஞ்சம் பெறும்
மனித உழைப்பின் தேட்டங்கள் யாவும் கற்குவியல்களோடு போகும்.

எங்கள் கண்ணீர் உங்கள் நெஞ்சைத்தொட
தடை செய்கின்றது அம்மாவின் அரசியல்
இங்கே பிணங்களைக் குவிக்கின்ற
சிங்களர் கொடுமைக்கு
ஆசீர்வாதங்கள் இவைதான் அல்லவா?

கடைசித்தமிழனின் உயிர்வரைக்கும் காவுகொடுக்கப்படும்
போரின் விலையிலும் புலிஅழிப்பு சிங்களத்திற்க்கு பெறுமதியானது.
ஆனால் அம்மாவின் அரசியலுக்கும் இது எப்படி பெறுமதி
கொழிக்கும்? புரியாதபுதிரே இது இன்றும் எமக்கே.

பச்சைத்தமிழன் வாக்கிலே அவர்
பதவியை வாழ்பவர் அல்லவா?
அவர்களின் உணர்வினையே தூசுக்கா மதிப்பதா?
காசுக்கா அழுகின்றது தமிழினம் இங்கே
உரிமைவாழ்விற்க்கு அல்லவா?
உங்கள் தோள்களுக்கும் பணி இதில் இல்லையா?

Friday 17 October 2008

வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!

உங்கள் பாசத்தில் பழுதைக் காண்பதல்ல எங்கள் நோக்கம்,
அநாதைகள் துன்பத்தை ஆதரித்த உங்கள் தோள்களை
உயிர் பிரியும் வலியில் கூட மறக்கும் இதயங்கள் அல்ல நாங்கள்!
புலியைக் கொல்ல பழிகிடக்கும் கட்சியுடன் சேர்க்கை வைத்தீர்கள்
அதன் விலையாக விளையும் துன்பங்களின்
வலியை அடைகாக்கின்றோம் பாசக் காணிக்கையாக,
ஒருவன் பழி இன்று வரை சொன்னான் இல்லை ஈழத்தில்
உண்மை அன்பிற்க்கு உயிரைக் கொடுத்தல்கூட ஈடு இல்லை அல்லவா?
தன் கையைக் கொண்டே ஈழத்தின் கண்ணைக் குத்துவது போன்றது அல்லவா?
அம்மா கூட்டணியில் உங்கள் கட்சிப் பங்கு சுமக்கப் போகின்ற பாவம்.
உங்கள் கட்சியின் உயிர் மூச்சாய் விளங்கும் கொள்கையில்
மலிந்த அரசியல் செய்யும் உங்கள் கூட்டணியின் போக்கு
உங்கள் கட்சி உறவின் முக்கியத்துவத்தை
காலில் ஒட்டிய தூசிற்க்கு மதிக்கின்றது என்பதை அல்லவா காட்டுகின்றது.
பேச்சுக்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத உங்கள் முக்கியத்துவத்தின் எடை
அதிகாரத்தில் அம்மாவின் அலங்கோல ஆட்சியை நெறிப்படுத்தவா முடியும்.
நாளும் சாவுகளைக் காணும் மண்ணின் வாழ்விற்க்கு போராட
சிறியளவு காலம் ஆவது உங்கள் உள்ளூர் பிர்ச்சினைகளை மூட்டை கட்டி
எங்களுக்காக மட்டும் உங்கள் அரசியல் உழைத்திட வேண்டுகின்றோம்.


தொடர இருக்கும் பதிவு “ அம்மாபக்தி தமிழன் முதுகுக்கு கத்தி!”

Thursday 16 October 2008

அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!

ஒரு அப்பாவியை கொலை வெறியுடன் ஒருவன் தக்குதல் செய்துகொண்டு இருக்கின்றான், இவ்வேளை இன்னொருவன் தாக்குதளாளிக்கு ஆயுதம் தருகின்றான், வேறொருவன் அந்த தாக்குதலை நிறுத்த வருகின்றான்.
நியாயம் பேசவென்று இன்னொரு குரலும் அங்கே சேருகின்றது,
ஆயுதம் வளங்கியதை குற்றம் என்று என்ன அடிப்படையில் குற்றம் காண்கின்றதோ அதே அடிப்படை சமரை நிறுத்தியதும் நியாயம் என்று காணும் அல்லவா?
ஆனால் அப்படி இல்லாமல் இருவரையும் குற்றவாளிக் கூண்டி ஏற்றுகின்றது இந்த நியாயத்தின் குரல் இதுதான் வெற்றுத் தோட்டாக்களின் அரசியல் பாரம்பரியம் என்பது.

மத்தி போருக்கு உதவுவதால் அதனுடன் பங்கெடுக்கும் கலைஞ்ஞர் கட்சியை கண்டிக்கின்ரார் வைகோ, ஆனால் புலிஅழிப்பை முழுமுதற் கொள்கையாக கொண்டுள்ள கட்சியில் அவர் பங்கெடுக்கின்றார். யார் கட்சி மிகப் பெருந் தீங்கை ஈழத்திற்க்கு தாரை வார்க்கக் காத்திருக்கின்றது என்பதை உணரமாட்டாதவரா அவர்.

ஈழத்திற்க்காகத் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் அதன் முதற்க்கட்ட காணிக்கையாக செய்ய வேண்டியது கலைஞ்ஞர் ஆட்சியின் பலத்தில் பங்கெடுப்பது ஒன்றுதான், இந்த ஒரு வழியினூடே ஈழத்திற்க்கு விடிவைப் பறிப்பிக்க முடியும் என்றே நாம் நம்ப வேண்டி உள்ளது.

ஈழத்தின்பால் நல்ல உள்ளத்தைக் கொண்டிருப்பவர்களின் பொறுப்பு என்பது ஈழத்தின் விருப்பங்களுக்கு தோளை வளங்குவதே தமது உண்மையான நிலைப்பாட்டிற்க்கு சாட்சியாகும் செயற்பாடுகளாகும். அப்படி அல்லாமல் தம் விருப்பங்களை ஈழத்தின் தோள்களில் சுமப்பித்தல் என்பது பச்சைப் பித்தலாட்டத்தனமான நிலைப்படுகளாகும்.

ஜெயாவின் புலிஎதிர்ப்பு என்ற கொள்கை பல கள்ளங்களின் கலவையால் ஆனது.
ஈழத்தின் ஒட்டுமொத்த உயிரையும் கொல்லத்தக்க பாவத்தால் செய்யப்பட்ட கொள்கைதான் இந்தியாவின் புலிஎதிர்ப்புக் கொள்கை. அந்த மக்களை வெறுக்கின்ற ஜெயா இதையே தனது அதிகார போசிப்பிற்க்கு கருவியாய் பயன்படுத்துவது தமிழிச்சியாய் இராத அவ மனசாட்சிக்கு உறுத்தல் தராத விடயம்.
ஈழத்தின் ஒவ்வொரு இதயத்திலும் தன் உயிரினும் மேலான இடத்தில் வாழ்வது புலிமேல் இயற்கையாக வந்த பாசம் இதை புரியாதவராக ஜெயா இருப்பவர் என்பது அல்ல எங்கள் எண்ணம். தமிழ்உணர்வு என்ற கோட்பாடு மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையே அவரிடம் புலிஎதிர்ப்பு என்ற கொள்கையை இனிப்பாகக் காட்டுவது. எனவே ஈழத்தமிழர்கள் தமது வாழ்வின் ஆதரமே புலிகள்தான் என்ற உண்மை ஜெயாவின் முனால் உடைத்துக் காட்டப்படும் போது ஜெயாவின் அடிமனதுக்குள் இருந்து வந்த இரகசியஉண்மை தமிழ் உணவிற்க்கு ஆகாத போக்கு என்பது வலிய தானே வெளிப்படும்.

தேர்வு 1. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை ஆதரிக்கின்றார்கள்.
தேர்வு 2. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை வெறுப்பவர்கள்.

தேர்வு 1 உண்மையானால் ஈழத்திற்க்கு சிங்களத்தை ஒத்த ஒரு எதிரி ஜெயா என்பது முடிவாகிறது.
தேர்வு 2 உண்மையானால் ஜெயாவின் போக்கு ஈழத்திற்க்கு இணக்கமானதாக இருக்கும்
தேர்வு 1 ,2 ம் முடிவு தெரியாத போது முடிவு இதுவாகத்தான் இருக்கும்.
ஈழத்தின் நன்மைகளை இதுவரை சுமந்து அறியாத ஜெயாவின் அரசியல், மக்கள் துன்பங்களுக்கு பாராமுகமாக இருந்துவந்த போக்கும் ஈழத்தை அடிமனதில் இருந்தே வெறுப்பவர் என்பதே வெட்ட வெளிச்சமாகின்ற உண்மை!

Friday 10 October 2008

உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?

தமிழீழம் பிரசவிக்கும் திருநாளும்,
எம்தாய்க்கொடி உறவுகள் எமை அணைக்கும் திருநாளும் -வரலாற்றில்
தமிழர் மகிழ்ச்சிக்கடல் பொங்கி எழவைத்த பொன்நாட்க்கள்
செய்தியாய் வரும் தமிழ்நாட்டு எழுச்சியிலே
எம்மண் பட்ட மரங்களில்கூட புத்துயிர் துளிர்க்கின்றது.
உடைந்து கற்குவியலான மாடங்களில் கூட
தெரிகின்றது மீள் புத்தமைப்பிற்க்கான தவிப்பு,
செங்குருதி நீர்பாய்ச்சி நாம் வளர்த்த உரிமைப்பயிர்
சூரிய உதயதயம் அதை உறவாய்க் கொண்டு விட்டது
உலகமே நீ இனி ஒன்றாய் வரினும் உன் பகைக்கு நாம் இனி அஞ்சமாட்டோம்!

Monday 6 October 2008

இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!

நூறுபேர் கொண்ட கூட்டத்தில் 99 பேருக்கும் உடன்பாடான ஒரு கருத்தை ஒருவன் பழித்துப் பேசுகின்றான் என்றால் அவன் கருத்தை கழிப்பு என்று ஒதுக்கிவிடலாம். ஏனெனில் விளக்கம் மீதிப்பேருக்கு வேண்டியதும் இல்லை, முரண்பாட்டாளனுக்கும் உபயோகப்படப் போவதும் இல்லை!
இதனால்த்தான் உங்கள் பக்கங்களுக்கு (புலித்துவேசிகளின்) பதில் எழுதுவதானது விழலுகு இறைக்கும் நீர் என நினைத்துதான் எவரும் அதை செய்ய முயற்சிக்க வில்லை
புலிவெறுப்பு ஒருவன் உள்ளத்தில் குடிபூர வேண்டும் என்றால்,
ஒன்று தமிழ் உணர்வுக்கு ஆகாதவனாய் இருத்தல் வேண்டும் அன்றி
ஊருக்கு சோறுபோடும் ஒரு தவத்தை, தான் உணவாக் உட்கொள்ளும் புழுவைப் போன்றவனாய் இருத்தல் வேண்டும்.
புலித்தூசிப்பு என்பதற்க்கு அடிப்படையாய் ஒரு கொள்கை இருந்தது கிடையாது,
பன்முக அடிப்படை கொண்ட இதற்க்கு இருக்கும் ஒரே ஒற்றுமை புல்லித்தூசிப்பு ஒன்றில் மட்டுமே!
ஒரு தளம் சொல்லும் புலிக்கு பின்னால் மக்கள் கிடையாது என்று.
இன்னொன்று இத்தனை அழிவுகளுக்கும் புலிக்கு பின்னால் நிற்க்கும் போக்கு ஒன்றுதான் பொறுப்பு என்று மக்களை நோக்கி.
ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகின்றது அது புலிஎதிர்ப்பு கொள்கைக்கு மனிதாபிமானத்தின் உறவு ஏழுகடல் தூரம் கொண்டது.
இரயாகரன் புலிஎதிர்பிற்க்கு கொக்கொகோலா பானம் வரை போனது கலியாணவீட்டில் சீப்பை ஒளிப்பதை போன்ற ஒரு முயற்சியே!
எல்லாப் போரட்டங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை பயங்கரவாதம்தான். இவையே உங்கள் கதையளப்பிற்க்கு கருவாகின்றமைதான் எமக்கு விசித்திரமாகின்றது.
இரத்தம் ஓடுகின்ற வீதிதான் போராட்டத்தின் பாதை இவையே உங்கள் விளம்பரத்துக்கு சாட்சி ஆக்குகின்றீர்கள், கருத்தியல் வறுமையின் பரிதாப்படத்தக்க எல்லை.
போராட்ட அமைப்பு மக்களவலங்களை தடுக்க முடியாமை போராட்ட அமைப்புக்களுக்கு இருக்கும் இயல்பான குறைபாடு, ஜனனாயகம் என்ற பெயர் உபயோகத்தில் சக அரசுகளிடம் பிச்சை எடுத்து இந்த கொடிய செயலைச் செய்யும் அரசுகளை நோக்கி எய்ய வேண்டிய கணை இது ( என்ன செய்வது கொடுப்பவனை நோக வைக்கக் கூடாதே )
கடல் தண்ணியை எடுப்பது போல் அரசின் ஆயுதபலம்
உலக அரசியல் அதன் கைப்பொம்மை
ஆள்வலியோ எம்சனத்தொகைக்கு ஈடானது
இருந்தும் சிங்களம் வாகை சூடுவது வாய் வார்த்தைகளில்த்தானே
முப்பது ஆண்டுகளுக்கும் பழகிக்போன வாசகங்கள்தானே!
உங்கள் வாசிப்புக்களும் இதுபோலத்தானே!

Saturday 4 October 2008

புலிகளின் தோல்விகளால் அச்சமடையும் இந்தியாவின் புலிஎதிர்ப்பு அரசியல் கூடாரங்கள்!

ஒரு சிங்கள இனவாததிக்கு ஈழத்தமிழரின் மேல் இருக்கத்தக்க வெறுப்பிற்க்கு ஈடான வெறுப்பை கொண்டிருக்காத ஒருவனுக்கு காரணங்கள் ஆயிரம்தான் இருந்தாலும் கசப்பு மிகுதியான ஒரு அரசியலாகவே புலிஎதிர்ப்பு என்பது அவனுக்கு இருக்கும்.
இல்லை என்று கையை உயர்த்த எவராவது வந்தால் நான் அவர்களிடம் கேட்க்கப் போவது, சரி இவர்கள் ஈழத்தவர்களுக்கு எதிரி இல்லை என்று சொல்கின்றார்களே அன்றி, ஈழத்தவர்கள் சொல்கின்றார்களா எதிரியின் கூட்டணியில் இல்லாதவர்கள் இவர்கள் என்று, ஆக மகிந்தா கூட தமிழ் மக்களை நோக்கி சொல்லிக் கொண்டிருபது போல்
இவர்களும் சொல்லிக் கொண்டிருப்பவை அதே வகுப்பிற்க்குள்தான் வரும். அழிவுவெள்ளத்துக்குள் முக்குளித்துக் கொண்டிருக்கும் இனத்தின் பச்சையாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்காக ஆவது இவர்கள் குரல்கள் ஒலித்திருக்கின்றாதா எப்பவாவது? அந்த நேரங்களில் கூட மக்கள் நலன்களுக்கு வரும் காயங்களை விட சிங்கள அரசிற்க்கு வரும் காயங்களின் கவலைதான் இவர்களுக்கு மிகுதியான அக்கறையுடன் கூட விளங்குகின்றது. எனவே இவர்கள் எப்படி ஈழத்தவரின்மேல் பகை இல்லை என்று சாதிக்க முடியும்?

உலகத்தின் ஆதரவு இல்லாமல் புலியை அழிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த சிங்களம் ஆள்பிடிக்கும் முயற்சியின் பொருட்டு புலிவேறு மக்கள் வேறு என்ற போக்கை தமது போர் கொள்கைக்கு கொடி ஆக்கினார்கள்.
83 இல் வெறும் இருபதுவரையான ஆள் வலியுடன் இருந்த புலிப்படையின் இராணுவத் தாக்குதலுக்கு தமிழர் தேசத்தை எங்கும் மனிதப் பிணங்களின் காடாக்கினார்கள். ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாய் நான் ஒரு சிங்கள மக்களின் ஜனாதிபதி அவர்களின் உணர்வே எனது உணர்வுமாகும் என்று முழங்கினார் J R ஜெவர்த்தனா, மட்டும் அல்லாமல் தமிழர்களுக்கு போர்தான் பிடிக்கும் என்றால் போருக்கும் நான் தயார் என்று போர் பிரகடனமும் செய்தார்?
போர் செய்யும் இலட்சணம் இதுதானா அப்பாவிகளுடனா?
இன்றய நிலவரம்களின் அடிப்படையில் அவர்களின் கணக்கில் புலிஆட்டம் அடங்கிவருவதாக கொள்ளும் அவர்களின் மனக்கணக்கின் பாதிப்பால் இதுவரைகாலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இனவெறிப்பிசாசு மெதுவாக வெளிச்சத்துக்கு வருகின்றது,
ஜனனாயக வேசம் இதுவரை போட்டிருந்த இந்தப் பிசாசை ஈழத்தின் விடிவிற்க்கு வழியாக காட்டிகொண்டுவந்த இந்திய புலிஎதிர்ப்பு கட்சிகள் அது தனது சொந்த வேசத்தை காட்டும் நிலைமையை அடைந்தமையை இட்டு கலக்கம் கொள்கின்றன ஏன் என்றால் உடைபடப் போவது ஈழத்தில் பாசம் என்ற குட்டு மட்டுமா? தமிழ் உணர்வில் பாசம் என்ற குட்டும் அல்லவா?

Friday 3 October 2008

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்? - தங்கபாலு

இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்.இந்தியாவில் ஒரு கட்சிதான்இ அதுவும் காங்கிரஸ் கட்சிதான் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. ராஜீவ் காந்தியை பறிகொடுத்திருக்கிறோம். இதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும்.மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று சில கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தவறு.தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறோம். பிரதமரும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்திய மீனவர்கள் இந்திய எல்லையில் மட்டுமல்ல இலங்கை எல்லையிலும் மீன்பிடிக்கலாம் என்ற உரிமையையும் பிரதமர் வாங்கியிருக்கிறார். அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும். சுய நிர்ணய உரிமை ஆட்சியிலும், அதிகாரத்திலும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் ராஜபக்சேவிடம் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எனவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மிக பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸும், மத்திய அரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. அதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களை பொருத்தவரை மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கலாம். அப்படி அனைத்து கட்சிகளும் வந்தால் நாங்களும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து இந்த பிரச்சனையில் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார், கே.வி.தங்கபாலுநன்றி யாகூ தமிழ் (மூலம் – வெப்துனியா (தூக்கல் யாழ்களத்தில் இருந்து)


ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்?
சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சிகள் வளங்குகின்றோமே!
புலிகளின் கடற் செயற்பாடுகள் பற்றி தகவல்கள் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
ஆயுதங்கள் மிக நவீன ராடர்களும் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
சிங்களக் காடையர்கள் அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு கொல்லும் போது ஒரு சொல் கண்டனத்தை ஆவது அரசுக்கு எதிராக விட்டு இருக்கின்றோமா?
யாரைப் பார்த்து சொல்கின்றீர்கள் நாம் ஈழத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று?
இலங்கை அரசின் போக்கில் ஈழத்தவர்களை பாதுகாக்கும் பணி எந்த வகையானதோ எம்முடைய கொள்கையில் கூட அதுவே பொருத்தமாகப் படுகின்றது. அதனால்த்தான் நாமும் ஈழத்தமிழரின் சார்பின் எதைப் பேசுகின்றோமோ அதுவே சிங்கள அரசின் பேச்சாகவும் ஈழத்தமிழர்களின் சார்பில் இருப்பதர்க்கு காரணமும் ஆகும்!

Wednesday 1 October 2008

புலத்தில் பொங்கி எழும் மக்கள்கடல்!

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வாறு செயல்வடிவப்படுத்துவதைத் தவறவிடும் பட்சத்தில் அவர்களின் நடுநிலைமையும் நீதித்தன்மையும் கேள்விக்குரியானதாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் சார்பில் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
32 மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.