Tuesday 27 January 2009

எரிமலை ஒன்றின் குமுறல். காணொளி






கடல்கொண்ட பகைக்கு வில்கொண்ட விஜஜன் போல்
பொய்கொண்ட படைக்கு சொல்கொண்டு பேர் வென்றவன் T. றாஜேந்திரன்.
இவன் சொற்பா செவி இன்பத்தின் எல்லைக் கலை
இவன் தமிழற்கு என்றும் உடையாத கல்லணை.

Sunday 18 January 2009

திருமாவின் தவம் வேண்டாமே ஈழத்திற்க்கு!

சாவிழிம்பில் வாழ் இனத்தின்

இழவில் கட்சிப்போட்டி அரசியல் செய்கின்ற

தாய்த்தமிழ் நாட்டில் வாழ் திருமா,

ஊர் உலைவைத்து உண்ணி அரசியலர் முன்னே,

உன்னைத் தொலையவைத்து உண்ணும் ஈழத்தை அநாதையாக்காதே,


பசியில் உன்னுயிர் வாடுகின்ற கொடுமை

சிங்களவன் குண்டு எம்தலையைப் பிடுங்குவதைவிட வலிக்கின்றது,

நேசம் வைத்த பாவத்திற்க்கு சிலுவை நீ சுமப்பது எமக்கு பிடிக்கவில்லை,

எம்மினம் மொத்தத்திற்க்கும் நாசமே வந்தாலும், முடிகின்ற போதும்,

உன்கண்ணீரையே எம் இதயத்தால் சுமக்க முடியவில்லை,


எம் வேண்டுதல் அரச அதிகாரம் கொண்டு வரவில்லை உன்னிடம்

பிள்ளையின் பாசம் தாயிடம் வரும் உரிமையோடு வருகின்றது,

வேண்டாம் உங்கள் பசித்தவம் தீயில் எரிகின்றோம் உணர்வால்,

நீ வாழவேண்டும் என்று ஈழத்தின் சுயநலம் பிச்சை கேட்கின்றது உன்னிடம்.


Sunday 11 January 2009

இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது;

இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது,
இலங்கைவாழ் இந்திய தமிழர் ஐந்து இலட்சம் பேரின் மனித உரிமைகளைகால்நடைகளின் உரிமைகளாக கருதி அவர்களை நாடுகடத்திய பண்டா, சாத்திரி ஒப்பந்தம் அதை செய்வத்ர்க்கு காரணமான இந்திய அரசியல்கலாச்சாரத்தை போற்ற வேண்டிய தமிழனின் கடமையை, இந்தியாவின் நாட்டுப்பற்று என்று சொல்லலாமா?
தமிழ்நாட்டு மீனவனின் வயிற்றில் நெருப்பைக் கொட்டி சிங்கள உறவுக்கு தாம்பூல தெட்சனயாய் கச்சதீவை தாரைவார்த்த மத்தியின் அரசியல்கலாச்சாரம்
ஒவ்வொரு தமிழின உணர்வாழனையும் நாட்டுப்பற்றுணர்வு பொங்கி எழச்செய்யும் அல்லவா?
தன் கடலெல்லையை பாதுகாக்க கண்ணிகளை சிங்களம் விதைத்த போது, மரணத்தை விலைகொடுக்கின்ற பாதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்று தெரிந்துமே, கண்டனத்திற்க்கு பதிலாக பாராட்டை பதிலளித்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழக மீனவனின் எலை மீறும் குற்றத்திற்க்கு சிங்களவனின் தீர்ப்பாகும் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றது என்பதல்லவா வாய்மொழியா கருத்தாக நிற்க்கின்றது. இத்தகைய பச்சைப் பாதகத்தை இந்திய நாட்டுப்பற்று என்று நாம் கொண்டாட வேண்டாமா?
தலைப்பாகைப் பிரச்சினைகே உரியநாடுகளுடன் உயிர்நோகக் கத்தி தம் கோபாவேசத்தை வெளிப்படுத்தியவர்கள், நாளும் கரையொதுங்கும் தமிழ்மீனவனின் உயிர் பிரச்சினைக்கு என்ன செய்தார்கள்? புத்தன் பெயரில் என்ற திரைப்படமே அயல்நாட்டு உறவிற்க்கு ஆகாதது என்று தடை செய்த இந்தியதேச பெருந்தன்மைக்கு சிங்களமோ பிணங்களால் கைமாறு செய்கின்ற இந்த அறநெறியைப் போற்றி சிங்களத்திற்க்கு, மேலும் மேலும் தொண்டு செய்யும் இந்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழனின் பெருமைக்குரியது என்று சொல்வதுதான் இந்திய நாட்டுப்பற்று அல்லவா?
எனவே இத்துணை சுகாதாரமான அரசியலை தமிழ்நாட்டுக்கே படியளந்த மத்தியின் அரசியல்களாச்சாரம் ஈழத்தவனின்பாட்டில் மட்டும் பங்கெடுக்காதா? ஈழ்த்தவனின் நெஞ்சில் குத்துகின்ற ஒவ்வொரு குத்தும், அப்பாவித்தனமான தமிழ்நாட்டு தேசவிசுவாசத்தின் செஞ்சில் காலை உதைத்து குத்துகின்றது. இந்த துரோகத்தனத்தைத்தான் நாட்டுப்பற்று என்று தமிழனே கொண்டாட வேண்டுமாம்.
புலி அழிவை கொண்டாடுகின்ற போக்காளர் நாட்டுப்பற்றால் என்று திரிக்கின்றார்கள், புலிப்பகையை சம்பாதித்த வகையை, அதன் உண்மையை இருட்டுக்குள் வைக்கின்றார்கள். புலியின் அழிவுக்கு பழிகிடக்கும் தமது ஆசையை நியாயப்படுத்த புலி எல்லாருக்கும் வேண்டாதவர்களாக நிறுவல்கள் செய்ய தலைகீழாய்
நிற்கின்றார்கள், இடையனின் மேல் கொண்ட கோபத்தை முதலையின் வாயால்தான் பழிமுடிக்கலாம் என்ற அடிப்படையால், ஒவ்வொரு வெள்ளாடாக இரையாகிக்
கொண்டிருக்கும் போதும், முதலைக்கே சார்பாக வாதிடும் போக்கில் உறுதியோடு இருக்கின்றார்கள். சிங்களத்தலைமையே தமிழ் இனத்தித்திற்க்கு அடைக்கலம் என்று நம்பவைக்கின்ற முயற்சி, அடிப்படையே இல்லாத வெறும் புலி ஒழிப்பை மட்டுமே சாதிக்க வல்லது என்பது எவரையும் அதிசயிக்க வைக்கின்ற ஒரு உண்மை அல்ல.
புலியே உருவாகியிராத போது, சிங்களத்திடம் தமிழின உரிமை கோரலுக்கு, என்ன பதிலோடு இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்கின்ற போது,
அதற்க்கான பழி புலிகளின் தலையில் போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. புலி எப்போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதோ, அப்போதே உருவான சிங்களச் சார்பான இவர்களது போக்கு, சிங்களத்தை மந்திரித்துவிட்டா மனம் மாற்றியிருக்க முடியும்?. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற யதார்த்த அடிப்படையான போக்கு, எனவே என்ன அடிப்படை உங்களிடம் இருக்க முடியும், இப்போது மக்கள் கூட்டத்தை சிங்களத்துக்கு பின்னால் நிற்பதாக கட்டுரைகளில்
முடிச்சு போடுவதற்க்கு?
மக்கள் புலியின் ஆட்சிக்குள் சிக்குப்பட்டு அவஸ்த்தைப் படுகின்றார்கள் என்றால் அந்த திருவாக்கை சிங்களத்தின் வாயால்தான் ஏன் வாங்குகின்றீர்கள்? நேராகவே தமிழ்நாட்டுக்கு புலம்பேர்ந்தவர்களைக் கேட்க்கலாமே! சசப்பான உண்மைகளைவிட உங்கள் செவிகளுக்கு இனிப்பான பொய்களைத்தான் உங்களின் பத்திரிகைக்கு செய்திகளாகுமா? பாதிக்கப்பட்ட இனத்துக்கு தன் தேவையை தீர்மானிக்கின்ற பொறுப்பு இருக்கின்றதா? பொறுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இருக்கின்றதா அவன் தேவை என்ன என்று எடுத்துச் சொல்கின்ற பொறுப்பு?
போராட்டம் அகிம்சைவழியில் இருந்திருந்தால் தமது ஆதரவு என்றுமே அதன் பக்கம் இருக்குமாம். படு பச்சையாய் மக்கள் படுகொலைகளை இஸ்ரேல் செய்யும் போது தனது இஸ்ரேல் ஆதரவுப் போக்கை படு பச்சையாய் அமெரிக்கா காட்டிக் கொண்டே இருப்பதானது ஜனனாயகத்தின் யோக்கியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? எனவே அரசியல் சூதாடிகள் யார்பக்கம் என்பதற்க்கு தர்மத்தின் பாத்திரம் வேறு குட்டு வாங்குகின்றதா? எம்போராட்டத்தின் துவக்கத்தில் ஆயுதமும், பயிற்சியும் வளங்கிய உங்களின் அன்றைய காலப்பகுதி ஏன் காந்தியையும், அகிம்சைப் பாரம்பரியத்தையும் மறந்தது. இல்ங்கை இந்திய ஒப்பந்தத்தில் நடுவர் பணியேற்ற உங்களுக்கே வன்முறையே தீர்வை திணிக்கச் செய்ய ஒரு வழியாக இருந்ததே அப்போது கூட நினைவிற்க்கு வரவே இல்லையா காந்தீயம்? அன்றைய ஒப்பந்தம் இன்று எவளவு இலகுவாக கிளித்தெறியப் பட்டும், முப்பதுவருட போராட்டத் தவத்தை கூட்டிக்கொடுத்த முயற்சி என்பதை இன்னுமா ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன்க்களால்? இடிகூட காதில் வீழ்ந்தாலும் அறியா செகிடனின் காதில் சொல்லி கேட்டு வாங்கு என்று சொல்லி அனுப்புபவன் மோசடி அல்லவா? எம்மை வாழாது இருந்து சாகச் சொல்லும் ஆசையின் நிமித்தம் ஆல்லவா இப்படிக் கூறுவது.

Saturday 10 January 2009

இலங்கைப் படையின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சலில் பிதற்றும் இந்தியா!

மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்'
[10 - January - 2009] [Font Size - A - A - A]
சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும்.
இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட்டிக்கொண்டிருக்கும் வெற்றிகளால் உலக வல்லரசு ஸ்தலத்தில் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா,பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் இந்தியாவும் பாதுகாப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் காழ்ப்புணர்வும் கடும் பொறாமைக்கும் உள்ளாகியிருப்பதையே அண்மைக்காலங்களில் அந்த நாட்டு அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட சிறிலங்கா பிரச்சினை சம்பந்தப்பட்ட அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிப்படையாக கூறினால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் மேற்படி வல்லரசுகளால் பெற்றுக்கொள்ளமுடியாத பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் குவித்துக்கொண்டிருப்பதை மேற்படி வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் அடிப்படையில் சிறிங்காவில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம் பயங்கரவாத ஒழிப்புப்போரில் அரசபடையினர் பெற்றுவரும் மாபெரும் வெற்றிப்பயணத்தைத் தடுப்பதன் மூலம் வல்லரசுகளால் இயலாத பயங்கரவாத ஒழிப்பு வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் பெற்றிருப்பதை உலகத்திற்கு மறைக்கவும் அதேவேளை, அந்த நாட்டுப்பாதுகாப்புத்துறைகள் தொடுத்துவரும் பயங்கரவாத ஒழிப்புப்போர்களில் வெற்றிபெறமுடியாத இயலாமை பற்றி உலகம் ஏளனம் செய்வதைத் தவிர்ப்பதற்குமாகவே மேற்படி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற வல்லரசுகள் முயன்றுவருகின்றன.
இதற்காகவே புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தீட்சண்யமான தீவிரமான முறையில் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்படி வல்லரசுகள் அழுத்தங்களையும் அறிக்கைகளையும் விடுக்கின்றன. யுத்தத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும் சிறிலங்கா தொடுத்திருக்கும் போர் தமிழனத்தை ஒழிப்பதற்கான போர் எனவும், தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனித உரிமைமீறல்கள் நடந்துவருவதாகவும் எனவே யுத்தத்தை நிறுத்தி புலிகள் இயக்க பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும் படியும் தெரிவிக்கும் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் மேற்படி வல்லரசுகள் தொடர்ந்து விடுத்தவண்ணம் உள்ளன.
இவ்வாறு அந்த நாடுகள் தாம் அழுத்தங்களை கொடுப்பதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு,ஐக்கிய நாடுகள் சபை ,செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் சர்வதேச பொது அமைப்புகளையும் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு தூண்டிவருகின்றன. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனிதஉரிமைகள் நிகழ்ந்துவருவதாகவும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்து வறுமையில் உழலுவதாகவும், இறந்துகொண்டிருப்பதாகவும் அறிக்கைகளை விடுத்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. அத்துடன் பயங்கரவாதிகளுடன் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தும்படியும் உடனடியாக அரசியல் தீர்வு காணும்படியும் வற்புறுத்துகின்றன. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜீ.எஸ். பி. பிளஸ் திட்டத்தின் கீழான சலுகைகளைப் பகடைக்காய்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்த்தியுள்ளன. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிடும் என்பதே அந்த நாடுகளின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறே ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைகள் சபை மற்றும் அமைப்புகளும் சிறிலங்காவுக்கு அறிக்கைகளை விடுத்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மனிதப்பேரழிவைத்தடுக்கும் படியும் புலிகள் இயக்கம் பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும்படியும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்கும்படியும் கூறிவருவதுடனும் இல்லாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை மூலமான உதவிகள் நிறுத்தப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துவருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவும் சிறிலங்கா அரசிடம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும்படியும் அதிகாரப்பகிர்வு மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் கூறி வருவதுடன் இதுவரை வழங்கிவந்த பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை மட்டுப்படுத்தியும் , சில உதவிகளை முற்றாக நிறுத்தியும் உள்ளது.இவ்வாறு பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை ஐக்கிய அமெரிக்காவும் படைகளாக நகர்த்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்தும்படியும் சமஷ்டி முறைமூலம் அல்லது சமஷ்ட்டியை ஒத்தமுறைமூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் சிறிலங்கா அரசை வற்புறுத்தி அறிக்கைகளை விடுத்துள்ளது. பிரிட்டனும் அதன் பாராளுமன்றத்தில் சிறிலங்கா பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை தனியான பாராளுமன்றக்குழுவை அமைத்து அரசியல் தீர்வுக்கான அடித்தளங்களைக் கொடுத்து வருவதுடன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறிவருகிறது.
இவ்வாறு மேற்படி உலகின் முன்னணியிலுள்ள ஐக்கிய அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் மேற்கிந்திய வல்லரசுகளும் இந்தியாவும் சிறிலங்காவில் அரசபடையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் தீவிர யுத்தத்தை நிறுத்தி அரசபடையினர் பயங்கரவாத ஒழிப்புப் போரில் பெற்றுவரும் மாபெரும் வெற்றிகளைத் தடுக்க முனைகின்றன. உண்மையில் அந்தநாடுகள் செய்யவேண்டியவை யாதெனில் சிறிலங்கா அரசபடையினரிடம் பயங்கரவாதிகளை ஒழிப்புப்போரில் எவ்வாறு வெற்றிபெறுவது என்று பாடம் படிக்க வேண்டுமே அன்றி சிறிலங்கா படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பெற்றுவரும் வெற்றிகளைத் தடுக்க முயலக்கூடாது. இதன் மூலமே உலக பயங்கரவாதத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வெற்றிகாணமுடியும்.
லங்காதீப விமர்சனப் பகுதி: 08/01/2009


நன்றி; தினக்குரல்.

Sunday 4 January 2009

கடாரம் வென்ற சோழன் பெருமையை தோற்கடித்தது, நிகழ்காலத்து ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!

சந்தேகமே வேண்டாம் இதுதான் தமிழன்காலம் பொன் போல் போற்றப்பட வேண்டிய உண்மையான பெருமை நண்பர்களே!
போரில் வெற்றி தோல்வி என்பது ஒருவனுக்கு சேரவேண்டிய பெருமையை திசை மாற்றியதே இல்லை, கட்டபொம்மன் போரில் தோற்றான் ஆனாலும் இன்றும் அவன் தமிழன் பெருமைக்கு சின்னமாக எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அல்லவா?
ஆனால் ஒரு தவறான வழிகாட்டுதல்களினால் காட்டு றாயா என்ற பெயரை ஒரு குள்ளநரி அநுபவித்த வரலாறு தமிழன் புகழை சுமந்த ஏடுகளுக்கு அநுபவமாய் இருக்க வேண்டாம்! என்று இந்த விலைமதிப்பற்ற செயலைச் செய்தவர் யார்?
இந்த உண்மை உலகுக்கு உரித்துக்காட்ட ஆசைப்பட்ட வீராதி வீரர்கள் எல்லாம் இந்த குள்ளநரியின் இறாயதந்திரத்தில் வரலாறே இல்லாமல் போயினர்.
ஆனாலும் இன்னொரு மொழிகாறியால், அதுவும் பெண்ணால் இந்த குள்ளநரியின் தோல் உரித்துக் காட்டப்பட்டு விட்டதே! இது முன்னோரின் புகழ்மிக்க வரலாற்றுக்கு செய்த மிகப்பெரிய பணி அல்லவா? வாழ்க ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!
கலைஞ்ஞரின் தமிழ் பற்றும், பாசமும் அவர் உதட்டு வரைக்கும்தான் மீதி எல்லாம் பதவியாசையும் குடும்பமும்தான் என்ற உண்மை உலகுக்கு அறியவைக்க ஈழத்தமிழரின் சாம்பலைத்தான் மருந்தாக பயன்படுத்த வேண்டி இருந்தது ஜெயாவுக்கு, இந்தாலும் இது குற்றம் இல்லை உண்மையை உணர்த்த செலவு அதிகமானாலும் குற்றமாகாது, எனவே நன்றி அம்மா என் இதயம் நரிவளையாய் ஆகாமல் தடுத்தமைக்கு!
எனக்குத் தெரியும் பலவாசகர்களுக்கு என் வாசகங்களில் இதமிருக்காது.
இன்றைய கலைஞ்ஞரின் வெறுங்கை பிசையலுக்கு காரணமே ஜெயாதானே என்பார்கள், ஒரு வேளை ஜெயாவுக்கு இப்படி ஒருகாரணம் குற்றத்தில் இருந்து தப்புவிக்க மிகப் பொருத்தமான காரணமாய் இருக்க முடியும். ஆனால் கலைஞ்ஞருக்கு துளியும் பொருத்தம் இல்லாதது என்று உங்கள் மனசாட்சிக்கே தெரியும்.
அன்பையும் பண்பையிம் காட்டி ஒருவன் கதவை திறக்கவைக்கின்றான் வீட்டின் உள்வந்ததும் கத்தியை கழுத்துக்கு நீட்டி பொருட்களைக் கேட்கின்றான் அடபாவி! திருடா! இது என்ன அநியாயம் என்று அழுதால் மற்ற திருடர்கள் கேட்டால் கொடுப்பீர்கள் நான் கேட்டால் கொடுக்கக் கூடாதா? என்பதைப் போன்றதே!

சிறீரங்கன் என்ற சிரங்கும், இரயாகரன் என்ற குரங்கும்!

இந்தவகையான தரக்குறைவான சொற்பிரயோகங்கள்,
எழுத்துப்போர் செய்பவட்களின் மதிப்பிற்க்கு பொருத்தமானதே அல்ல இருந்தும் நான் ஏன் இதை செய்கின்றேன் என்றால்.
1. ஒரு எழுத்தாளன் எதிர்கருத்தை மதிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றான் என்றால் அவன் ஆற்றல் செத்துப்போன ஒரு சர்வதிகார சிந்தனாவாதி, எனவே இவன் கருத்து சுதந்திரம் பற்றி கதைத்தால் பேர்போன பித்தலாட்டத்திற்க்கு இவனே ஒரே உதாரணமாவான். இந்த வகைக்கு முகத்தை தருபவர்தான் இந்த இரயாகரன்.
வாசகரின் பதில்களை பதிவிலேயே விடமாட்டார் இப்படி ஒருவருக்கு தமிழ்மணம் தன்னில் இணைப்பனுமதி கொடுத்ததே ஊடகதர்மத்திற்க்கு உடன்பாடில்லாச் செயல்.
2. தனது கருத்துக்கு எதிரானவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் வசைபாடுவது என்பது இவர் தானே அடையும் சுயஇனப்த்தில் ஒருவகை. பன்னாடையில் துவங்கி வாயே கூசும் அருவருப்பான சொற்கள் எல்லாம் கொட்டுவார். இந்தவகைக்கு இரயாகரனுடன் சிறீரங்கனும் நிகராக வருகின்றார்.
ஒரு ஆயுதத்தின் பாதிப்பை பாவிப்பவனுக்கு அதே ஆயுதத்தால் கொடுத்தால்தான் உண்மையான வலியை உணர்வான், எனவேதான் இந்த சிறிய மாதிரி துளியாய் உபயோகித்தேன்.
சரி இனி விடயத்திற்க்குள் நுளைகின்றேன்.
ஈழப்பிரச்சினையின் உணர்வாளர்களை இரண்டாய் பிரிக்கின்றேன்.
1. புலியை முழுமுதலாக நம்பிய தரப்பு,
2. புலி முழுமுதல் வெறுப்பிற்க்கு உரியதாக இருக்கும் தரப்பு.
இங்கே புலியை உள்வாங்கிய தரப்பு கூட்டமாக ஒரேதிசையில் பயணிக்கின்ற இயக்கத்தைக் கொண்டிருக்கின்றது, ஆனால் மற்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திசைப் பயணமாக விளங்குகின்றது. ஷோபாசக்தி, இரயாகரன், சங்கரியார், டக்ளஸ்,
சிறீரங்கன், பிள்ளையான், கருணா, இந்தியா, சிங்களம் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம் அது அவசியம் இல்லை, இந்த ஒவ்வொன்றின் சிந்தனைப் பண்பும் ஏன் தனிமரமாக விளங்குகின்றதே. தீர்வு இல்லாத சமன்பாடுகள் ஒன்று இன்னொன்றோடு ஒத்துப் போக வழியே இல்லை என்ற பொதுவிதியை எமக்கு உணர்த்துகின்றது அல்லவா?
இவர்களது கொள்கைகள் தீர்வு இல்லாத சமன்பாடுகள்தான் என்பதை ஒருவருக்கு எதிரி ஒருவர் என்ற செயற்பாடுகள் மூலம் எமக்கு புரியவைக்கின்றார்கள் அல்லவா?

கொல்லப்பட்ட குழந்தைகளின் இரத்தம் சூடு ஆறவில்லை குற்றம் மறைக்கும் தொண்டு சிங்களத்துக்கு செய்தான் இரயாகரன் அன்று செஞ்சோலைப் படுகொலையில். குற்றம் தப்பவழி கொடுப்பது என்பது மீண்டும் இதே குற்றத்துக்கு வரவேற்ப்புச் செய்கின்ற செயல் என்பதை நாம் சொல்லியா இரயாகரன் அறியவேண்டும்.
கட்டுரைகள் கொட்டும் இரயாகரா சொல்லும் சுவர்ப்பல்லி போல் இருந்து கொண்டு யாருக்கு உபதேசம் செய்கின்றாய்? நாற்பது ஆண்டுகள் உன் பணிக்கு வயதாகிவிட்டது நான்கு பேராவது சேர்த்தாயா உன்பின்னால்?
இல்லைப் போர்ப்படைதான் வைத்துள்ளாயா வீரத்தை முன்னிறுத்திப் பேச!
ஏன் இந்த வெறும்வாய்ப் பேச்சு எல்லாம்!
கொஞ்சக்காலத்துக்கு பூமி தட்டை என்று சொல்லிக் கொண்டிருப்பவன் அவன் அறியாமை காரணமாகவும் இருக்கலாம் இல்லை தன் அநுமானத்தில் கொண்ட அளவுகடந்த நம்பிக்கை காரணமகவும் இருக்கலாம் ஆனால் வான்நாள் பூராகவும் சொல்லிக் கொண்டிருந்தால் காசுகொடுத்தாலும் சொல்லமாட்டான் ஒரு புத்தி சுவாதீனமாய் உள்ளவன். எனவே நீ ஒரு மனநோய் வியாதி இரயாகரா!

Thursday 1 January 2009

இந்திய அரசியல் கட்சிகளும், புலிஎதிர்ப்பு போக்கும்!

புலிஎதிர்ப்பை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் தேசப்பற்றை உயிர்மூச்சாக கொண்டவைகள்தானா?
தேசத்தின் உயிர்களை காவுகொள்ளும் நாட்டுடன் தோளில் கைபோடும் வெளிநாட்டு உறவுக்கு பொறுப்பான கட்சியே புலியை ஆதரிக்கும் பேச்சுக்கே தடை விதிக்கின்றது, ஆதரிப்பவர்களை சிறையில் அடைக்கின்றது.
ஆக இந்திரா குடும்பத்தின் கௌரவம் பெறும் முக்கியத்துவம் இந்தநாட்டு குடிகளான மக்களின் மரணங்களின் முக்கியத்துவத்தைவிட உயர்வானதோ இந்தக் கட்சிகளுக்கு? இத்தகைய யதார்த்தங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?
தம் கட்சிகளின் இருப்புக்கு ஆதாரம் தேடும் மூலவழிகளில் ஒன்றுதான் இந்திரா குடும்ப கௌரவத்துக்கு மாசுபடாமல் பாதுகாப்பது.
தன்மக்களைக் கொன்று கொண்டிருக்கும் அரசபடைக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் அவர்கள் அரசியல் நெறியே அவர்கள் தேசத்திற்க்கு செய்யும் துரோகத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த துரோகத்தனத்தால் அவர்கள் அடையும் நன்மை என்ன? நாடுசார்ந்த தீமையால் கட்சிசாந்த நன்மை அநுபவிக்கின்றார்கள். எனவே தேசத்துக்கு உண்மையான துரோகிகள் யார்?
புலியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கும் மனம் அறிந்த பொய், சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள் என்பது.
இந்த உண்மை உடைக்கப்படும் ஒரு செயலினாலேயே இவர்கள் கட்சிகளின் கொள்கை என்பது அனைத்திற்க்கும் அத்திவாரம் பொய்யே என்பது தன்பாட்டில் நிரூபிக்கப்படக்கூடிய உண்மை.
புலியை எதிரியாக பிரகடனம் செய்தவர்கள் புலிசாரந்த உண்மையான தகவல்களில் நடுநிலையோடு நடப்பார்களா? அதுவும் கேடு கெட்ட அரசியல்நெறிக்கு முனுதாரணமாக விளங்கும் இவர்கள் அரசியலமைப்பா?
தாயின் மானத்தில் பணத்தை செய்துகொண்டிருக்கும் ஒருவன் தாய்மை பற்றி பேச எவளவு யோக்கியமோ, அதுபோலவே இந்த தங்கபாலுவுவின் தேசப்பற்று பற்றிய யோக்கியமும்!