Tuesday 12 May 2009

எந்த எதிரியின் பகை ஈழத்திற்கு மோசமானது ஜெயாவின் பகையா? சோனியாவின் பகையா?

தமிழ் இனத்தின் இரத்த ஆறு கண்டு, கண்டம் தாண்டி வருகின்றது கண்டனங்கள்,
அண்டை நாட்டு சோனியா சொன்னாளா ஒரு வார்தைக் கண்டனம் தான் சிங்களம் மீது?
அப்படி கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஜெயாவின் பகையா மோசமானது திமுக விற்கு?

இன்றைய நிலமையில் வெளிநாட்டு உறவுகளே சிங்களத்தின் இனதுவேசப் பித்தத்தை வாய் வழியாய் வாந்தி எடுக்க வைக்கும் சக்தியுடன் ஒன்று திரண்டு நிற்கின்ற போது, அதை செயலற்றதாக்கி தள்ளி நிற்க வைக்கும் சோனியாவின் அரசியல் போக்கு, ஈழத்தவர்களுக்கு இணக்கமானது என்றா சொல்கின்றது திமுக?
ஜெயாவின் பதவிக்கும் இத்துணை அதிகாரமும், ஆற்றலும் இருக்கும் தன் பகையை நோக்கி இத்தகைய ஆபத்தை பிரயோகிக்க என்பதையா சொல்கின்றது திமுக?

அள்ளி, அள்ளி ஆயுதங்களும், படைப் பயிற்சிகளும், படை உதவியும் சிங்களத்திற்கு சோனியா செய்வது போல், ஜெயாவும் செய்யக் கூடிய அதிகாரமும், ஆற்றலும் அவர் பதவிக்கு இயலத்தக்கது என்பதையா திமுக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது? அப்படி என்றால் திமுக எமக்கு சார்பான கொள்கை என்றுதானே சொல்லிக் கொள்கின்றது, ஜெயா எமக்கு எதிராக இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னால், அதே பதவி வைத்துள்ள இவரால் எமக்கு ஆதரவாக இவளவு செயலையும் இவர்களால் ஏன் செய்ய முடியாதாம்?

எனவே சீமான், பாரதிறாயா போன்றோர் ஜெயாவை நம்புவது ஈழத்திற்கு துரோகமாம், ஈழத்தின் அழிவுகளுக்கு முழுமுதல் காரணமான சோனியாவை தூக்கின் கொண்டாடும் திமுகவின் கொள்கை ஈழத்தின் பால் கருணை கொண்ட கட்சியாம்.
உண்மையில் சோனியாவின் தோல்வியை விட திமுகவின் தோல்விதான் தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவன் மனதுக்கும் ஆறுதல் தடவும் மருந்து.
ஈழத்திற்கு விசத்தை ஊட்ட வருகின்ற பாதகியை அமுதூட்டுவதாக சொல்லி தமிழ் உலகை ஏமாற்றுகின்றும் பாதகத்தை செய்கின்றது திமுக.
எப்போதும் மானமுள்ள, உணர்வுள்ள ஒரு தமிழனால் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு துரோகத்தின் சின்னம் இந்த திமுக!