Thursday 6 August 2009

பரிசின் பரிசை வாங்கினார் கலைஞ்ஞர்.

திமுக கட்சியின் மாபெரும் கூட்டம் ஒன்று நடக்கின்றது,
விண்முட்டும் மக்கள் கரவோசத்தின் மத்தியில்,
கலைஞ்ஞர் பேசிக் கொண்டிருக்கின்றார்,
“அண்ணாவின் அன்புக்கரத்தால் நான் பரிசாக வாங்கிய இந்த வெள்ளி வாள்தான் என் கனவு இலட்சியம் என்று நினைக்கின்றீர்களா? இல்லை நிட்சயமாக இது இல்லை. “அடப்பாதகா! பொன் வாளா பேண்டும் என்று கேட்கின்றாய்” என்று சலித்துக் கொள்ளாதீர்கள்?
நான் பரிசாக நினைத்தது, அண்ணா விரல் காட்டும் இலட்சிய மலரைப் பறிக்க அதில் நான் போர்வீரனாகி அதில் வரும் சாவு வேண்டும்.
அபோது அண்ணாவின் மடியில் என் தலை கிடக்க அந்த இமயமலையின் விழிகளில் இருந்து வடிந்து வரும் கண்ணீர் முத்துக்களை என் முகம் ஏந்த வேண்டும்.
அது ஒன்றுதான் என் இதயம் சுமந்து வைத்திருக்கும் பேராசை”.
கரவோச முழக்கங்கள் வானைப் பிழக்கின்றன்.

காட்சி இரண்டு.
இதுவும் திமுகவின் மாபெரும் கூட்டம் ஒன்று, வளமையன கட்சி விடயம் சார்ந்த நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கின்றது. ( அன்றைய காலப் பகுதியில் அண்ணாவிற்கு கீழ் உள்ளவர்கள், கட்சியின் மூத்த நிலை என்று சொல்லப்படத் தக்கவர்கள் அனைவரும் கருணாநிதி, கண்ணதாஸன் உட்பட பலரும் கட்சியின் சம முக்கியத்துவத்துடன் இருந்தார்கள்.)
அரங்கத்தின் உள்ப்பகுதியில் அண்ணாவுடன் கலைஞ்ஞர் உரையாடிக் கொண்டிருக்கின்றார்,
தனது கையில் இருந்த கணையாழியை அண்ணாவிடம் கொடுத்து, “அண்ணா இதை மேடையில் வைத்து எனக்கு அணிந்து விடுங்கள்” எனக்கேட்கின்றார். அப்போது அண்ணா என்ன நினைத்திருப்பார்?
“அன்று நான் பரிசாகத் தரும் பாசக் கண்ணீருக்காய் சாவைக்கூட ஏற்பது சுகம் எனச்சொன்னாய், என் நெஞ்சமெலாம் இனித்தது, ஆனால் இன்று,,,,,,,,
மயிர் நீர்ப்பின் உயிர் வாளாது கவரிமான் என்பார்கள், ஆனால்
மயிர் காக்க மானம் விக்கும் கவரிமான் ஆனாயே நீ.
சாக்கடை ஒன்றை பார்த்து விட்டேன் என்று அல்ல நான் அருவருபப்டைவது,
பசும்பால் என்று அதை அளந்த என் அறிவு, அதை நான் எதனால் அடிப்பது” என்று வருந்தியிருக்காரோ.

திமுகவின் புலிஅபிமானம்.

தமிழ் இனத்தின் மேன்நிலையான வாழ்கைநிலையின் புத்தெழலை திமுகவின் கரம் கொண்டு இந்திய அரசு சாவடித்திருக்கின்றது.
எந்தப் பாவத்தின் பயனிலும் வெற்றி ஒன்றே கட்சியின் உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்ட திமுக; இந்தப் பாவத்தையும் செய்து முடித்திருக்கின்றது. ஆனால் கட்சி பேர்வாங்கும் புரட்சிகரமான கதைகள் பேசிக்கொண்டிருந்த நிலைக்கு ஒர் பேரிடி பின்னுதைபாகி விட்டது.
இதுவரை புலிஆதரவுநிலை வைதுக் கொண்டிருக்க என்ன காரணம் இருந்திருக்க முடியுமோ,
அதை கைவிடவும் அதே காரணத்தின் அடிப்படையில் தானே ஒன்றைச் சொல்ல வேண்டும்.
ஒருவன் ஒரு பெண்ணை அவளின் நல்லமனம் என்ற காரணத்தால் காதலிக்கின்றேன் என்று சொல்கின்றான், சிறிது காலத்தின் பின்னால் அவளை வெறுப்பதாகச் சொல்கின்றான், ஏன் என்ன காரணம் என்றால் அழகில்லாதவள் எனச் சொல்வது, அறிவில்லாத்தனமான பதில் அல்லவா? 1. அழகில்லாதவள் என்பது காதல் துவங்கிய போது இல்லாமல் இடையில் வந்திருக்கத்தக்கதா?
2. காதலிக்க நல்லமனமே காரணமாக இருந்தால், வெறுக்கவும் அதன் அடிப்படையிலேயே காரணம் இருக்க வேண்டாமா?

இவை போல்த்தான் திமுக புலிகளின் பேரில் வைக்கும் ஒப்பாரி.
புலிகளின் சிறப்பிற்கு என்ன காரணம் அடிப்படையாக இருந்ததோ அது தன் அழிவு என்ற கோடு வரைக்கும் அதுவாகவே இருந்தது. திமுகவும் எந்த ஈனத்தனத்திலும் அரசியல் செய்யும் அதன் இயல்பு அப்படியே இருக்கின்றது.
கட்சி ஆதரவிற்கு உணர்வு முதலாவது ஒரு வகை, பணம் முதலாவது இன்னொரு வகை.
அப்படி பணம் முதலாகக் கொண்டவர்கள்; பச்சைப் பாதகம்தான் தம் கண்முன்னே தான் ஆதரிக்கும் கட்சி செய்கின்ற போதும், அந்த ஆதரவில் வரட்சி என்பது வரவே வராது. மனிதப் பாவங்களில் பணம் சம்பாதிக்கின்ற இந்த இழிநிலையை ஒருவன் கொண்டிருந்தால் அவன் மனைவிகூட இவனை அருவருப்பாள். ஒரு வேளை அன்னியன் ஒருவனால் அவளிற்கு அவலம் நிகழ்ந்தாலும் அவன் நீட்டும் பணத்திற்காய் இவன் பணத்திற்காய் சொந்த மனைவி மீதே பழியைக் கொட்ட தயங்காதவனாய் இருப்பான். இத்தகையவர்கள் நடமாடும் பிணம் என்றே சொல்ல வேண்டும்.

Tuesday 12 May 2009

எந்த எதிரியின் பகை ஈழத்திற்கு மோசமானது ஜெயாவின் பகையா? சோனியாவின் பகையா?

தமிழ் இனத்தின் இரத்த ஆறு கண்டு, கண்டம் தாண்டி வருகின்றது கண்டனங்கள்,
அண்டை நாட்டு சோனியா சொன்னாளா ஒரு வார்தைக் கண்டனம் தான் சிங்களம் மீது?
அப்படி கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கும் ஜெயாவின் பகையா மோசமானது திமுக விற்கு?

இன்றைய நிலமையில் வெளிநாட்டு உறவுகளே சிங்களத்தின் இனதுவேசப் பித்தத்தை வாய் வழியாய் வாந்தி எடுக்க வைக்கும் சக்தியுடன் ஒன்று திரண்டு நிற்கின்ற போது, அதை செயலற்றதாக்கி தள்ளி நிற்க வைக்கும் சோனியாவின் அரசியல் போக்கு, ஈழத்தவர்களுக்கு இணக்கமானது என்றா சொல்கின்றது திமுக?
ஜெயாவின் பதவிக்கும் இத்துணை அதிகாரமும், ஆற்றலும் இருக்கும் தன் பகையை நோக்கி இத்தகைய ஆபத்தை பிரயோகிக்க என்பதையா சொல்கின்றது திமுக?

அள்ளி, அள்ளி ஆயுதங்களும், படைப் பயிற்சிகளும், படை உதவியும் சிங்களத்திற்கு சோனியா செய்வது போல், ஜெயாவும் செய்யக் கூடிய அதிகாரமும், ஆற்றலும் அவர் பதவிக்கு இயலத்தக்கது என்பதையா திமுக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கின்றது? அப்படி என்றால் திமுக எமக்கு சார்பான கொள்கை என்றுதானே சொல்லிக் கொள்கின்றது, ஜெயா எமக்கு எதிராக இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று சொன்னால், அதே பதவி வைத்துள்ள இவரால் எமக்கு ஆதரவாக இவளவு செயலையும் இவர்களால் ஏன் செய்ய முடியாதாம்?

எனவே சீமான், பாரதிறாயா போன்றோர் ஜெயாவை நம்புவது ஈழத்திற்கு துரோகமாம், ஈழத்தின் அழிவுகளுக்கு முழுமுதல் காரணமான சோனியாவை தூக்கின் கொண்டாடும் திமுகவின் கொள்கை ஈழத்தின் பால் கருணை கொண்ட கட்சியாம்.
உண்மையில் சோனியாவின் தோல்வியை விட திமுகவின் தோல்விதான் தமிழ் உணர்வு கொண்ட ஒவ்வொருவன் மனதுக்கும் ஆறுதல் தடவும் மருந்து.
ஈழத்திற்கு விசத்தை ஊட்ட வருகின்ற பாதகியை அமுதூட்டுவதாக சொல்லி தமிழ் உலகை ஏமாற்றுகின்றும் பாதகத்தை செய்கின்றது திமுக.
எப்போதும் மானமுள்ள, உணர்வுள்ள ஒரு தமிழனால் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத ஒரு துரோகத்தின் சின்னம் இந்த திமுக!