Sunday 19 October 2008

வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!

வளர்ந்த நம்கூடுகள் பிரிந்து நாம் தவிக்கின்றோம்
வானக் கூரையில் வாழ்வை நாம் களிக்கின்றோம்
வீதியில் வாழ்கை விதி எமக்காம்
ஊர்கள் தொலைத்தவர் ஊர்வல வீதியில்
எம் வாழ்கைக்கு கூடு ஒரு மரநிழல்தான்

கோழிவிலையை முட்டைக்கு கேட்கிறார்கள்
ஒருகை அரிசிக்கு வாழ்கை தவிக்கின்றது
பசி ஒன்றுதான் எமக்கு கடவுள் - இல்லை என்றால்
நாம் வாழ்ந்த வாழ்கை நினைவுகளே எமக் கொல்லும்
அதை அருகில் வரவிடாத, கூடவே எம்மோடு
வாழும் பசிதான் எமக்கு கடவுள்.

பட்டினியும் எதிரி எம்மேல் ஏவிவிட்ட ஏவுகணை
மிகை ஒலிக்காலன் வருகையில் அண்டமும் அதிரும்
குண்டுகள் தான் இறைத்தால் அணுவிலும் உயிர் சிதறும்
பசியில் வாடிக்கொண்டிருந்த உயிர்கள் சாவூரில் தஞ்சம் பெறும்
மனித உழைப்பின் தேட்டங்கள் யாவும் கற்குவியல்களோடு போகும்.

எங்கள் கண்ணீர் உங்கள் நெஞ்சைத்தொட
தடை செய்கின்றது அம்மாவின் அரசியல்
இங்கே பிணங்களைக் குவிக்கின்ற
சிங்களர் கொடுமைக்கு
ஆசீர்வாதங்கள் இவைதான் அல்லவா?

கடைசித்தமிழனின் உயிர்வரைக்கும் காவுகொடுக்கப்படும்
போரின் விலையிலும் புலிஅழிப்பு சிங்களத்திற்க்கு பெறுமதியானது.
ஆனால் அம்மாவின் அரசியலுக்கும் இது எப்படி பெறுமதி
கொழிக்கும்? புரியாதபுதிரே இது இன்றும் எமக்கே.

பச்சைத்தமிழன் வாக்கிலே அவர்
பதவியை வாழ்பவர் அல்லவா?
அவர்களின் உணர்வினையே தூசுக்கா மதிப்பதா?
காசுக்கா அழுகின்றது தமிழினம் இங்கே
உரிமைவாழ்விற்க்கு அல்லவா?
உங்கள் தோள்களுக்கும் பணி இதில் இல்லையா?

No comments: