புலிஎதிர்ப்பை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் தேசப்பற்றை உயிர்மூச்சாக கொண்டவைகள்தானா?
தேசத்தின் உயிர்களை காவுகொள்ளும் நாட்டுடன் தோளில் கைபோடும் வெளிநாட்டு உறவுக்கு பொறுப்பான கட்சியே புலியை ஆதரிக்கும் பேச்சுக்கே தடை விதிக்கின்றது, ஆதரிப்பவர்களை சிறையில் அடைக்கின்றது.
ஆக இந்திரா குடும்பத்தின் கௌரவம் பெறும் முக்கியத்துவம் இந்தநாட்டு குடிகளான மக்களின் மரணங்களின் முக்கியத்துவத்தைவிட உயர்வானதோ இந்தக் கட்சிகளுக்கு? இத்தகைய யதார்த்தங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன?
தம் கட்சிகளின் இருப்புக்கு ஆதாரம் தேடும் மூலவழிகளில் ஒன்றுதான் இந்திரா குடும்ப கௌரவத்துக்கு மாசுபடாமல் பாதுகாப்பது.
தன்மக்களைக் கொன்று கொண்டிருக்கும் அரசபடைக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் அவர்கள் அரசியல் நெறியே அவர்கள் தேசத்திற்க்கு செய்யும் துரோகத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த துரோகத்தனத்தால் அவர்கள் அடையும் நன்மை என்ன? நாடுசார்ந்த தீமையால் கட்சிசாந்த நன்மை அநுபவிக்கின்றார்கள். எனவே தேசத்துக்கு உண்மையான துரோகிகள் யார்?
புலியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கும் மனம் அறிந்த பொய், சொந்த மக்களால் அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள் என்பது.
இந்த உண்மை உடைக்கப்படும் ஒரு செயலினாலேயே இவர்கள் கட்சிகளின் கொள்கை என்பது அனைத்திற்க்கும் அத்திவாரம் பொய்யே என்பது தன்பாட்டில் நிரூபிக்கப்படக்கூடிய உண்மை.
புலியை எதிரியாக பிரகடனம் செய்தவர்கள் புலிசாரந்த உண்மையான தகவல்களில் நடுநிலையோடு நடப்பார்களா? அதுவும் கேடு கெட்ட அரசியல்நெறிக்கு முனுதாரணமாக விளங்கும் இவர்கள் அரசியலமைப்பா?
தாயின் மானத்தில் பணத்தை செய்துகொண்டிருக்கும் ஒருவன் தாய்மை பற்றி பேச எவளவு யோக்கியமோ, அதுபோலவே இந்த தங்கபாலுவுவின் தேசப்பற்று பற்றிய யோக்கியமும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment