சந்தேகமே வேண்டாம் இதுதான் தமிழன்காலம் பொன் போல் போற்றப்பட வேண்டிய உண்மையான பெருமை நண்பர்களே!
போரில் வெற்றி தோல்வி என்பது ஒருவனுக்கு சேரவேண்டிய பெருமையை திசை மாற்றியதே இல்லை, கட்டபொம்மன் போரில் தோற்றான் ஆனாலும் இன்றும் அவன் தமிழன் பெருமைக்கு சின்னமாக எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அல்லவா?
ஆனால் ஒரு தவறான வழிகாட்டுதல்களினால் காட்டு றாயா என்ற பெயரை ஒரு குள்ளநரி அநுபவித்த வரலாறு தமிழன் புகழை சுமந்த ஏடுகளுக்கு அநுபவமாய் இருக்க வேண்டாம்! என்று இந்த விலைமதிப்பற்ற செயலைச் செய்தவர் யார்?
இந்த உண்மை உலகுக்கு உரித்துக்காட்ட ஆசைப்பட்ட வீராதி வீரர்கள் எல்லாம் இந்த குள்ளநரியின் இறாயதந்திரத்தில் வரலாறே இல்லாமல் போயினர்.
ஆனாலும் இன்னொரு மொழிகாறியால், அதுவும் பெண்ணால் இந்த குள்ளநரியின் தோல் உரித்துக் காட்டப்பட்டு விட்டதே! இது முன்னோரின் புகழ்மிக்க வரலாற்றுக்கு செய்த மிகப்பெரிய பணி அல்லவா? வாழ்க ஜெயலலிதா அரசியல் சாணக்கியம்!
கலைஞ்ஞரின் தமிழ் பற்றும், பாசமும் அவர் உதட்டு வரைக்கும்தான் மீதி எல்லாம் பதவியாசையும் குடும்பமும்தான் என்ற உண்மை உலகுக்கு அறியவைக்க ஈழத்தமிழரின் சாம்பலைத்தான் மருந்தாக பயன்படுத்த வேண்டி இருந்தது ஜெயாவுக்கு, இந்தாலும் இது குற்றம் இல்லை உண்மையை உணர்த்த செலவு அதிகமானாலும் குற்றமாகாது, எனவே நன்றி அம்மா என் இதயம் நரிவளையாய் ஆகாமல் தடுத்தமைக்கு!
எனக்குத் தெரியும் பலவாசகர்களுக்கு என் வாசகங்களில் இதமிருக்காது.
இன்றைய கலைஞ்ஞரின் வெறுங்கை பிசையலுக்கு காரணமே ஜெயாதானே என்பார்கள், ஒரு வேளை ஜெயாவுக்கு இப்படி ஒருகாரணம் குற்றத்தில் இருந்து தப்புவிக்க மிகப் பொருத்தமான காரணமாய் இருக்க முடியும். ஆனால் கலைஞ்ஞருக்கு துளியும் பொருத்தம் இல்லாதது என்று உங்கள் மனசாட்சிக்கே தெரியும்.
அன்பையும் பண்பையிம் காட்டி ஒருவன் கதவை திறக்கவைக்கின்றான் வீட்டின் உள்வந்ததும் கத்தியை கழுத்துக்கு நீட்டி பொருட்களைக் கேட்கின்றான் அடபாவி! திருடா! இது என்ன அநியாயம் என்று அழுதால் மற்ற திருடர்கள் கேட்டால் கொடுப்பீர்கள் நான் கேட்டால் கொடுக்கக் கூடாதா? என்பதைப் போன்றதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment