Thursday 18 December 2008

தினமலரில் சீமானின் மேடைப்பேச்சு!

தினமலர் சீமானை நோக்கி அண்மைய மேடைப் பேச்சு சார்பாக மிகக்கடுப்பாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பின்னூட்டங்களும் அதேபாணியில் தொடர்ந்திருக்கின்றன.
புலிஎதிர்ப்பு நியாயமா? அநியாயமா என்பதைக் கூட வாதாடப்போவதில்லை.
முழுபூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் புலிஎதிர் நிகழ்ச்சி நிரலுக்காக தமது ஊடகதரத்தை இத்துணைக்கு தரம்தாழ்த்துவதை எண்ண பரிதாபமாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரு சில சிங்கள ஊடகங்களே நாட்டு பற்றாளர்கள் என்ற பரிசை மக்களிடம் இருந்து வாங்காது விட்டாலும் பறவாயில்லை அரசுதரும் செய்திகளைக் கொட்டி தமது செய்திகளுக்கு இருக்கும் உண்மையின் தரத்தை கெடவிடாமல் பாதுகாக்கும் பணியை முக்கியமாகக் கருதும் போது,
இந்திய புலிஎதிர்ப்புவான்கள் தமது பத்திரிக்கையின் துணுக்கு செய்திபகுதிக்காக ஒட்டுமொத்த தமது ஊடகத்தரத்தை கேவலப்படுத்த துணிகின்றார்களே, இந்த முயற்சியின் ஊற்றுத்தான் பதில் சொல்ல முடியாது மாட்டுப்படும் பார்ப்பானின் கள்ளம்.
கடந்தகால தினமலர் இலங்கைச் செய்திகளைப் பார்ப்போம்.
“பிள்ளையான் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த நந்தகுமார் இனம்தெரியா நபரால் கொல்லப்பட்டார், இது புலிகளின் செயல் என கருணா குற்றம் சாட்டுகின்றார்” என்று தொடர்கின்றது செய்தி.... பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதை சேர்த்தார்களா? இல்லை அவர்களால் குற்றவாளியாய் காணப்பட்ட தரப்பு ஆகிய கருணா சொல்வதை செய்தியில் சேர்திருக்கின்றார்கள் ஒருவேளை கருணாவால் புலிதவிர்ந்த வேறு எவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் தினமலர் அதை செய்தியாக்கியிராது,
அதன் பக்கங்களுக்கு செய்தியாகும் தகுதி என்பது புலியை வசைபாடும் எந்தப் பச்சைப் பொய்யாகவும் இருக்கலாம்.
நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் நடந்த சம்பவம் இது. தமிழ் இனத்துக்கு பாதகமான ஒரு சட்டம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட அதை எதிர்த்து 21மொத்த தமிழ் நாடாளுமன்ற உப்பினரக்ளும் எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர்,
தினமலரில் பார்ப்பான் வித்தையில் இந்தச் செய்தி இப்படி வந்தது.
“இந்த சட்டத்துக்கு எதிராக 21 தமிழ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள், இலங்கை நாடாளுமன்றின் மொத்த உறுப்பினர் தொகை 240 எனவே இது மிகச் சிறிய எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றது” தமிழரைப் பாதிக்கும் முடிவுகளுக்கு தமிழ் உறுப்பினர்கள் தானே பதிலளிப்பார்கள் அந்த ஒட்டு மொத்த தமிழர் பிரதிநிதித்துவத்தின் எதிர்ப்பை எப்படி மலினப்படுத்தி இருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி ஒருவன் பொய்யாக மோசமான கதைகளை பரப்பித்திரிகின்றான் என்றால் அவற்றை எதிர்க்க நான் நல்லவன் என்ற கருத்தை பரப்புவதைவிட அவன் மோசமானவன் என்ற உண்மையை வெளியிற்க்கு பரப்பிவைத்தால் போதும்.
அது போலவே புலியைப் பற்றி நல்லதைக் கதைக்காமலே இந்தப் பார்ப்பான் விசத்தை இறக்க முடியும் அவர்கள் செயற்பாடுகளைக் கொண்டே.

பாம்பின் விசத்தை விடக் கொடியது பார்ப்பான் விசம் என்று பெரியார் சொன்னார்,
அவர் காலமான பின்பும் சொன்ன வார்த்தைகள் மதிப்பு பொய்த்துவிடக் கூடாது என்று மானிடதர்மத்தின் மீது இன்றும் தீண்டிக்கொண்டே இருக்கும் பார்ப்பான் நெறிதனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இல்லை என்றால் இந்தக் காலாதிடம் பெரியார் ஒரு பைத்தியக்காறனாகியிருப்பார் மனிதன் நம்பமுடியாத ஒரு பொய்தனை சொல்லிவைத்தாரே என்று.

1 comment:

Anonymous said...

பொத்துகிட்டு போடா பரதேசி நாடு இல்லாத அகதி. எங்க நாட்டு விசயங்களுக்கும் உனக்கும் என்ன வேலை போடா பொறம்போக்கு