Friday 14 December 2007

ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலைக்க முடியாத ஈனத்தங்கள்!

விழுந்த பனம்பழம் உண்மையான கதையாகவே இருக்க அதற்க்கு காகத்தை காரணமாக கொண்டு வந்து இருத்துவதுதான், ரயாகரன் பிழைப்புவாத எழுத்தின் உழைப்பாய் இருப்பது.
ரயாகரனிசம் கதை அளக்கின்றது இப்படி,,, “ஈழத்தில் மக்களை காலிசெய்ய வைத்தது, புலிகளின் மேல் கொண்ட வெறுப்பாம்”.

ஈழத்தில் அப்படி புலம் பெயர்ந்த மக்கள்கூடம் தானே புலம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள், அவ்வாறு அந்தந்த நாடுகளில் எழும் புலிஆதரவுப் பேர்அலைகளாக இருப்பது இந்த மக்கள் கூடமே அல்லவென்றால், யார்தான் காரணம் என்று சொல்லவருகின்றீர்?
புலி நிர்வாகப்பகுதி வாழ்மக்களில் அன்றாடத் தேவைகள் கூட மறுக்கப்படுவது யாரால்?
எரிபொருள்தடை, மின்சாரத்தடை போன்ற அடிப்படைத் தேவைகளின் தடைக்குள், தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றது தமிழினம்.
இப்படி மக்களின் வாழ்வு; சாவோடு போராடும் சூழலில் வைப்பிப்பது சிங்கள அரசு.
வாழ்வை பிழைக்கவைக்க ஓடும் மக்கள் கூட்டத்தைப் பார்துக் கைதட்டி ஆரவாரம் செய்கின்றார்கள் அரசின் கூலிப்படைக்கள், புலிகள் மேல்கொண்ட வெறுப்பால் ஓடுகின்றார்கள் என்று அர்த்தம் கற்பிக்கப் படுகின்றது இவர்களால்.

இயற்கையின் தடைக்கு பழக்கப்பட்டு இருப்பவர்களிடம், மாவிலாற்றை புலிகள் தடைசெய்தபோது, அந்த சிறிய கிராமத்தின் மனித உரிமை பிரச்சினை என்று சமாதானத்தை உடைக்கும் போருக்கு பேர் சூடினாரகள்.
ஏன் ஐயா? அரசின் மனித உரிமை என்ற அர்தபதம் சிங்களவனை மட்டும்தான் உள்வாங்குகிறதா?
ஏன் என்றால் எமது அடிப்படை உரிமைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கும் தடைகளுக்காக மட்டுமே, எமது சூழலுக்கு போராடும் உரிமை பல்லாயிரம் மடங்கு பொருத்தம் பூண்டு இருக்கின்றதல்லவா?

தன் தளபதிகளுக்கு எல்லாளனைக் காட்டியமைக்கு புலிக்காச்சல் வாயின் பித்தவுரை இப்படி; தோல்விகளின் சுமையில் மனவாட்டம் கண்ட தளபதிகளுக்கு மன ஊட்டச் சக்தி எல்லாளனாம்.
அதாவது தன் தளபதிகளிடம் தன்மேலான நம்பகத்தன்மையை கட்டி எழுப்புவதற்க்கு திண்டாட்டமான சூழலுக்குள் இன்று பிரபாகரன்.

இந்திய ராணுவம் என்ற புயலில்கூட கலங்காத நம்பகத்தன்மையை. இந்த மகிந்த பரிவாரத்தின் கூச்சல் தொலைக்கப் போகுதாம்.

உமது பித்த உரைக்கும், தினமினவின் கோமாளித்தன உரைக்கும் விதியாசம் மருந்துக்கும் இல்லை.
எல்லாம் இயலாமையின் கயிறு திரிப்புக்களே!
இத்தகைய பிழைப்பனவுகளில் வயறு வளர்க்கும் ஈனப்புத்தி; ஜென்மங்கள் செருப்பால் அடித்தாலும் தொலையாதவையே!

Tuesday 11 December 2007

முட்டையில் மயிர் பிடுங்கும் தத்துவவாதம்!

தத்துவபூர்வமான பார்வை அளவிடும் ஒரு அமைப்பின் நடத்தையியல்பு என்பது ஒரு பொது சமன்பாட்டு விதிகளுக்குள்ளேயே அடக்கப்படுகிறது.இந்திய வல்லரசு ஈழதில் களமிறங்கிய போது, தத்துவார்த்த பார்வையின் கணிப்பீடுகளின்படி, புலிஅமைப்பின் வரலாறு மீது புல் மிழைத்துவிட்டதாகவே கருத்துக்கள் ஆரூடம் கூறப்பட்டன.
அது போலவே தத்துவார்த்தபார்வையின் கண்ணுக்கு ஒரு அமைப்பின் நடத்தை மீது அடுக்கப்படக் கூடிய குற்றப் பிரேரணைகள் எவையோ? அப்படியே அதன் அடி ஒற்றி புலிஎதிர்ப்புவாதம் புலிஅமைப்பு மீது குற்றப் பிரேரணைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றது.

புலிகளின் எதிரியார்?
தமிழீழ இலட்சியத்தின் குறுக்கே வரும் எந்த சக்தியுமே ஈழபோராட்டதின் எதிரிகளேதான். டக்ளஸ் எப்படி தமிழினத்துக்கு எதிரியானாரோ? அது போன்ற ஒரு சூழலுக்குள் குடியேற தயாராகும் எந்த சக்தியுமே தமிழர்களின் எதிரியேதான்.அதுவும் சொந்த கொள்கைகளே இல்லாமல் பிராந்தியவாத சக்திகளின் தூபத்தில் வளர்பவைகள் போராட்டம் என்று சொல்வதில் அர்தமே இல்லை,. வல்லரசின் அடிஆட் குழுக்கள், றவுடிக்கூட்டங்கள் என்பதுதான் பொருத்தமானது. இவைகளை களை எடுக்கவேண்டிய்து தமிழீழ இலட்சியத்துக்கு மிக அவசியமான காலத்தின் தேவையாகவே அன்று இருந்தது.

இதர அமைப்புக்களின் இழப்பால் ஈழம் என்ன நட்டத்தை அடைந்து விட்டது?வயலின் ஒரு வரம்பை வெட்டிவிட்டால் தண்ணீர் மறுவயலுக்குள்தானே போகும் அது போலவே, மனிதவலுக் கணக்குக்கு எந்த பாதிப்பும் வந்து விடவில்லை. எனவே புறம்போக்கு வாதங்களின்படி தொட்டுக்காட்டப்படும் பாதிப்பு என்ன?வினைத்திறன் கொண்ட உயர்ந்த தலைமைகளின் மூளைச்செல்வம் தனிஅரசு நோக்கிய ஏற்பாடுகளை இலகுவாக்கி இருக்கும்.காலநோய் கொண்டுபோக இருந்த ஒருவனின் உயிரை சிலதினங்கள் முன்பாய் எதிர்பாராத விபத்து கொண்டு போனது போலவேதான், இந்த அமைப்புக்களின் மீது விதி விதிக்கப்பட்ட அழிவு இயற்கையானது. புலிகளின் கரம் அந்த பழியை ஏற்றமை ஒரு விபத்துபோல் ஆன கதைதான். புலி என்ற அமைப்பின் பலம் இராணுவ மூகாம்களை சிறையில் அடைத்து பூட்டி வைத்திருக்கின்றது. நாட்டுக்குள் இவர்கள் தர்ப்பார், ஆளாளுக்கு போராட்டம் என்ற கொம்பனிகளை ஆரம்பிக்கின்றார்கள். அன்று புலிகள் பலம் இராணுவங்களை திறந்து விட்டிருந்தால் அனைத்து உயிர்களையும் இராணுவங்களுக்கு காவு கொடுத்திருப்பார்கள். ஏன் எனில் அனைத்து அமைப்பினரும் ஒன்றாகவே சேர்ந்தும் புலிகளையே எதிர்க்கும் படைவலுவே இல்லாதிருக்கும் போது எப்படி இராணுவத்தினரை எதிர்திருக்க முடியும்.
ஆக சொந்த இருப்பின் பிழைப்பையே காப்பாற்ற முடியாதவர்களிடம் எப்படி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கொடுக்கமுடியும்?

ஏனைய அமைப்புக்களில் இல்லாதிருந்த, புலிஅமைப்புக்களிடம், மட்டுமே இருந்த ஒரு அளவுகோலே என்னை மிகவும் கவர்ந்தது. அது புலி அமைப்பினால் உள்வாங்கப்படும் ஒவ்வொரு புதிய உறுப்பினனும், கல்வி, சாதி, உறவுநிலை அனைத்தும் ஒடித்து போடப்பட்டு ஒரு சமத்துவநிலையில் விடப்பட்டுகிறான். அவன் உயிர்க் கொடைப்பண்பில் மேல்படும் வெளிச்சத்தால் அவன் உயர்வு இனங்காணப்படும் அந்த அமைப்பால்.
இதுவே எந்த வல்லரசின் இடிகளுக்கும் நொருங்காத இரும்பின் உறுதி கொண்ட அத்திவாரங்களாக தாங்குகிறது அந்த அமைப்பு.

இந்தக்கருத்தை உண்மை என்று எப்படி நம்பலாம்?
மாத்தயா, கருணா போன்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமே இந்த வாதம் எனக் கேட்கலாம்.
போராளிகளின் தடயத்தை சகதிக்குள் சிக்கவிடாத வீதிதான் புலிஅமைப்பின் கட்டுப்பாடு. அதை ஆன்மார்த்தமாக விரும்பி ஏற்பவர்களை அன்னியச்சதி நெருங்க முடியாது. அதை கடனுக்காக ஏற்வர்களை சோரம் போகச் செய்வதென்பது பெருமுயற்சியாய் இராது.
மூளைச்சலவை என்கிறார்களே அது எந்த சவர்காரத்தல் செய்யப்படுகிறது.மூளையில் உள்ள அழுக்கு தேடிக் கண்டு பிடிக்கப் படுகிறது. பின் அந்த அழுக்குக்குள் அவன் கொட்டப்படுகிறான்.
இவன் இயற்கை வயப்பட்டு செய்யப்படும் தவறுகள் புலித்தண்டனையில் இருந்து ஒழித்தோட வேண்டிய புதிய சூழலுக்கு ஒரே காரணமாகின்றது, இன்னிலையில் முன்னால் விடப்பட்டுக்கிடக்கும் ஒரே வழியாக எதிரியிடம் சரணடைதல் என்ற விபரீதம் சதிமுயற்சிக்கு விளைச்சலாகிறது.

தத்துவார்த பார்வை ஒரு போராட்டத்தின் நடத்தையை விமர்சனம் செய்வதர்கு பயன்படுத்தும் பிரதான அஸ்திரங்கள்.

1. பிழைப்புவாதம்
2. அதிகாரபோதை.

இந்த இரண்டு அஸ்திரங்களுக்கும் குறிபிழைக்க வைத்துவிட்ட வரலாறுகளாக புலிகள் இருப்பது உலகம் அறிந்த உண்மை.
இந்திய வல்லரசின் இராணுவம் ஈழத்தில் களம் இறங்கிய போது, அதன் பகையை வாங்க போதிய விலையாக இருக்கத்தக்கது தமிழீழ இலட்சியம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் புலிகளிடம்.சாவின் விலையில் பணம் பண்ணும் கிறுக்கன்கள் உலகில் எங்கும் உண்டா?
போர் என்பது தன்னை வேரோடும் அழிக்கும் விதியின் முடிவு என்பது தெரிந்தும், போரை முடிவாய் எடுத்தது தலைவனின் கொள்கைப் பிடிக்குள் கிடந்தது தமிழீழம் என்ற கனவுதான் என்பது, மூளை என்ற ஒன்று இருக்கின்ற எவனுக்கும் விளங்க கடினமாய் இருக்காது.

எனவே ரயாகரன், சிறீரங்கன் போன்ற கூட்டதினர் தத்துவார்த்தமான ஒரு எழுத்துவாததில் தான் இறங்கியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் கைகளுக்கு கொடுக்கப் பட்டிருப்பது புலிஅமைப்பு என்பதனால், “முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்தம்” என்று அவர்கள் எழுத்துவாதம் சொல்லப்படலாம்.

Sunday 9 December 2007

பிழைப்புவாததுக்கு சிங்களவாததின் கள்ளதொடர்பில் பிறந்ததுதான் புலிஎதிர்ப்புவாதம்!

சகபோராளி அமைப்புக்களின் பிழைப்பனவு மீது புலிச்சூறாவளி அடிக்க இருக்கின்ற காலம் அது.
TELO என்னும் அமைப்பே முதல் அடிவாங்கும் பாய்கியத்தைப் பெறுகின்றது.
அந்த இரவின் நடுப்பகுதி என்றும் இல்லாத ஒரு நாளாக இருந்தது. துப்பாக்கிகளின் வெடி ஓசைகள் தேசமடங்க சீறிக் கொண்டிருந்தது. பலருக்கு என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை. விடிந்த பிறகுதான் அது புலி இடிமுழக்கம் என்றும், அவை TELO பாசறைகள் மீது வீழ்ந்திருக்கின்றது, என்ற செய்தியும் அறிகின்றனர் மக்கள்.
இந்த இடிமுழக்கம் மக்கள் மனங்களில் சந்தோசப் பொங்கல் பொங்கியது என்பதுதான் உண்மை. ஏன் எனில் சிலமாதங்கள் முன்னதாகதான் இரண்டு துண்டாக அந்த அமைப்பு உடைந்து அணிமோதலின் உச்ச பச்சமாக உலகவரலாறே காறிதுப்புமளவுக்கு மிக கேவலமாக, நயவஞ்சகமாக மறுஅணியின் தளபதிகளை கொன்று குவித்தது.
அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம், உடைந்த இரு அணிகளின் தளபதிகள் போபி, தாஸ் என்பவர்களே ஆகும்.
பொபி சபாரத்தினத்தின் நெருங்கிய உறவு, கருத்தால் முரண்டுபிடித்த தாஸ் அணியை வேரோடு களைய சதியில் இறங்குகிறார்கள். இந்த அணியினர்.
சதி கத்தி தீட்ட துவங்கியது,
திட்டம் தயாராகியது.
சதி பிதாக்களால் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்படுகிறது.
யாழ்வைத்திய சாலையின் நோயாளர் பகுதி மேடை ஆக்கப்பட்டது.
நாடகம் சிறிசபாரத்தினம் சுகயீனமாய் படுத்திருக்கின்றார்.
தகவல் மறுஅணிதலமைக்கு அனுப்பப்படுகிறது “யாழ்வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் தாஸ் உடன் பேச ஆசைப படுகின்றாராம்” அவர்களிடையே இருந்த முரண்பாடு ஒரு பிஞ்சு நிலை விவகாரமாகவே இருந்தமையினால் இவர்களுக்கு சந்தேகம் துளிர்விடவே இல்லை. சாதாரண ஒரு பயணமாகவே அவர்களுக்கு அது விளங்கியது, யாழ்வைத்தியசாலைக்கு மேல்மட்ட உறுப்பினர்களுடன் தாஸ் பயணம் வெளிக்கிட்டார்.
வடமராட்சியை கோட்டையாக கொண்ட இந்த அமைப்பு போபியின் கோட்டையான யாழ்பாணம் ஊடாக பயணம் செய்தது யாழ்வைத்தியசாலையை அடைகின்றார்கள், வாயிலில் இருந்த பொபி அமைப்பினர் மென்மையாக அறிவுரை சொல்லுகின்றார்கள். “வைத்தியசாலையுள் ஆயுதம் தரிப்பது அழகில்லை" என்று, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டமுகமாக ஆயுதங்களைக் கைமாறுகின்றார்கள், சபாரத்தினத்தை நோக்கி பயணம் மேலும் தொடர்கின்றது. சபாரத்தினத்தின் வாட்டுக்குள் நுளைகின்றார்கள், நோயாளி வேசத்தில் அவரும் அவர் சகாக்களும் மறைந்த துப்பாக்கிகளுடன் வைத்தியசாலைக்குரிய சூழலை ஒருநிமிடம் அழகாக ஒப்புவிக்கிறார்கள்.
பின்னால் ஒழிந்திருந்த துப்பாக்கிகளின் விசை முதுகு குறிக்காக காத்க்துகிடக்கின்றது, வலைக்குள் விழ்கின்றது இந்த அப்பாவிப் பறவைகள். நிராயுதபாணியாக நின்ற அந்த தளபதிகளை ஆயுததாரிகளான அவர்களால் கைது கூட பண்ணகூடிய தைரியம் இருக்கவில்லை அவர்களிடம். இவர்கள் எப்படிப் பட்ட துடை நடுங்கிகளாக இருந்திருக்க முடியும். வைத்தியசாலை ஒரு ரணகளமாகிக் கிடந்தது. சிலநொடிகளில் அனைவரும் இரத்த வெள்ளத்துக்குள், வைதியசாலை தாதி ஊழியர்கள் உட்பட.
எபடி இருக்கின்றது இந்த போர்? முதல் கட்டம் நிராயுதபாணிகள்.
இரண்டாவது முதுகுக்கு பின்னாலிருந்து சூடுகள்.
வைத்தியசாலையுள், இயலாமை என்ற வேசம் பரிதாப்பட்டவனின் முதுகைக் கேட்கிறது!
உலகின் கோழைத்தனங்களை ஒன்றாக்கினாலும் இவர்கோழைத்தனங்களை மிஞ்சவருமா?
கோழைநோய் ஒருவனின் பீழைப்புத்தியை காட்டிக்கொடுக்கும் இயற்கையின் வியாதி!
இதுடன் அவர்கள் கேவலவரலாற்றின் கதை முடியவில்லை, இதை அறிந்து மக்கள் வெள்ளம் திரண்டு அவர்கள் முகாம்களை சூழ்ந்து கோசங்களால் அறைந்தனர் இந்த கொடியவர்களின் கன்னதில்.
சப்பிகளின் இந்த போராட்டதுக்கு துப்பாக்கிகளின் பாசைகளை அன்றி வேறு என்னத்தைதான் அறிவார்கள்?
மீண்டும் அதே பாணியில் அவர்கள் துப்பாக்கிகள் பேசத்துவங்கியது சரிந்தன அப்பாவிகளின் உடம்புகள், ஏனயவை நிலைதெரியாது தம் கால்கள் போனபாட்டில் ஓட்டம் எடுத்தன, இப்படி மக்கள் மனங்களில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்த அமைப்புக்கு விழுந்த அடிதான் புலிகள் மக்களுக்கு கொடுத்த தமிழீழத்தின் பூர்வாங்க பரிசு என்றால் தவறாகுமா?
இப்படியேதான் ஏனய போராட்டங்களும் தமக்கென ஒரு நல்ல பேரை மக்களிடம் எடுத்த பிறகுதான், புலிச்சூறாவளி வேரோடு பிய்த்தெறிந்தது அவர்கள் கூடாரங்களை.
இவை துப்பாக்கி பலத்தில் வளமாய் இருந்த அமைப்புக்கள்தான் கொஞ்சம் எதிர்ப்புக் காட்டின ஏனய குஞ்சு அமைக்குககள் பலவும் இருந்தது. அவைக்கு பசைக்கும் பேப்பருக்கும் தான் வசதிகள் இருந்தன ஏனவே பசை ஈரத்தை தம் சட்டைகளில் பிரட்டி, காயவைத்து அவர்கள் மக்களோடு மக்களாகி விட்டனர். புலிப் போரின் நோக்கம் முடிந்தவரை இரத்தம் சிந்தாமல் அமைப்புக்களை கலைப்பதே என்பதால், ஒரு திசையில் இருந்தே தாக்குதலை கொடுத்தார்கள் எனவே 95% உறுப்பினர்கள் ஓட்டம் எடுக்க வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தது. சூழ்நிலை சிக்கலில் மாட்டுபட்டு ஓட மறுத்தவர்கள் மாண்டார்கள்.
அன்றைய காலகட்டதில் புலிகளின் ஒட்டு மொத்த தொகையே வெறும் ஆயிரத்தை தொட்டிருப்பது மிக அருமையாய் இருந்திருக்கும். எனவே இந்த சூறாவழியின் சேதாரம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாக்கலாம்.
இந்த சக அமைப்புக்களின் கருஅறுப்பு சூறாவளி எம்முறத்திலேயே வீசியதனால்தான் அதன் நன்மைதீமை உணர்ந்த எம்மால் புலிகளின் மேல் குற்றம் பாராட்ட முடியவில்லை. தூரத்து உறவுகளுக்கு இந்தக்கதை சிங்களவாததாலும் அவன் அடிவருடிகளாலும் தலைகால்கள் வைத்து சோடித்து காண்பிக்கப் படுகின்றது.

“மக்கள் என்பக்கம்” என்று சொல்கிறார்கள் இவர்கள்!
சங்கரியார்
கருணா.
பிள்ளையான்
டக்ளஸ்.
மகிந்தா.
சந்திரிகா.
சிறீரங்கன்.
ரயாகரன்.
எனவே மக்கள் என்ற தோல் போர்த்துகின்ற எல்லாமே சிங்களவாததின் குட்டிப் பூதங்களே. இவை ஒவ்வொன்றின் செயல்வாதங்களும் தமிழன் முதுகில் செருவும் கத்திகளே!

ஊர் அறிய செத்துபோய் விட்டவன் உடம்புக்கு, தலை என்றும், கால் என்றும் சோடித்தல், உயிரை தருவிக்காது என்ற உண்மை குழந்தையின் புத்திக்கே வெளிக்கும்.
வெறும் வாய்சப்பி வயிறு நிரம்பாது, இதையேதான் ரயாகரனின் எழுத்துவாதம் தலைகீழாய் நின்று வெறும் பல்லைச் சப்பிக் கொண்டிருக்கின்றது.
ரயாகரனிசத்தின் புலம்பல்கள் எல்லாம் புலிக்காச்சல் மெத்தி வரும் சன்னி என்று எடுத்துக் கொள்வேம்.

Wednesday 5 December 2007

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.

ரயாகரனின் புலிதுவேசப் பித்தம் தலைக்கு ஏறி இருப்பது.
பணத்தினாலா? பகுத்தறிவினாலா?
புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம்.
எடுகோள்கள் கொண்டே ஒவ்வொரு தேற்றங்களும் நிறுவப்படும்.
ரயாகரனிசத்தின் புளுத்துப் போன பொய்களையே எடுகோள்களாக கொண்டு நிறுவப்படுவது தேற்றங்களா?
இல்லை உள்ளக் கனவுகளா?
அவரின் எடுகோள்கள்.
புலிகளை மக்கள் வெறுக்கின்றார்கள். ( மக்கள் ஆதரவு என்பதை எப்படி மக்கள் வெளிப்படுத்த முடியுமோ அப்படி ஈழத்திலும் வெளிப்படுதி ஆகிவிட்டது. அவர்கள் துப்பாக்கிகளுக்கு பயப்பிடும் தூரத்தில் இல்லாத புலத்திலும் வெளிப்படுத்தியாகி விட்டது இவர் முருங்கையை விட்டு எப்பதான் இறங்கப் போகிறாராம். கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் புலத்தில் புலிகளின் பின்னால் திரளும் மக்கள் வெள்ளத்தை பார்க்கலாம்.)
புலிகள் பலத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டு விட்டது தோல்வி அவர்களை விரட்டிக் கொண்டிருக்கின்றது. (இது ஜேஆர் ஜேவர்தனா காலத்தில் இருந்து மகிந்த காலம் வரைக்கும் சிங்களவர் பாடும் பாட்டல்லவா, தாங்களும் அட்சரம் பிசகாமல் பாடுவது தான் பகுதறிவுக்கு அழகா?)
மக்கள் ஆதரவுடன் இயங்காத எந்தப் போராட்டமும் உலகில் வென்றதாக சரித்திரம் இல்லை. ( மக்கள் ஆதரவுக்கு மகேசனா ஆயுத வினயோகம் செய்வது அட தரித்திரமே பூகோள பின்னணியின் செல்வாக்குதான் போராட்டங்களை இயக்கின் கொண்டிருப்பது. அட சனியனே இதைக் கூட விளங்கமுடியாத அறிவு மட்டம் போராட்டதுக்கு பாடம் வேறு எடுக்கின்றதா?)
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டமாக மறுக்கப்பட்டு சிலருக்காக சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது அது தோற்கடிக்கப்படுகின்றது. (அட நீர் சொல்லும் சிலர் நலனுக்கான போராட்டம் என்றால் சிங்களம் போர்தளபாடம் வாங்கும் காசுக்கு வைக்கும் தெட்சனைக்காசு போதும் அந்த நலங்களை வாலாட்ட வைப்பிக்க. சிங்களத்திடம் அடைமானம் வைத்துவிட்ட டக்ளஸ் இன் போராட்டத்தை பார்க்கலாமே, அதை விட்டு மரண சுருக்கு கயிற்றில் தானே தலையை கொளுவுகின்ற இந்த போராட்டமா அதற்க்கு வாழ்வு தரும் என்று சொல்ல வருகின்றீர். சாட்சியின் காலுக்கே (டக்ளஸ், ரயாகரன்) இவளவு பொருள்தரும் சிங்களம் எதிரியின் கால்களுக்கு எவளவு தருவான். இதெல்லாம் உமது பகுத்தறிவுக்கு உறைக்காதோ?
வெல்வதற்க்கும் எதிரியை தோற்கடிப்பதற்க்கும் சில அரசியல் நிபந்தனைகள் உண்டு ( தன் வாந்தியைப் பார்திருப்பார் புலிகள் பூசையின்போது வெற்றியை எங்கே பார்திருப்பார்? போர் அறிவியல் கரைத்துக் குடித்த மாமேதைகளே நீங்கள் எல்லாம் இந்திய வல்லரசின் செல்லப் பிள்ளைகள் அல்லவா இருந்தும் எந்த அரசினதும் பின்புலம் இல்லாத புலிகளிடம் தோற்றோடியது ஏனோ? அதிரடியாக புலிகள் தாக்கினார்கள் என்று சொன்னால், புலிகள் ஒவ்வொன்றாகத்தானே கால இடைவெளி நிறையவே விட்டுதானே உங்களை துடைத்தெடுத்தார்கள் அப்போது உங்கள் போர் ஞானம் எல்லாம் விடுமுறையில் சென்றிருந்ததா?
6. மக்கள் தமது யுத்தமாக கருதி அதை நடத்தாதவரை எந்த யுத்தத்தையும் வெல்லமுடியாது. (அண்டைச் சக்திகளில் நலன்களுக்கு தன்னை தியாகம் செய்கின்ற போராட்டங்களின் போக்கு வேறு, ஒட்டு மொத்த தன் தேசிய நலன்களுக்கு போராடும் போராட்டங்களின் போக்கு வேறு. இன்றுவரை இந்த போராட்டம் எந்த சக்திகளின் தயவும் இல்லாமல் பூகோள அமைப்பின் காரணத்தினாலும் உலக வல்லரசின் துணையோடு நிற்கின்ற எதிரியை வென்று தன் ஆட்சி நிலத்தை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற புலிகளுக்கு மக்கள் சக்தி என்ற ஆத்ம பலம் இல்லை என்றால் அவர்களால் எப்படி கோடு போட்டு எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். புலிகள் சிங்கள அரசின் போரை எதிர் கொள்வதென்பது ஒரு வல்லரசின் பகையை ஒரு சாமானிய ஒரு சிறிய குழு எதிர் கொள்வ்தைப் போன்றது. மனித வலுவிலும், போர்க்கல வசதிகளிலும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பதின் உச்சதில் நிற்கின்ற அரசை. நாம் தனி அரசு ஆகியிருந்தால் கூட அதன் கால்பங்குக்கும் இல்லாத பெரிய அரசுடனான போர், வெற்றிவாகை சூடுவதென்பது நடைமுறைக்கு மிக மோசமான விலைகேட்கின்ற ஒன்றுதான் அதை புலிகள் போராளிகளாகவே இருந்து சாதித்திருப்பது உலகசாதனை என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒரு வைத்தியனை எப்படிப் பட்ட சூழ்நிலை உருவாக்கி கொடுக்க முடியுமோ அப்படியே இராணுவ மேதைகளின் உருவாக்கமும் உலக இராணுவவியல் அறிவு பட்டை தீட்டி கொடுத்த சிங்கள படை மேதாவிகளை வைத்து புலிகள் கோலிகள் விளையாடுகின்றார்கள் இவற்றை நினைத்தால் சிரிப்புக்கூட வந்து விடுவதில்லையா? நெஞ்சில் என்ன வறுமை நியாயத்துக்கு)
7. புலித்தேசியம் வேறாம், தமிழ்தேசியம் வேறாம். ( எட்டப்பவாததேசியம் வேறு. புலிபோராட்டதின் தேசியம் வேறுதான். புலிதுவேசம்சத்தை ஊதி வளர்தெடுக்க வேண்டிய தேவை, வளங்கும் பெருநன்மையின் பெறுனர் யார்? சிங்களவாதமா? தமிழ்மக்களா? ஆயுத கலாச்சாரமே தமிழர்களை அறிந்திராத காலத்தில் பத்துதடவைகளுக்கு மேல் இனப்படுகொலையில் தமிழனை வேட்டையாடியவர்களிடம் தமிழர்களை ஒப்படைக்க வேண்டுமாம், அப்படி என்றால் போராட்டதின் ஆரம்ப புள்ளிக்கு வந்து இந்த போராட்டதின் பிறப்புக்கு ஒரு தேவையே இல்லை என்பதை மறைமுகமாக அடித்துச் சொல்வதற்க்குச் சமனாகும். ஆக சிங்கள அரசிடம் எமது உரிமைகளை வாங்கித்தருவதற்க்கு ஓரு ஆயுத போராட்டம்தான் தகுதியானது என்பது இந்திய அரசினது முடிவாக கூட அன்று இருந்ததால்தான் ஆயுத பயிற்சிகளில் இருந்து ஆயுதங்கள் வரைக்கும் அள்ளிக் கொடுத்திருந்தார்கள். அன்று இருந்த சிங்களத்தின் கடும்போக்கே இன்றும் மாற்றுகுறையாமல் இருக்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. என்வே இன்றும் ஆயுதபோராட்டம் தான் தேவை என்பது பழைய தேற்றங்களில் இருந்து எடுக்கப்படும் புதிய தீர்வு. ஆக இந்தியா ஆதரிக்கவில்லை. அமெரிக்கா ஆதரிக்கவில்லை என்பது பிரச்சினைக்குரியதா? இல்லை தமிழர்கள் ஆதரிக்க வில்லை என்பது பிரச்சினைக்குரியதா? வல்லரசுகள் ஆதரவு இல்லை என்பது சொல்லும் உண்மை என்ன? நியாயத்தின் பக்கம் போராட்டம் இல்லை என்பதா? இல்லை நியாயத்தின் பக்கமே எப்போதும் தோளைக் கொடுப்பது உலகப்போக்கின் வழப்பம் என்பதா? இது ரயாகரனின் சொந்த அறிவின் ஊற்றா? இல்லை பணத்துக்கு ஊறும் அறிவின் ஊற்றா? அற்புதனின் கேள்விக்கு திருவாய் மலர்தருளிய பதில் இது. இப்படி புலிகள் செய்வதாக கூறுவதை மறுத்து நான் இன்னொரு கட்டுரை எழுதவேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்பது { அட சிவனே தமிழ் மக்களுக்குள் என்ன இருக்கின்றது என்று தெரிந்துதான் இப்படி பிதற்றுகின்றாயோ?} புலிகள், அல்லது புலிஆதரவாளர்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை மனிதனின் எதார்த்த உண்மையை நான் அவர்களுடன் விவாதிக்க விரும்பவில்லை நாங்கள் மக்களுடன் தான் விவாதிக்க விரும்புகின்றோம். { அப்ப புலிகளை ஆதரிக்கின்ற மக்களுடன் இவர் இவாதிக்க தயார் இல்லை நாட்டில் புலிகள் படையைக் கண்டு சிங்களம் நடுங்கியதாலேயே சமாதானப் பேச்சில் இப்போதும் வெளியேறாமல் இருக்கின்றது. வெளிநாடுகள்: அதற்க்கு கிடைக்கும் மக்களாதரவு என்ற பின்னணியைக் கண்டு நடுங்காவிடின் ஏன் இந்த நாடுகளில் புலித்தடை வரவேண்டும் புலிகள் வற்புறுத்தி பணம் சேர்ப்பதை தடுப்பதற்க்காக என்று ஒருதரப்பு சொல்கிறது. அட்ட கடவுளே வற்புறுத்தி பணம் பறிப்பதை தடுப்பதற்க்கு இந்த நாடுகளில் ஒரு சட்டம் இல்லாமலா போய்விட்டது? தனியே அதற்க்கென்று சட்டம் கொண்டுவர? ஐயா உங்கள் கருத்துக்களுக்கு எத்தனை கூட்டம் வைத்திருக்கின்றீர்கள்? அந்த பிரமாண்டத்தை காட்ட முடியுமா? புலத்தின் எந்த மூலையிலாவது ஒரு அச்சுப்பதிப்பில் ஒரு புலிஎதிர்ப்பு புராணம் ஒன்றை விற்று காட்ட முடியுமா? மகிந்தா கூட சொல்லும் அதே பல்லவிதான் தமிழ்மக்கள் எனக்கு பின்னால் தான் என்பதையே நீரும் சொல்லுகின்றீர். அடிவருடி உனக்கு எப்படி தைரியம் வரும் எம் கேள்விகளுக்கு பதிலகள் தர} என்,எல், எப்,ரி பி, எல். எப், ரி தீப்பொறி பாதுகாப்பு பேரவை பாசறை என்ற இடதுசாரி அமைப்புக்கள் அழிக்கப்பட்டமை அவை மேலான படுகொலைகள் எல்லாம் பாட்டாளி வர்க்கதுக்கு எதிரானது. { இன்று டக்ளஸ்க்கு போட்டியாக இவர்கள் இருந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இவர்கள் கலைக்கப் பட்டார்கள் ஆக 80,000 மக்களை சிங்களவன் கொன்று குவித்தான் அது பற்றி வருத்தம் இல்லை இந்த அமைப்புக்களை கலைத்ததுதான் றொப்ப பழி புலிகளுக்கு வந்து சேரப்போகின்றது. எலும்புதுண்டுகளை டக்ளஸ் வெளிச்சதில் வைத்து நக்குகின்றான், ரயாகரன் இருட்டுக்குள் வைத்து நக்குகின்றார் இவற்றை விட வித்தியாசம் வேறு இல்லை.


http://www.tamilnaatham.com/photos/2007/NOV/20071129/LONDON/slides/IMG_7182R.html

http://www.tamilnaatham.com/h_photos20071127.html

Monday 19 November 2007

பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?

உலகபாதகங்கள் அனைத்தும்
மண்ணில் கொடிபடர - அவற்றின்
முழுமுதல் குறிக்கோளாக இருப்பது
பணமே!
வேசம் போட்ட இராசாவேசத்தை வெளிப்படுத்தும்,
உண்மை சூழ்நிலை நேர் எதிர்க்கும் போது.
புலி இரத்ததின் பரிசோதனை முடிவு பயங்கரவாதமாம்!
புலி இரத்தத்தின் நோய்க்கு காச்சல் காய்வது.
இந்தியாவுக்கும், சிங்களத்துக்கும், பிராந்தியவாத சக்திகளுக்குமாம்!
ஏன் தமிழீழம் மட்டும் தடுப்பூசியா போட்டுள்ளதா?
உலகம் பூராகவும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களுமா தடுப்பூசி போட்டுள்ளார்கள்?
புலிகள் கொள்கையே! இந்திதுவத்தின் உண்மையான பகை என்றால்
யதார்த்தம் நம்ப அதில் உண்மை இருக்கின்றது.
அவர்கள் பயங்கரவாதம் தான் இவர்களின் பகை என்றால்
அது பயங்கரவாதம் தானா என்பதை,
காலம் தன் அநுபவத்தை உரைத்து உண்மை அறியாதோ?
இன்றுவரை இரு அரசுகளும் புலிஎதிர் போருக்கு
கொடுத்த மொத்த தெட்சனைகள் (உயிர்கள் தவிர்த்து)
ஒவ்வொரு புலி உறுப்பினருக்கும் சமமாக பகிர்ந்தால்
உலகவரிசையில் இருக்கும் செல்வந்தர் தரத்துக்கு
அவர்கள் வாழ்கையை வைப்பிக்க முடியும்
புலிகள் இதற்க்கு இசைவாகளே என்றால்,
அவர் காலில் வீழ்ந்து இதைக் கொடுக்கவும்
இந்த அரசுகளும் முண்டி அடிக்கும்.
அந்த அற்புதமான எதிர்காலம்,
வாசல் திறந்துவைத்து காத்திருக்கும் போதும்.
குருதி நனைந்த நிலத்தில் உறுதி சுமந்து நிற்பதுதான்
பயங்கரவாதத்தின் புதிய இலக்கணமா?

Tuesday 23 October 2007

புறநானூறின் இலக்கிய நயம் பிச்சை எடுக்கவேண்டும்!

என்வாசிப்பு பழக்கத்தின் ஞாபகப் பதிவுகளில் இருந்து,,,,
புறநானூறில் இலக்கிய நயத்தின் சாரல் ஒன்றில் இருந்து,
பண்டைத்தமிழ் மன்னன் ஒருவனின் காலாட் படை ஒன்று களமுனை நோக்கி நகர்கிறது, நெடிய காடுபோல் நகரும் அந்த சேனை ஒரு பனந்தோப்பு ஒன்றை அதன் துவக்கம் சந்திக்கும் போது அந்த தோப்புக்கு நொங்குக்காலம் எனவே நொங்கைக் குடித்து களிக்கின்றது சேனை.
அப்படியே கடந்து கொண்டிருக்கும் சேனையின் முடிவுப்பகுதி இந்த் தோப்பை அடைய பனங்கிழங்குக் காலம் தொடங்கி விடுகிறது அவர்களோ பனங்கிழங்கை சுட்டு தின்று மகிழ்கிறார்கள் என அமைகிறது அந்தப்பாடல் எவளவு அழகாக படையின் பிரமாண்டத்தை இலக்கிய நயம் சொட்டச் சொட்
ட சொல்லப் பட்டிருக்கிறது.
ஆனால் இன்று சிங்கள அரசுகள் கையாளும் இலக்கிய நயம் தொட்டுக் கொள்வதற்க்கு புறநானூறூ ஆகுமா என எண்ண வைக்கிறது.
படைவிலகல் மாட்சியை எவளவு அழகாகச் சொல்கிறார்கள் என்று பாருங்கள் படையை விட்டு ஓடுபவர்கள் எவளவுகாலமாக ஒடிக்கொண்டிருக்கிறார்கள் நொங்குக் காலத்தில் இருந்து கிழங்குக்காலம் வரைக்குமா கிழங்குகள் எல்லாம் தோப்புகள் ஆகியும் இப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்களாம் அப்படி என்றால் உலகின் படைகளை எல்லம் ஒன்றாக்கினாலும் கற்பனையின் கடனை அடைக்குமா அந்த தொகை.
என் சின்ன வயதில் ஒரு நன்பன் சொல்வான் இப்படி வானம் ஒருநாள் தலைக்குமேல் விழப்போகிறது, அதற்க்கு இன்னொருவன் பதிலழிப்பான் விழத்துவங்கினாலும் அது பூமியத்தொட 100 வருடங்களுக்கு மேலாகும் என்று.அதுதான் நினைவுக்கு வருகிறது எனக்கு ஏன் எனில் புலிகள் விலகி ஓட்டத் தீர்மானித்தாலும் அதுவும் முடிவுக்கு வர 30 ஆண்டுகள் அவர்கள் தொகையின் பாதி ஓடிமுடியக் காணாது ஏன் எனில் இதைத்தானே வியஜரட்னா, ரம்புக்கல ஏன் ரயாகரன் வரைக்கும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம் இந்தப் பாணர்களின் இயலாமை இலக்கிய நயமும் எமக்கு சுவையாகத்தான் இருக்கிறது.

Monday 3 September 2007

புலிஎதிர்ப்பு என்ற புதியபாதை விடுதலைக்கு ஏன் வெளிச்சம் காட்டாது?

புலிஎதிர்ப்புணர்வு கட்டி எழுப்பப்பட வேண்டியது அவசியம் தான் என்றால்,

என்ன தேவைகள் அதன் அடிப்படையாக கொள்ளத் தக்கதாகும்.

சிங்களத்தின் போக்கில் தானாக வந்திருக்கத்தக்க நல்ல மாறுதல்களை புலிகளின் நடவடிக்கைகள் கெடுத்து விட்டது என்பதாலா?


காகிதங்களில் முடிவுவரை எட்டிய தீர்வுகள் ஜனனாயகத்தின் செங்கோல்களால் பரிதாப கரமாக கிளித்தெறியப் பட்டமைக்கு யார் காரணம் தமிழ்துவேசமா, புலித்துவேசமா?


புலிகருவுற்றதே அந்த சம்பவங்களின் பின்னாட்களில்த் தானே!


இன்று கூட இனப்பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவதில்கூட தன் பொறுப்பை காட்ட தயங்கும் சிங்களத்திடம் கையேந்தும் போக்கு பெற்றுத்தரும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது அல்லவா?


புலிப்போரின் சேதாரங்கள் சிங்கள் ஆட்சியின் அத்திவாரம் வரை ஆட்டம் காணச்செய்தும்,


தமிழர்களின் உரிமைகளின் மீதுள்ள அந்த உடும்புபிடியில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படாமை என்னத்தை சொல்லுகிறது?


சிங்களவாதம் தனக்கு அகிம்சையில் உள்ள பற்றுறுதியைக் நிலைநாட்டுவதற் காகவா அந்த உடும்புப் பிடி புலிப்பயங்கரவாதத்தின் இம்சைக்குள் தவம் கிடக்கிறது என்பதையா?

சுத்தமான ஜனனாயகம் வாழும் நாட்டின் காட்டு மிருகங்களின் கொலைகள் கூட தடுக்கப் படுகிறது.


அரச சிறைக்குள்ளே கூட்டம் கூட்டமாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், "வெளியில் இருந்து வந்த ஆயுத தாரிகளால் கொல்லப் பட்டார்கள்" என்று அரசு தருவது பொறுப்பான பதில்களா?


சிங்கள நிர்வாகத்தின் பாதுகாப்புக் கூட பாதுகாக்க முடியாது தமிழன் உயிர் என்றால்


தமிழனை தன்வீட்டு நாயாக வைத்திருக்கவா சிங்கள ஜனனாயகம் ஆசைப் படுகிறது.
மெலிந்த இனத்தை வலிந்த இனம் ஆடும் நரவேட்டை ஜனனாயகம்,
வலிந்த இனத்திடம் மெலிந்த இனம் செய்யும் தற்க்காப்பு பயங்கரவாதம். தமிழரின் தலைமைப் பொறுப்பு புலிகளின் கையில் சேருவது என்பது சிங்களத்துக்கு உடம்பு முழுவதும் கசக்கின்ற விடயம், ஏன் எனில் பலதலைமுறைகளாக வெற்றியை சாதனையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் ஏமாற்று வித்தைக்கு புலிப்போராட்டமே அதன் புதைகுழிகள் என்பதனாலா? இல்லை தமிழன் துன்பங்களின் மேல் கொண்டுள்ள அக்கறைகளினாலா?

துரும்பைக் கூட தமிழனுக்கு கொடுக்கத் தயார் இல்லை என்ற போக்குக்குத்தான் தமிழர் தலைமை புலிகளிடம் இருப்பது பிடிக்கவில்லையோ? அல்ல தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட சிங்களவர் கொள்கைக்குத்தான் புலித்தலைமை வெறுப்பாகின்றதோ?

நல்லது செய்வதே உண்மையானால் தலைமையை முடிவு செய்கின்ற போறுப்பு தமிழர் தரப்பினதே என்று விலகிப் போகலாமே, புலிகளின் தலைமைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற பயம் ஒன்றால்த்தானே தமிழர் பிரதேசத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரைகாலமாக அரச போக்கு முட்டுக்கட்டையாக இருப்பதன் அடிப்படை நோக்கம். எனவே தமிழ்த்தரப்புக்கு புலிகளின் தலைமையை எந்த அளவுக்கு சிங்களம் வெறுக்கிறது என்பது தமிழர் உரிமையைக் ஒப்படைக்க எந்த அளவு தூரம் மறுக்கிறார்கள் என்பதனால் அல்லவா அளக்கப் படுகிறது.

புலிகள் தவிர்ந்த வேறு ஒரு தலைமையாக இருந்திருந்தால் ஈழத்துக்கு இணக்கமானதாகவே இந்தியப் போக்கு இருந்திருக்கும்.

சரி இன்று நூறு காரணங்கள் சொல்ல வைத்திருக்கிறார்கள் புலி வெறுப்புக்கு, எனவே இதன் துவக்கத்துக்கு வந்தால் என்ன காரணம் சொல்ல முடியும்? இந்திய எடுப்பாரின் கைப்பிள்ளையாக ஆக வில்லை இந்த புலிப் பிள்ளை இது ஒன்று தானே அதன் மூல மந்திரம். சமாதானத்தின் நடுவனாக வந்து முதுகில் குத்திய சதியிடம் எமது இருப்பை காப்பாற்றியது நன்றி கெட்டதனமா? சிங்கள இனத்துவேசம் வேட்டையாடிக் கொன்று கொண்டிருக்கிறது தமிழன் உயிர்களை தன் இனத்தின் இரத்தப் பெருக்கை தடுப்பாதற்க்காக அந்த இனம் போராட்டத்தை துவக்குகிறது. இந்த இரத்தச் சகதிக்குள்ளே ஒரு வெளி விவகாரக் கழுகு ஒன்று தன் தேசநலன் என்ற ஏரை இறக்குகிறது. நாம் எம் இனத்தின் இருப்பைத் தக்க வைக்க அதற்க்கும் ஒரு புதிய பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. தமிழனின் தீர்வு கனமாக இருந்து விடக்கூடாது என்று ஏங்கும் இந்தியச் சிந்தனைவாதத்துக்கு புலிகளின் தலைமைதானாம் ஈழத்தினுடைய துன்பதுக்கு தம்மை எட்டநிற்க்கவைக்கிறதாம்.
வட இந்தியா ஒரு தனிநாடாக இருந்திருந்தால் அதன் வெளிவிவகாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும், அதன் தேசநலன் என்ற கருதுகையின் போக்கு எப்படி இருந்திருக்கும். அதுவே இந்த இந்தியா என்ற நாட்டுக்கும் தேசக் கொள்கைகளாக திணிக்கப் படுகிறது. தமிழ் நாட்டின் உணர்வுகளைப் புறக்கணித்து ஈழத்தவனின் இரத்தத்தில் இந்திய பழி(வெளி)விவகாரம் தேசநலன் என்ற அறுவடைக் கொள்கையை களம் இறக்கியது. நாம் பல ஆண்டுகளாக இரத்தம் கொடுத்து காப்பாற்றிய போராட்டத்தின் கொள்கைகளை தன் தேசநலனுக்கு தூசுதட்டியாக உபயோகப் படுத்த முனைந்தார்கள் நாம் மறுத்தோம் பிடிவாதம் செய்தார்கள், மோசமான அவர்கள் கொள்கைக்கு பலியாகாமையை பயங்கரவாதம் என்று சாதிக்கிறார்கள்.
அகிம்சையால் சுதந்திரத்தை வாங்கியவர்கள் வங்கதேசத்துக்கு போருக்கு சென்ற போது அதை மறந்து விட்டு விட்டா சென்றார்களா? இலங்கை அரசுக்கு எதிராக தமது நாட்டில் பயங்கரவாதத்துக்கு பயிற்சிகள் கொடுத்த போதும் அதை ஞாபகாத்தில் இருந்து அழித்து விட்டா செய்தார்கள்? குறித்த தூரம் வரைக்கு இந்திய விடுதலைப் பயணத்துக்கு காந்தி தேவைப் பட்டார், விடுதலை என்ற சந்திக்கு அப்பால் இந்தியப் போக்குக்கு அவரே முதல் எதிரியானார் அவரால் விதை நட்டு விருட்சமாக்கிய கொள்கைகள் அனைத்தும் அவரோடு கூடவே சமாதி ஆக்கப் பட்டன. ஆங்கிலேயனை முரண்பட்டு தப்பிய உயிர் பிராமணனை முரண்பட்டு உயிர் வாழும் தகுதியை இழந்தது அகிம்சையின் பெருமையை யார் பேசவேண்டும் என்று இனியாவது புரிந்து கொள்வீர்களா?




Friday 31 August 2007

இயலாமையின் சமாதானம்

தன் அநுமானப் பார்வை காலம் நம்பும் தகுதி கொண்டு இருக்க வேண்டும் என்றால் அந்த கதை தற்க்க வியலில் வெல்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து சோதிடனின் பாணியில் தன் விருப்பத்தை சொல்லி அதை விதி என்று சாதிக்க முற்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.
இது வரை வந்த ரயாகரனின் எந்தப் பதிவும் மக்கள் மனங்களை வெல்லும் தகுதியில் இருந்ததே இல்லை.
தன் வயிற்றெரிச்சலை குடிவெறியில் ஆற்றுகின்ற ஒரு குடிகாறன் பேச்சின் தராதரத்திலேயே அத்தனையும் இருக்கிறது.
இவர் எழுத்தாழுமையின் உவமானங்களின் தராதரத்தைப் பாருங்கள்,
தின்பனவின் பின்வருவனவற்றாலேயே சொல்லுக்கு சொல் நாற்றமடிக்க
வைப்பார், இந்த இலட்ச்சணத்தில் பொதுவுடமைவாதம் வேறு இவர் பற்களுக்குள் அகப்பட்டு இம்சைப் படுகிறது.
சொல்லமுடியாத பாதகங்கள் எல்லாம் செய்து சிறைக்குள் வாழுகின்ற ஒருவன் பொதுவுடமைக்கு எதிரான அரசு இது என்று போங்கி எழுந்தானாம்.
ஐயா பொதுவுடமையை ஒருமுறை எழுதிடும் மையளவுக்காவது உன்னுடைய நடவடிக்கைகளில் நன்மைகள் இல்லாத போது எதற்க்கு உந்த வேசங்கள் எல்லாம்?
சிங்களம் தமிழர்கள் எல்லோரயும் புலிகள் என்று பார்ப்பது சரிஎன்று படுவதாலேயே அவர்களுக்கு தீர்ப்பாக வளங்கப் படும் அவலங்களும் சரியானதே என்று திருப்த்திப் படுகிறது.
அது போலவே உமக்கும் புலிஆதரவு என்ற பதத்தை புலிஎன்று பாவிக்கப் படுவது நியாயம் என்று படுகிறது, அதனால் தானோ விசருகள், நாய்கள், எருமைகள் போன்ற சொற்கோவைகளால் விமர்சனம் செய்யப் படுகிறார்கள் புலிஆதரவாளர்கள்.
ஐயோ பாவம் பொதுவுடமை வாதத்தின் கொள்கை!
உங்கள் கருத்துக்கு எதிர் நிலையானவரின் நிலைமையின் நியாயத்தன்மையை விளங்கிக் கொள்ள முடியாதவனுக்குத்தான் வன்முறை வெறி பிறக்கிறது எனவே கருணாகூட்டத்துக்கு தோதான குணம் உம்மிடம் இருக்கிறது ஆனால் இயலுமை பேனாதூக்க மட்டுமே தோதாகிறது.
இரண்டு திருடர்களில் மதிப்பு குறைந்த பொருள் திருடியவன் மனிதாபிமானம் பேசுகிறான் என்றால் தன் இயலாமையின் கொட்டாவிக்கு மனிதாபிமான வேசம் போடுகிறான் என்றுதான் பொருள், அதுபோல் கருணாவின் தேசத்துரோகம் பொருந்தும் அதே அச்சுக்குள் பிசகாமல் உமது துரோகங்களும் பொருந்தும்,
பணத்துக்கு இனத்தை விற்ப்பவனின் வாழ்வுக்கு, மனித சந்தோசத்தின் நிழல் அவன் ஆயுளுக்கு இல்லை. இதை உன்மரணத்தின் மடியிலாவது நீர் உணர்ந்தே ஆகவேண்டும்.

Tuesday 31 July 2007

புலிஎதிர்ப்பை புல்லரிக்க வைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!

புலிஎதிர்ப்பை புல்லரிக்கவைக்கும் ரயாகரனுக்கு வணக்கம்!
இந்தியத்தின் அராயகம் ஈழத்தில் ஜென்மாந்திர சிறைவாச தோசம் கொண்டவர்களை அள்ளி எடுத்து, தமிழர்களுக்கு அரசியல் போதிமரங்களாக ஆக்க முயற்சி எடுத்தது.
அந்த முயற்சியில் வேர்விட்டதா இந்த ரயாகரம்?
தமிழீழம் என்ற சிந்தனையை தன் பகைகளில் ஒன்றாக கருதக் தக்க சக்தியின் அதன் கொள்கைகளால் கற்பம் தரிக்கப் பட்ட போராட்ட
முன்னாள் போராளிக் குழுக்களின் போராட்ட அகாலமரணங்களுக்கு நினைவஞ்சலி பாடவந்த கவியோ?
காலம் காணாத எம்மண்ணின் கல்வி அறிவோ?
பெரும்பான்மையின் விருப்பத்துக்கு பாதை அமைப்பதே பகுத்தறிவின் சட்டம்.
எங்கே உங்கள் வாதம் பெரும்பான்மைக் குரலுக்கு சொந்தம் என்று சொல்ல செயல்களால் முடியுமா?
வாய்வார்த்தைக்கு "குளத்தைக் கடல்" என்றும் சொல்ல முடியும்,
சந்திரிக்கா கூட "தமிழ் மக்கள் என்பக்கம் தான்" என்றும் சொல்ல முடியும்.
பகுத்தறிவு என்றால் என்ன? லங்காபுவத்திடம் அறிவை இரவல் வாங்கி புலிப்பலத்தை நகையாடுவதா?
ஜந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் புதுமுகங்களுக்கு, புதுக்கதைகள் சொல்லுகின்றமை வழமை. அடுத ஆட்சியில் அவர்கள் குட்டிச்சுவரில் காதிதம் தான் தின்று கொண்டிருப்பார்கள் என்பதும் சிங்கள அரசியலின் பரப்பரைத்தோசம்.
இதேபாணியிலேயே தாங்கள் கூட கரைந்து கொண்டிருப்பது பற்களே தேயும் வரைக்குமா? என்ற சலிப்பேதும் வருவதில்லையா?
புலத்திலே புலிஆதரவு கடல் போல் திரண்டு காலத்துக்கு உண்மையைக் காட்டுவது போல்,
எங்கே சிறு குட்டை அளவுக்காவது திரள உங்கள் கருத்துக்களுக்கு கூட்டம் உண்டா?
இல்லை பகுத்தறிவுத் திரவியம் பொங்கிவளியும் ஒரே நிறைகுடம் நீங்கள் தானா எமக்குள்?
சுவையை அறிவிக்கும் உணர்வுகள் நாவில் செத்த பிறகு ஒருவன் உணவு உண்பது அவன் உடம்பின் வாழ்வுக்கு மட்டும்தான்.
அவ்வாறே சில யென்மங்களின் பணப்பேராசை இவர்கள் மனித உணர்வுகளை சாவடித்து விடுகிறது, எங்கே உங்கள் அறியாமைக்கு கொஞ்சமாவது வெளிச்சம் காட்ட நாம் ஆசைப் படுகின்றோம் ரயாகரன்.
கண்களை விற்று சித்திரம் வாங்க ஆசைப் படாதீர்கள்!

Saturday 14 July 2007

நோய்ப் பிரியன் பக்கத்தில் புத்தகங்கள் பார்த்தேன்!

புண்ணின் சொறி கூட சுகமாய்த்தான் இருக்கும்; சொறியச், சொறிய,
ரயாகரனிசத்தின் புத்திக்கு அது ஒன்றேதான் சுகத்துக்கு மிச்சமாய் இருப்பது வருந்தத் தக்கதே!
ஈழத்து மக்களின் துன்பங்களுக்கு யார் உண்மையான பாதுகாவலன்?
புலிகளா? இல்லையே அந்த பாசிசவாதம்தானே அதன் நோய் மூலமே!
சிங்களவாதமா? விபச்சார அரசியலின் கூத்தாடிகள் அல்லவா அவர்கள்!
சிங்கள அரசின் தத்தெடுப்பு தமிழ் குழுக்களா? வீட்டைக் கொழுத்தும் அரசவாதத்துக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் பிசாசுகள் அல்லவா அவர்கள்?
அப்படி என்றால் இவர் தயாரிக்கும் திரைப்படக் கதையின் நாயகனுக்கு இவர் கற்பனையைப் பிழிந்துதான் உருவம் படைக்க வேண்டுமா?
அனைத்து தரப்பையும் வில்லன்களாகவே பார்க்கின்றார் என்றால்,
புலிஎன்ற வில்லன்கள் குறித்து, அரசு என்ற வில்லன்கள் கழிந்து விடுகின்ற அண்டப் புளுகுகளை எல்லாம், முழங்காலை முட்டுவைத்து முழம்நாக்கால் நக்கி எடுத்து அவற்றை அக்கறை யோடு தனது செய்திச் சேவையில் முழங்குகிறாரே!
தழிழர்தரப்பின் உரிமைகளை, சிங்களதரப்பின் அதிகாரம் கை நழுவவிடாமல் இருப்பதன் காரணம், புலிகளின் பயங்கரவாதப் போக்குத்தான் என்றால், அது மாற்றுக் குறையாத பைத்தியக் காறத்தனத்தின் பேச்சல்லவா?
புலிக்காச்சலில் சிங்களவாதம் புலிஎதிர்ப்பாய் என்னத்தை பிதற்றிக் கொண்டிருக்கின்றதோ,
அதன் தராதரத்திலேயே ரயாகரனின் பிதற்றல்களும் சமமாய் உக்காருவதால், இவர் வாயாலேயே சிங்கள வாதத்தை இளக்காரம் பண்ணிக்கொண்டு எப்படி புலி எதிர்ப்புக்கு கனவு காண மட்டும் அவர்கள் சிந்தனையையே இரவல் வாங்கலாம். இதுதான் முதிர்ச்சி உடைய பகுத்தறிவா?
இல்லை இகழ்ச்சிக்கு பயந்த பிழைப்புவாதமா?
பெரும் படைபலம் கொண்ட வல்லரசாலேயே, கிள்ளி எறிய முடியாத போராட்டம் என்றால் அது மக்கள் ஆதரவு என்ற வேரில் இல்லாமலா இருந்திருக்கும்.
"மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை."
"புலிகள் ஆயுதங்களைப் போட்டால் அவர்களை, அவர்களின் முன்னாளின் வவ்வால் பாவங்கள் எல்லாம் பழிதீர்க்க கிழம்பிவிடும்"
இப்படி தினமின பொறாமைப் படும்படி கனவுகாணுவது,
அதிமேதாவித்தனத்தின் ஞானப்பார்வையினாலா? இல்லை புலித்துவேசத்தின் பித்தப்பார்வையினாலா?
இந்தப் பித்தப்பார்வையை வைத்து புத்தகம் வேறு எழுதுகிறாரம்.
முதலில் உங்கள் பார்வையைக் குணப்படுத்த வழியைப் பாருங்கள், விடுத்து எங்கள் பார்வைக்கும் காமாளையைத் தர ஆசைப் படாதீர்கள்.

Wednesday 27 June 2007

காட்டிக்கொடுப்பின் கண்கட்டி வித்தை!

புலிஎதிர்பின் உழைப்பு குளிர்காய வைக்கப் போவது யாரை?

மக்களையா? சிங்களஇனவாதத்தையா?

ஒரு கோடு பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு தேவைப்படப் போவது இன்னொரு கோடே! எனவே நன்மையாலோ, இல்லை தீமையாலோ புலி என்ற கோட்டை பெரிதோ, சிறிதோ ஆக்குவதற்க்கு அந்த இன்னொரு கோடு எங்கே?

உங்கள் கொள்கைகளுக்கு நேர்மை இருந்தால், இன அவலத்துக்கு நிரந்தரமான தீர்வொன்று உங்களால் இனங்காட்டப் பட்டாமலே, புலிதான் மக்களின் துன்பம் என்று முறையிடுவது பொருத்தமாகுமா?

பிறந்த குழந்தைக்கே மரணத்தை தீர்ப்பாய் எழுதும் சிங்களந்தின் இனவாதக் கொடுமையை விட்டு விட்டு. பேச்சுரிமை புலிகளால் மறுக்கப் படுகிறது என்னும் குற்றச்சாட்டுக்குத்தான் அவசர நீதிவேண்டிக் கிடக்கிறதா?

புலிஎதிர்ப்பும் சிங்களத்தை வசை பாடுவது தம் இரகசிய தொடுப்புக்கள் வெளியால் தெரிவதை மறைக்கின்ற நடவடிக்கைதான். இல்லை நீங்கள் புதிதயாய் வசைபாடித்தான் சிங்கள எதிர்ப்புக்கு தமிழரில் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் உள்ளதா?

உங்கள் சிங்களவசைபாடலின் பயன் சிங்களத்துக்கு புதிதாய் ஒன்றும் ஆக்கப் போவதில்லை. பதிலுக்கு நன்மை மட்டு உண்டு, அவர்களின் கூலிகள் என்ற நிலையில் புலித்துவேசம் மக்களிடம் விலைப்படுவதைக் காட்டிலும், அரசியல் தொடர்புசார்பிலாக் கருத்து என்ற வேடம் கிடைத்து விடும். அல்லவா உன்கள் புலம்பல்களுக்கு. இதனால் தானே ஒவ்வொரு துரோகக்கூட்டமும் மற்ற துரோகக் கூட்டத்தை சிங்களத்தின் அடிவருடிகளாக முழங்க வேண்டிய தேவை வேறு இருக்கிறது.
தமிழ்வட்டம் தமிழர்களுக்கு விடுகிறது பட்டம்.

எழுத்து சோத்துக்கே என்றாலும் சொல்ல பேருக்கு ஜனனாயகம்.

85 நாட்கள் வவ்வால் பிழைப்புக்கு வஞ்சம் தீர்கக ஜனனாயகம் என்ற வேசம் ஒன்றுதான் கிடைத்ததா?

செஞ்சோலைச் சிறார்களின் மரணத்தில் உலகே வாய் அடைத்து நிற்க்க, புலிஎதிர்ப்புக்கு கதை, வசனம் எழுதிய உங்கள் அயோக்கியபுத்தியை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

கருத்தால் புலியை வெல்ல வக்கு இருந்தால் வேண்டுமா? பினாமி, சுனாமி பாஸிசம், புலியிசம்.

Monday 25 June 2007

பொம்மை ராடர்களை வளங்கி தேற்ற நினைத்த இந்தியாவுக்கு, சிங்களம் உண்மை ராடர்களை வாங்கிப் பதிலடி!!!

வவுனியாவில் தமிழ்நாட்டை கண்காணிக்கும் வகையிலான ஜே.வை-11 என்ற முப்பரிமாண ராடாரை சிறிலங்காவுக்கு சீனா வழங்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு சிங்கள ஊடகமான "லக்பிம" வெளியிட்டுள்ள செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சீனாவின் எலெக்ரோனிக் ரெக்னோலொஜி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஜே.வை-11 (JY-11) ரக தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறியும் முப்பரிமாண ரடார்களையும் அரசு கொள்வனவு செய்துள்ளது. இந்த ராடார்களை கொள்வனவு செய்வதற்கு அரசு கடந்த ஆண்டு கொள்வனவு பத்திரத்தை சமர்ப்பித்ததுடன் முற்பணத்தையும் செலுத்தியிருந்தது.
எனினும் சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்ததனால் அது கைவிடப்படடிருந்தது. ஜே.வை-11 ரடார் தொகுதி எஸ்- அலைவரிசை (S-Band) கொண்டது.
இது தாழ்வாக பறக்கும் வானூர்திகளைக் கண்டறியக்கூடியதுடன் அது தொடர்பான தகவல்களை வான் பாதுகாப்பு தொகுதிக்கும் வழங்கக்கூடியது.
இதனை வவுனியாவில் பொருத்தினால் அது தமிழ்நாட்டில் உள்ள வானூர்திகளின் நடமாட்டத்தையும் கண்டறியக் கூடியது. ஜே.வை-11 ராடார்கள் மூன்று நகர்த்தக்கூடிய பகுதிகளைக்கொண்டது.
எனவே விரைவாக பொருத்தக்கூடியதும் பிரிக்கக்கூடியதுமாகும்.
5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த ராடார் தொகுதி 160 கி.மீ தூரவீச்சு கொண்டது. இந்த ராடார்கள் விரைவில் சிறிலங்காவை வந்தடைய உள்ளன, அதனை நிறுவுவதற்கான ஆயத்த வேலைகளை சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த மே மாதம் அமெரிக்காவின் நிபுணர்கள் சிறிலங்காவிற்கு வந்த போது வான் படையினர் தமது எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளில் வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை பொருத்துவது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அமெரிக்க தயாரிப்பான வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஸ்ரிஞ்சர் ஏவுகணைத் தொகுதியே (Hellfire missile system) எம்ஐ-24 உலங்குவானூர்திகளில் பொருத்துவதற்கு மிகவும் செயற்திறன் மிக்கது என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மேலும் கட்டுநாயக்க வான்படை தளத்தில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் நடைபெற்ற 3 மாதத்தின் பின்னர் வான் பாதுகாப்பு பொறிமுறை இயங்க ஆரம்பித்துள்ளது. ராடாருடன் இணைக்கப்பட்ட வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் முக்கியமான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமான படை நிலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் இலகுரக வானூர்திகள் கட்டுநாயக்கா வான்படை தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது இந்த துப்பாக்கிகள் எதுவும் இயங்கவில்லை. தாழ்வாக பறக்கும் வானூர்திகளை கண்டறிய என கொள்வனவு செய்யப்பட்ட இந்திரா-02 ரக ராடார்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு குறைபாடுகள் வான் பாதுகாப்பு தொடர்பான முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேவையை வான்படைக்கு ஏற்படுத்தியிருந்தது. முன்னறிவிக்கும் பொறிமுறை, சுடுவலு கட்டுப்பாட்டு தொகுதி போன்றன முழுமையான மறு சீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. சிறிலங்கா வான் படையினரின் தேவைகளுக்குரிய பரிந்துரைகளை வழங்குவதற்கென அமெரிக்க மற்றும் இந்திய நிபுணர்கள் குழுவும் சிறிலங்காவிற்கு வந்திருந்தது. இராணுவ முக்கியத்துவமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள ராடாருடன் இணைக்கப்பட்ட வான் எதிர்ப்பு துப்பாக்கிகளின் திருத்த வேலைகளே இங்கு முதன்மையாக கருதப்பட்டது. தற்போது அவற்றில் பல திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வான் பாதுகாப்பு சாதனங்கள் ராடாருடன் இணைக்கப்பட்டுள்ளன, இந்த ராடார்களின் வானூர்திகளை கண்டறியும் தூரவீச்சு 32 கி.மீ ஆகும். இந்த வான் எதிர்ப்பு சாதனமானது சுயமாகவே இலக்கை நோக்கி வான் எதிர்ப்பு சாதனத்தை இயங்கவைக்க கூடியது. வான் எதிர்ப்பு சாதனங்களை மீண்டும் இயங்க வைத்துள்ளதனால் அனைத்துலக வானூர்தி நிலையத்தை எதிர்வரும் ஜூலை 1 ஆம் நாளில் இருந்து இரவில் இயங்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

<நன்றி புதினம்>

Friday 22 June 2007

பற்களை பணத்துக்கு விற்றுவிட்ட பாம்புகளின் போர்ப் பிரகடனம்!

1. புலிஎதிர்ப்பு என்பது உண்மையான மனிதாபிமான அக்கறையினது முறையீடுகள்தானா?
போர் அழிவுகளிடம் தோற்றுப்போய் உள்ள, இந்த சிங்களச் சக்தியின் அரசியல் குணம் என்பது, இத்தகைய சூழ்நிலைகளுக்கே நிமித்தமுடியாத நாய்வாலாகவே இருக்கின்ற போது;
புலிஅல்லாத வேறு
எந்த மாற்றுநிலமைகளாலாவது, சிங்களத்தை இந்த அளவு தூர நெருக்கத்துக்கு கொண்டுவர முடியுமா?
தமிழர் தரப்பின் வாழ்வுகள் இத்துணை மனித அவலங்களின் விலைகொடுப்புக்களுக்குப் பின்னரும் ஒரு முற்போக்குத்தனமான தீர்வையேனும் காட்டுதலுக்குகூட முன்வைக்க துப்பில்லாத சிங்களவாதத்தின் நயவஞ்சக அரசியல்; தன் பிடிவாதத்தனத்தை நியாயப் படுத்த புலிகளை பயங்கரவாதிகளாக மட்டம் தாழ்த்துகின்ற முயற்சி எந்த வகையிலும் தகுதியானதாகுமா? அப்படி சொல்லப்படுவதானது புலிப் பயங்கரவாததின் கரங்களில் தமிழர்களை ஒப்படைத்து விடக்கூடாது என்ற அக்கறைதான் அவர்களை இந்த சிலுவை சுமக்க வைப்பிக்கிறது என்பதையே சொல்லாமல் சொல்லுகிறதல்லவா அந்த வாதம் .
இந்த சிங்கள ஓநாய்களுக்கு தமிழ்வெள்ளாடுகளில் கொண்ட உணவுப் பாசம் அல்லவா இப்படிக் கதைக்க வைப்பிக்கிறது.
இதை உணரமுடியாத அறிவுத்தராதரத்தில் இருந்து கொண்டு, புலிஎதிர்ப்புவான்கள் தமது பகுத்தறிவை, வாங்கிய பணக்கட்டுக்களின் மேல் மல்லாக்காக படுக்கவைத்து விட்டு, கள்ளப் பகுத்தறிவை எம்மிடம் கொட்டி விற்க்க அல்லவா வருகிறார்கள்.

புலிப்பிடிவாதங்கள்தான் மக்கள் அவலங்களுக்கு மூல வேர் என வாதிடுகிறார்கள்.

தமிழீழம் என்ற சொல்லில் இருந்து ஒருபடியேனும் புலிகள் இறங்கியது கிடையாது என சொல்லப் படுகிறது,
எந்தத்தரப்பாலுமே ஏற்றுக்கொள்ளப் படமுடியாத படுபிற்போக்குத் தனமான தீர்வில் இருந்து ஒருபடியேனும் ஏறாமல் நிற்க்கிற சிங்களப்பிடிவாதம்.

ஏதோ இவர்கள் தரமான ஒன்றைக் கொடுத்து, தட்டிவிடப் பட்டிருந்தால் ஆவது புலிகள் பிடிவாதமும் பேசப் படும் தகுதியை எட்டி இருக்கும், எனவே ஒன்றையுமே கொடுத்துப் பாராமல் அவர்கள் வாங்கமாட்டார்கள், என்று சொல்வதானது முட்டாள்களிடமே எடுபடும் பேச்சுக்கள் அல்லவா?இவர்களின் புலிஅவதூறுகளை தோள்களில் சுமந்து புலம், புலமாக விற்கத்திரியும் புலித்துவேசிகளுக்கு இவை எல்லாம் அவர்கள் பகுத்தறிவுக்கு உறைக்கப்படவே மாட்டாதா?

இல்லை புலிகள் துவசத்தின் பின்புதான் இவர்கள் வீரங்கள் பேசப்படுவதென்று விரதம்தான் ஏதும் இருக்கின்றதா?அப்போதும் இவர்களால் படமெடுத்து சீற முடியாதே! அப்படி என்றால் நக்கல்போராட்டத்தினூடுதான் வாங்கித்தருவார்களா?

Tuesday 19 June 2007

வளையாமையின் வரலாறு பிரபாகரன் என்கிறார் கோத்தபாயா!

"நிலங்களைக் கையகப்படுத்துதல் அல்ல எமது போரின் குறிக்கோள்!
புலிகளைப் பலவீனம் செய்வதே அதன் உண்மையான எண்ணமாகும்" என் கொழும்பு வார இதளுக்கு பகருகிறார், கோத்தபாயா.

கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:
முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.
முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.
நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.
இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.
இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளினால் நாம் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது. நமது நாட்டின் பாதுகாப்பை நாம் தியாகம் செய்துவிட முடியாது.
இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து அனைத்துலகிலிருந்து சிறிலங்காவை தனிமைப்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதை நாங்கள் புத்திப்பூர்வமாக கையாளுவோம். ஆனால் அதற்கு முன்னர் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும். அதுதான் முக்கியமானது. ஏனெனில் வரலாறு அதனையே நமக்குக் காட்டியுள்ளது. எத்தனை அரச தலைவர்கள்- எத்தனை தலைவர்கள் இதுவிடயத்தில் இறங்கியிருக்கிறார்கள். கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.
பிரபாகரனின் மனநிலையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் வளையாத மனிதர்.
தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள்வதாக அவர் சொன்னதே இல்லை.
நமது தலைவர்களை அவர் தவறாகப் புரிய வைத்திருக்கிறார். அதே நேரத்தில் தனது சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை பிரபாகரன் கையாளுகிறார்.
இதனை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் எதனையும் மூடி வைத்திருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளுக்காகவும் அரசியல் தீர்வுகளுக்காகவுமான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என்ன சொல்ல வருகிறேன் எனில், பிரபாகரன் அனைத்து நேரங்களிலும் என்ன செய்வார் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.
உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.
நம்முன் உள்ள ஒரே வழி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பேச்சு மேசையில் அவர்களை உட்கார வைப்பதுதான். ஒவ்வொருவருமே இதற்காக முயற்சிக்கின்றனர். பிரபாகரனோ வெவ்வேறான உத்திகளினூடாக, அரசாங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் அழுத்தங்களைச் செலுத்த விரும்புகிறார். அதனூடே இராணுவ ரீதியாக வலுப்பெற நினைக்கிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் என கண்டிப்பான ஒரு காலவரறையை வைக்க முடியாது. ஆனால் அதனை எப்படிச் செயற்படுத்துவது என சில திட்டமிடல்களை வைத்திருக்கலாம். கிழக்கைப் பார்த்தால் மீள கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் அதுவல்ல இலக்கு. அந்தப் பகுதியின் மீதான நமது உரிமையை எப்படி நீட்டித்து வைப்பது என்பதும் உரிய சட்டம் ஒழுங்கை அங்கு உருவாக்கி அபிவிருத்திகளை மேற்கொள்வதும்தான் முக்கியமானது. அங்கு அரசியல் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அபிவிருத்திகளைத் தொடங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் நமது முழு கட்டுப்பாட்டில் அது உள்ளதாக பார்க்க முடியும். அங்கு தேர்தல் நடத்துவது என்பது அரசியல் முடிவு. அது தொடர்பில் கருத்து கூற முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, மட்டக்களப்பு மற்றும் வவுனியா என பரவியிருந்தனர். இராணுவத் தளபதிகளும் தங்களது இராணுவத்தினரை உத்திப்பூர்வமாக நகர்த்தினர். பல உத்திகள் உள்ளன. வன்னியை எடுத்துக் கொண்டால் தளபதிகள் வித்தியாசமான உத்தியைக் கையாளுவர். ஏற்கெனவே அவர்கள் கையாண்டதில் நம்பிக்கையிருப்பதால் அதனையே கையாளுகின்றனர்.
நமது இராணுவத்தினர் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. சந்தேகம் எதுவுமே இல்லை. அவர்களும் நம்பிக்கையோடு உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் இராணுவத்தின் கை ஓங்கி வருகிறது. கிழக்கைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கை கைப்பற்றியுள்ளனர். வன்னியில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி சரியாக செய்து வருகின்றனர்.
ஒரு பயங்கரவாத இயக்கம் 30 ஆண்டுகாலம் போராடி வருகிறது. அந்த இயக்கத்துக்கு ஆயுதங்கள் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு சரியான தொடர் வலைப்பின்னல் உள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்திருக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துடன் நாம் போரிட்டு வருகிறோம்.
வன்னிச் சமரில் அழிவு ஏதும் நமக்கு ஏற்படவில்லை. நாம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளோம். வன்னியில் நிலங்களை மீட்பது நமது நோக்கமும் அல்ல. விடுதலைப் புலிகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்த வேண்டும். எதற்காக வன்னிச் சமரில் அழிவு ஏற்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பாரிய இழப்புகளுக்கு நாம் காரணமாக இருந்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக நமது இலக்கான அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.
வன்னியில் மோர்ட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில்தான் ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
தற்போதைய நிலையிலிருந்து 11 கிலோ மீற்றர் முன்னால் நாம் உள்ளோம். முன்னரங்க நிலையிலிருந்து குறிப்பிட்ட பிரிவினர் வந்திருக்கின்றனர். அதற்காக இழந்துவிட்டோம் என்பது அல்ல. அது ஒரு உத்தி.
உண்மையில் வன்னியை கைப்பற்றுவதில் விருப்பம் இல்லை. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. நாம் விடுதலைப் புலிகளின் பலத்தை போராளிகளை- சொத்துகளை- தளங்களை பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் நாம் செய்திருக்கிறோம்.
உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளாமலும் தளபதிகளின் திட்டங்களை அறிந்துகொள்ளாமலும் மக்களுக்குத் தவறான தகவல்களை சில ஆய்வாளர்கள் தருகின்றனர். அரச தலைவரின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் தனிப்பட்ட விடயமாக நினைக்கக் கூடாது. நாட்டின் பிரச்சனையாகத்தான் கருத வேண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க நாடு ஒத்துழைக்க ஏண்டும். பயங்கரவாதத்தைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் உள்ளிட்ட இதர கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்- பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்த மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வடக்கில் போர் நடத்த இராணுவத்துக்கு விருப்பம் இல்லை என்று அண்மையில் இராணுவத் தளபதி கூறியிருந்தார். நானும் அதனைத்தான் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் என்னவெனில் நிலங்களைக் கைப்பற்றுவதில் இராணுவத்துக்கு விருப்பம் இல்லை. புலிகளை பலவீனப்படுத்தவே விருப்பம். அவர்களை பேச்சு மேசைக்குக் கொண்டு வர வேண்டும்.
5 மிக் 29 வானூர்திகளுக்காக 75 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவு செய்துள்ளதாக எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? வான் படையின் தேவை என்னவோ வான் படையின் பாதுகாப்பு என்னவோ அதனடிப்படையிலே கொள்வனவை இறுதி செய்வோம்.
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயம் ஒட்டுமொத்தமாகவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. உண்மை நிலைமையை வெளிப்படுத்த நாங்கள் தவறியிருக்கக் கூடும். எந்த ஒரு செயற்பாட்டையும் நீதிமன்றின் முன்பாக விவாதித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் இராணுவத்துக்கும் காவல்துறைக்கும் உதவுகிறேன். அது ஒரு குற்றமெனில் அதனையே நான் செய்வேன். அதற்கு அப்பால் வேறு எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. ஆனால் ஏன் என்னை எல்லோரும் தாக்குகின்றனர் எனப் புரியவில்லை.
விடுதலைப் புலிகள் என்னைக் கொல்லப் பார்க்கின்றனர். உளவுத்துறையின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் முதல் இலக்கு நான் தான். இப்போது அரசியல்வாதிகளும் என்னை இலக்கு வைத்துள்ளனர். ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர். மின் அஞ்சல்கள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நான் மிகவும் நேர்மையான மனிதன். இராணுவத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது எனது இலக்குகளில் ஒன்று. ஆயுதக் கொள்வனவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆயுதக் கொள்வனவு வெளிப்படையானதுதான் என்பதை உறுதியாக என்னால் கூறமுடியும். இடைத்தரகர் இல்லாமல் - மூன்றாம் நபர் இல்லாமல் அரசாங்க நிறுவனமே ஆயுதக் கொள்வவு செய்து வருகிறது.
யாரேனும் ஒருவர் நான் இந்த ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தங்களின் மூலமாக ஒரே ஒரு ரெட் செண்ட் பெற்றதாக நிரூபித்தாலும் பதவி விலகுதல் மட்டுமல்ல. வாழ்வதற்கும் நான் விரும்பவில்லை. நான் மிகவும் கௌரவமான மனிதன். எவர் வேண்டுமானாலும் விருப்பபட்டால் விசாரணை செய்து கொள்ளட்டும். நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவன். கர்மா மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
நான் ஐக்கிய நாடுகள் சபையை குற்றம்சாட்டியதாகக் கூறுவது தவறு. 30 ஆண்டுகளாக செயற்படும் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். உள்ளுர் சக்திகள் மூலம் அனைத்து இடங்களிலும் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை இதுவிடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளைக் கையாளுவதைப் போல் எங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளக்கூடாது.
விடுதலைப் புலிகள்- பயங்கரவாத இயக்கம். நாங்கள் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எங்களுக்குத்தான் அவர்கள் உதவ வேண்டும். அந்த பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற எங்களுக்கு உதவ வேண்டும். அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றம்சாட்டும் சமநிலையைக் கையாளக் கூடாது.
அதேபோல் கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை. கடத்தல் சம்பவங்களை நான் எதிர்க்கிறேன். கடத்தல்கள் என்பதும் இராணுவ நடவடிக்கைகள் என்பதும் வெவ்வேறானது. இரண்டையும் சிலர் சமமாகப் பார்க்கின்றனர்.
கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான். அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் அது ஒரு மறைமுக இராணுவ நடவடிக்கை அல்ல. ரணில் தவறாக சொல்கிறார். இராணுவம் சில உளவுரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதனை கடத்தல் என்றால் அது தவறு என்றுதான் நான் கூறினேன். (What I am saying is, when the military conducts some intelligence operations and if you try to call them abductions, it is wrong).
கொழும்பில் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடக்கும் கடத்தல்கள் தவறானது என்று கோத்தபாய அதில் கூறியுள்ளார்.

<நன்றி புதினம்>

Monday 18 June 2007

பாம்பும் சாகாமல், கம்பும் நோகாமல் காலம் போரைப் பொத்தி வைத்திருந்தால்த்தானே துரோகிகள் காட்டுக்கு மழை!

புலிஎதிர்ப்புக்கு கலை ஆடுவதென்பது, பணத்துக்கு பத்தையும் பறக்கவிடும் மானசிகாமணிகளது தொழில்த் தர்மம்.
தன்இனத்தின் அவலங்களில் பணம்பண்ணும் வித்தை துரோகம்.
நாய்கேன் போர்த்தேங்காய் நடுவீட்டுக்குள்ளே உருட்டவா?
அந்த போர்த்தேங்காய் படும் பாடுதான் இந்த இனவிடுதலைஉணர்வு இந்த ஜென்மங்களிடம் இருந்து விலை தெரியாமல் விற்கப் படுகின்றது.
விளங்காதவர்களை விலைக்கு வாங்கும் கடைதான் துரோகம்,
பின்பு புலித்துவேசத்தின் மந்திரங்கள் ஆக ஆக்குகிறது துரோகப் பணம்.
பணத்தைக் கண்டு வாய் ஒழுக்கு விடும் ஜென்மங்களே! ஜனனாயகம் உங்கள் வாய்க்குள் பேசப்பட அது என்னபாவம் செய்ததோ?
உங்கள் நடவடிக்கைகளின் பயனால் சமூகத்தின் ஒதுக்கல்கள் ஆகிநீர்கள், இன்று வானொலிகளிலும், இணைய பதிவுகளிலும் பந்தா யாருக்கு காட்டுகிறீர்கள்?

பைத்தியக்காறன் புத்தி மற்றவனைப் பைத்தியம் என்பது போல்,
ரயாகரனுக்கு மற்றவர்களை பணத்துக்கு குப்பை கொட்டுவதாக சொல்வதில் ஒரு திருப்த்தி வைக்கோ, நெடுமாறன், சு.ப.வி போன்றவர்களை
உங்கள் புண்ணின் அரிப்பிற்க்கு இதுதான் மருந்து என்றால் நாம் என்ன செய்ய முடியும்!!!

புலித்துவேசம் விற்கும் கடையின் மலிவான விளம்பரங்கள்!

இந்த புலித்துவேசிகளுக்கு; காடைத்தனம், தாதாத்தனம், றௌடித்தனம் நிரம்பி வளிகின்ற அறாயகக் கும்பலே புலிகள் என சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அந்த நிர்வாகத்தால் வெளிநடத்தப் பட்ட xபுலிகளுக்கு இவர்கள் மேடையில் பொன்னாடை போர்த்தி, ஜனனாயகம் இவர்மீது கொண்ட அளப்பெரிய காதலே, புலிக்கூட்டத்துடனான உறவுமுறிவுக்கு வழிகோலி விட்டதாக ஜனனாயகத்தின் பாசமலர்கள் படம் காட்டுகிறார்கள்.
கொலைக் கூட்டத்துக்குள் இருந்து வந்த ஒருவருக்கு, உங்கள் போக்கு ஆராத்தி எடுக்க காத்திருப்பது, உங்கள் நடவடிக்கைகளின் விதையாய் இருக்கத் தகுதியானது வெறும் புலிஎதிர்ப்பா? அல்லது ஜனனாயகத்தின் பற்றுதலா காரணமாக இருக்க முடியும்.
நல்ல நடவடிக்கைகளால் புகழ் பேசப்படுபவர்களை புலித்துவேச விளம்பரங்கள் மாதிரிகளாக எடுக்கப் பட்டால் அது அழகு, தவிர சமூகத்தால் சேறுபூசப் பட்டவர்களே மாதிரிகளாக கொண்டுவரமுடியும் என்பது உங்கள் தரக்குறைவான கொள்கைக்கு அதுவே விதி.
எனவே ரயாகரன் உங்கள் பாராட்டைப் பெறும் ஜெயதேவன், குகதாசன் இவர்களைத் அறிந்திருப்பவர்களால் அறிந்திருக்கப் படாத உங்களின் கொள்கைகள் கூட அவர்கள் பேரால் மட்டுமே அசிங்கப் படப் போகிறதே.

Sunday 17 June 2007

நேர்மை, நியாயம் எதைப் பற்றியுமே கவலை கொள்ளாதது துரோகம்!

1. தமிழ்தேசத்திடம் இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டா?


2. ஆம் என்றால் அதை அகிம்சையால் பெற்றுத் தரக்கூடிய பண்பான அரசியல் பாரம்பரியம் கொண்டதா சிங்களவாத அரசியல்?


3. இல்லை என்றால் புலிவாதத்தின் போராட்டத்தை உள்வாங்கி தீர்வை பெற முயற்சி செய்வதா? புலியை புறந்தள்ளிக் கொண்டு அரசாய்த் தருவதை வாங்குவது சிறந்ததா? இலை மதிப்பான தீர்வை புலியை உள்வாங்கிக் கொண்டு பெற்றபின் புலியை புறந்தள்ள நினைக்கும் நவீன முயற்சியேன் உங்களிடம் இல்லாமல் போனது. புலிகளை அதன் பிறகு கழுத்தைப் பிடித்து தள்ளுவதென்பது மிகவும் கடினம், ஆதலால் உரிமையே இல்லாமல் போனாலும் பாதகமில்லை, சிங்களவன் கரத்தோடு எமதுகரத்தையும் பலப்படுத்தி புலிகளை அழிபதொன்றே உங்கள் புலிவிரோத-தேசியத்தின் தலையாய கொள்கையா?

ரயாகரன்; நீங்கள் கூறுவது புலிகளின் பயணம் பாவம் சுமந்தது என்று, நீங்கள் நிரூபிக்க வேண்டியது புலிகளின் பயணம் பாதை தொலைத்ததா என்றே!

அவர்களை அடக்குமுறையாளர் என்கிறீர்கள், நீங்கள் நிரூபிக்க வேண்டியது மக்கள்-ஆதரவு அவர்களை அநாதையாக்கிவிட்டதா என்பதனையே!

புலிச்சமர்களின் நிலை பாவம், பரிதாபம் என்கிறீர்கள். சமபலம் என்றபேச்சுக்கே எந்த விதத்திலும் அருகதியில்லாத புலிப்படையை அதன் இருபது மடங்கு ஆளணி, ஆயுதவளம் கொண்ட ஒரு அரசால் முப்பது வருடங்களாக வெல்லப்பட முடியவில்லையே அது ஏன் என்பதை விளக்க முடியுமா உங்களால்.
நடவடிக்கை என்பது வேறு, பேச்சு என்பது வேறு, வெறும் பேச்சுக்கு எல்லாம் வென்றுவிடும் திறமை உண்டு என நீங்கள் நினைத்தால் உங்களை வரவேற்க்கக் காத்திருப்பது கீழ்ப்பாக்கமோ, அங்கோடையோதான்!!!

தமிழ்ச் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!

தமிழ் சுரங்கத்தின் ஆண்டிகள் மடம் கட்டுகிறார்கள்!
இந்தமடத்தின் புலித்துவேசிகள் சிங்களச் செல்வாக்கின் கூடாரத்துக்குள் வாழும் புலித்துவேசிகளை மதிப்பதில்லை.
மாற்று அரசியல்-கொள்கை இல்லாத சிங்களத்தின் அரோகராக்களாம் அவர்களை.
ஒரு ஆண்டியின் பகுத்தறிவு சொல்கிறது இப்படி,
புலிப் போராட்ட வண்டிக்கு தமிழீழம் என்ற குறிக்கோள் இழுக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட சுமை, இந்தியா என்றவல்லாதிக்கம் அதன் பாதையின் குறுக்கே கிடக்கும் போது தமிழீழம் என்பது வெறும் கனவுதான் என்கிறது.

ரயாகரனின் கைதுக்காலம்
சிறிது வித்தியாசமானதாக இருந்தது, அவர் செய்த புண்ணியம்.
போராட்டக் புரளிகளை புலிகள் களைஎடுத்துக் கொண்டிருந்தகாலம், மக்கள் உணர்வு இந்த நடவடிக்கைகளால் ஓரளவு காயப்பட்டிருந்தது உண்மைதான். ஏன் எனில் அவர்களிடம் புலநாய்வுப்படை ஒன்று இருந்திருக்கவில்லையே முன்கூட்டியே அறிந்திட, இவர்கள் புலிகளையே களையெடுக்கும் இந்திய எஜமானியின் கட்டளையை கையில் வைத்திருந்ததை.
எனவே இவரின் கைதின் போது, வெறும் மாணவன் என்ற கோதாவே கூட்டம் சேர்திருந்தது, அவர் செயற்பாடுகளின் பின்புலம் வெளிக்குத் தெரிந்திருக்கவில்லை, புலிக்குத் தெரிந்தது போல்.
எப்படி விஜிதரனின் அரசியல் கணக்கு வளக்குகள் அம்பலபலதுக்கு வர, அந்த மாணவ சமுதாயம் தன்பாட்டில் பின்வாங்கியதோ, அவ்வாறே இவரது ஆதரவு நிலைமையும் அநாதரவாகத் தொடங்கியது.
இருந்தாலும் அப்பாவிக் கைதுகளுக்கு புலிகளின் கரங்கள் குறைசாட்டப்படவே முடியாதது, என்ற பெருமையை இன்றைய செயல்காளால் கூட நிரூபித்துக் கொண்டிருக்கும் ரயாகரன் நடவடிக்கைகளுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஐயா!! மக்கள் ஆதரவு புலிகளை தூக்கிவைத்திருக்கிறதா?
இல்லை மிதித்து வைத்திருக்கிறதா? என்பதை என்பதை; சிங்களமோ, புலிஎதிரிகளோ சொல்லக்கூடாது.
அது அந்த மக்களால் சொல்லப்படுவதுதான் நம்பகமானதாகும். சரி உங்கள் வாதம் புலிப்பயம் தடுக்கும், அவர்கள் நிர்வாகத்துக்குள் என்றால், அரசநிர்வாகத்தின் தேர்தல் முடிவுகளும் புலிகளையேவாரி அணைப்பதை அறியவில்லையா?
சரி அதையும் விட புலத்தில் கடல் போல் மக்கள் வெள்ளம் அவர்கள் ஆதரவை பறைஅறிவிக்கின்றதே!
எனவே உங்களால் முடிந்தால்; புலிஆதரவு என்பது இல்லை என்று முதலில் நிரூபியுங்கள், எனவே பின்பு வரும் உங்கள் புலம்பல்களாவது நம்பகத்தன்மையின் காற்றையாவது தரிசிக்கும். அதைவிடுத்து அரைத்த மாவையே அரைப்பதுபோல் சொன்ன ஒன்றையே வெறும்வாய்க்கு சப்பக் கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.
இப்படிக்கு பேச்சிலும் நாகரீகத்தை மதிக்கும்,
தேவன்.

Thursday 7 June 2007

உறங்குநிலையில் இருந்து மீளும் தமிழ்துவேசம்

புலிப்பகையை தனித்து நின்று வெல்லமுடியாது என்ற நிலைமையால் உறங்குநிலையில் வைத்துக் கட்டிக் காக்கப்பட்ட தமிழ்துவேசம் மெதுவாக உயிர்ப்படைகிறது.

கொழும்புத்தமிழர்களின் விரட்டியடிப்பானது, சிங்கள அரசு உலகத்தின் முன் தன் நடுநிலைவேசத்தை தானாகவே கலைக்கத்துணிந்துவிட்டதன் முதற்படி இதுவாகும்.

மக்கள் மனங்களிலேயுள்ள புலிஆதரவுத்தனத்துக்கு எதிரொலியாக, அவர்கள் மனங்களிலே கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் வெறி புலித்தாக்குதலின் பின்னடைவுகளால் நெய்யூற்றப்பட்டு வளர்ந்து எரிகிறது. எனவே இந்த கையாலாகத்தனங்களின் போர் நடவடிக்கைகள் இனிமேல் அப்பாவி இலக்குகள் மீது வெளிக் கண்டனங்களையும் பொருட்படுத்தாது படைஎடுக்கப் போகின்றது.

கொழும்புத்தமிழர் விரட்டிஅடிப்பு சிங்களவாத மனித உரிமை மீறல்களின் புதிய பரிமாணம்!

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:31 ஈழம்] [செ.விசுவநாதன்]
தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு அனைத்துலக சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தீவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இலங்கையில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது இத்தகைய செயற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்திருக்கும்.
நோயாளர்கள், இளையோர் மற்றும் முதியோரை கொடூரமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியிருக்கும் இந்த பாரிய மனித உரிமை மீறலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<புதினம்>

Tuesday 5 June 2007

பகுத்தறிவுக்கு விற்காத ரயாகரனின் புலித்துவேசம்

உங்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிண்ற புலித்துவேசம் உங்கள் சொந்தப் பகையின் விழைச்சலா, இல்லை தேசமுன்னேற ஈடுபாட்டு உணர்வின் விழைச்சலா?

அங்கு நிகழும் ஒவ்வொரு மனித அவலங்களைய்யும் புலிக்கெதிராக சோடினை செய்யவே உங்கள் மொத்த சக்தியும் செலவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால், உங்கள் புலித்துவேசக் கொள்கைக்கு மக்கள் நலன் என்பது வெறும் காதில்குத்திக் கொள்வது மட்டும்தான்.
ரஞ்சன்வியயரட்ணா என்ற சிங்கள முன்னாள் இராணுவத்தளபதி அந்தப் பதவிக்கு குடிபுகுந்த நாட்ககளில் கூறி இருந்தார் இப்படி. "எமது இராணுவத்தின் கம்பீர அணிவகுப்பைப் ஒருமுறை பார்த்தாலே புலிப்பய்லுகளுக்கு மூத்திரம் இறைக்கும்". இதை கூறும் போது அவர் பகுத்தறிவு எட்டிக்கூட் ஒருக்கால் அவரைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது. ஏன் என்றால் இருபத்திஐந்து வருடங்களாக அந்தப் பயல்களால் தண்ணிகாட்டப் பட்டுக் கொண்டிருக்கும் படை யாருடையது?

புலிகளைப் பிடிப்பதும், பிடிக்காததும் அல்ல இப்போதய விடையம், பிடிக்கவில்லை என்றால் அவர்களது அறிவு அடிமட்டத் தரத்துக்கா தாழ்ந்துவிட வேண்டும்.

எந்த ஒரு நாட்டினது தயவும் இன்றி பலவல்லரசுகளின் கொழுத்தவளங்களின் துணையோடு வருகின்ற அரசஎதிரியை, எதிர்த்து தம் இருப்பை முப்பது வருடங்களாக தக்கவைத்திருக்கின்ற ஒரு அமைப்பை, ஒரு கிள்ளுக்கீரை தரத்துக்கு வர்ணிப்பது உங்கள் ஆத்மாவின் திருப்திப்பசிக்காகவா? பகுத்தறிவுகளுக்கு இவை விலைப்படவேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமேனும் இருப்பதில்லையா?


புலிப்போராட்டத்தின் பசி பணமா?, அதிகாரப்போதையா?
கடந்தகாலங்களில் நான் ஒருசாராருடன் போராட்டம் சார்ந்த பேச்சில் இறங்கும் போது, அவர்கள் எனக்கே பூச்சாண்டி காட்டுவார்கள் இது அந்த அமைப்பில் உள்ளவர்களின் வசதியான வாழ்வுக்கான ஆதாரம் என்று, ஒருவேளை இந்த கையாலாகாத்தனங்களின் வன்மையான வாய்ப்பேச்சு என்னை மூளைச்சலவை செய்துகூட இருக்கும்,

இந்த சம்பவம் நிகழ்ந்திராவிட்டால்.
இந்திய இராணுவம் எம்மண்ணில் கால் பதித்தபோது எம் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்கும் குழிதோண்டப் பட்டுவிட்டது தன் தேசியநல வியாபரப் பேரம்பேசலுக்கு எமக்குகிடைக்கவேண்டிய உரிமைகள் ஒவ்வொன்றாய் செலவு செய்யப்பட்டது. வல்லரசு மமதைக்கு புலிகளுக்கு கணக்குகாட்டவேண்டுமே என்று தோன்றவே இல்லை. மரணத்தை கழுத்தில் கட்டிக் கொண்டு திரிபவனுக்கு வசதிகளை ஆசைகாட்டி வழிப்படுத்த முனைந்தனர்,

கொட்டிய இரத்தத்தின் ஈரம் ஆறமுதலே போராட்டத்துக்கு சவப்பெட்டி அடிதது இந்தியா,

அந்த நேரம் தலைவன் போர் என்று முடிவை எடுத்தபோது, அதன்முடிவும் வெளிச்சமாகவும் மிகத்தெளிவாகவும் தெரிந்திருக்கும் தலைவனுக்கு, எனவே சாவென்ற நெருப்புக்குள் தீக்குளித்து சோரம்போகாத கொள்கை உறுதியையும், அடிமைப் படுத்தப்பட முடியாத தன்மானாத்தையும் உலகுக்குத் தரவந்த ஒரே அமைப்பு எமது போராட்டம்தான்.
எனவே இந்தப் பரீட்சையிலேயே வெற்றி அடைந்தவர்களை உங்கள் வக்கிரமன ஆசைகளுக்காக தரம் தாழ்த்தலாமா?

நான் அந்த நிர்வாகத்துக்குள் வளர்ந்த பாதிப்பே எனக்குள் புலிமரியாதையை கோபுரம்போல் வளர்த்தது பெரியார்சிந்தனைகள் என்னைச்செய்த பக்குவமே அதற்க்கு அடிப்படையாய் இருந்திருக்கும் எனநினக்கிறேன்.

மக்களாதரவு புலிகளை சீராட்டுகிறதா? இல்லை எட்டி உதைக்கிறதா? உங்கள் எதிர்வுகூறல் புராணங்கள் எல்லாம் தினமின தரத்தில் நம்பகத்தன்மைக்கு பிச்சை எடுக்கும் போது இங்கே அலசி ஆராயவேண்டிய தேவை ஒன்றுமில்லை இருப்பினும் உண்மைகளைக் காட்சிப்படுத்துவதற்கு திறமையும் தேவை இல்லை, கடுமுயற்சியும் தேவை இல்லை என்பதால் கூற வருகிறேன், வெறும் சிலநூறு புலிகள் காட்டுக்குள் அநாதைகளாக்கப் பட்டனர் இந்தியவல்லரசால் மிகச்சிறிய அளவான புலித்துவேசம் மக்கள் மத்தியில் இருந்திருந்தாலே புலிகள் இல்லாமல் ஆக்கப் பட்டிருக்க முடியும், ஆனால் அவ்வாறு இல்லாமல் பெரும் வைத்தியசாலைகள், பெரும் சந்தைகள் என்று மக்கள் பெரும் தொகையாக இராணுவ அட்டூளியத்தால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையின் தம் உயிரைப் பணையம் வைத்து வாழவைத்த போராட்டத்துக்கு, மக்களாதரவு இல்லை என்பது பகுத்தறிவுக்குச் செல்லாத பேச்சுக்கள் அல்லவா?

நான் மதநம்பிக்கை இல்லாதவன், ஆனால் எந்த ஒரு மதநம்பிக்கையையும் இம்சைசெய்யும் விதத்தில் விவாதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை அது அந்தசாராரின் உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பு. ஆனால் உங்கள் வார்தைகள் சபை ஏறும் தகுதி அலாத அசிங்கம் கொண்டவை. அவற்றால் தான் புலிஎதிர்புக்கு அர்சனை செய்யமுடியும் என்ற கருதியல் வறுமையை நினைக்கும் போது, குருடன் கோபம் சுவரோடு தலை மோதுவதைப் போன்ற பரிதாபத்துக் குரியதாகவே இருக்கிறது.

புலிஆதரவு பணத்தால வாங்கப்படுகிறதா? அவை எந்த அரசுகளால் சீராட்டப்படுகிறது புலிஎதிர்ப்புக்குத்தான் பல வல்லரசுகள் தோள் தருகிறார்கள், தன்சொந்த மக்களின் வியர்வையிலேயே வளருகின்ற அமைப்பை இப்படி அடிமட்டத்தனமான பொய்களைச் சொல்லி அற்பத்தனமான சந்தோசங்களில் உங்களை நீங்களே ஏமாற்றப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.


அப்பாவி இரத்தங்களோடு அரசபோர்த்தந்திரம்

குடாநாட்டில் ஆயுதபாணிகள் அட்டகாசம் 4 பொது மக்கள் சுட்டுக் கொலை
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ்.குடா நாட்டில் நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் தபாலதிபர் ஒருவர் மற்றும் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சாவகச்சேரியில் தபாலதிபரும் நேற்று நண்பகல் யாழ்நகரில் மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சாவகச்சேரி வங்களாவடி வீதியில் சென்று கொண்டிருக்கையிலேயே தபாலதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளொன்றில் இவர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆயுத பாணிகளே, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தபாலதிபருக்கு அருகில் வந்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சங்கத்தானையில் வசித்துவந்த தபாலதிபரான சுப்ரமணியம் சாந்தீபன் (வயது 30) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.
இவரது உடல், சம்பவம் நடைபெற்ற நேரத்திலிருந்து நேற்று நண்பகல் 12 மணி வரை அந்த இடத்திலேயே கிடந்துள்ளது.
இதேநேரம், நேற்று நண்பகல் 12 மணியளவில் யாழ்நகரில் கோயில் வீதியில் ஆயுத பாணிகளால் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கோயில் வீதியில் ஐ.நா. அலுவலகத்திற்கும் பல சர்வதேச அரசசார்பற்ற அலுவலகங்களுக்குமிடையில் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் தலைக் கவசங்கள் அணிந்து வந்த ஆயுதபாணிகள், அவ்வீதியால் மோட்டார் சைக்கிளொன்றில் வந்து கொண்டிருந்தவர்கள் மீதும் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் மூன்று இளைஞர்கள் அந்த இடத்திலேயே வீழ்ந்து துடிதுடித்து இறந்துள்ளனர். இதில் இருவர் சகோதரர்களென அடையாள அட்டைகள் மூலம் தெரியவந்தது.
ஆயுதபாணிகள் கண்டபடி சுட்டபோது அவ்வீதியால் வேறுபலரும் சைக்கிளில் வந்துகொண்டிருந்ததாகவும் எனினும் அவர்கள் நிலத்தில் குதித்து தரையில் வீழ்ந்து தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பும் இராணுவ காவலரண்களுமுள்ள கோயில் வீதியிலேயே இந்த மூன்று இளைஞர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஆயுத பாணிகள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இலகுவாக தப்பிச் சென்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மூன்று இளைஞர்களதும் சட்டைப் பொக்கற்றுகளினுள்ளிருந்த அடையாள அட்டைகளின் படி, கச்சேரி- நல்லூர் வீதியைச் சேர்ந்த சோதிராஜா நிஷாந்தன் (27 வயது), சோதிராஜா தர்ஷன் (21 வயது) மற்றும் கட்டப்பிராய் வேளாந்தோப்பைச் சேர்ந்த சந்திரகாந்தன் சந்துரு (21 வயது) எனத் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக குடாநாட்டில் படுகொலைகள் குறைந்திருந்த நிலையில், இக்கொலைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக மக்கள் பெரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.


தினக்குரல்

இராணுவ படைத்தளங்கள் புலிகள் பகுதிகளுக்கு ஏவும் செல்மழை

குடாநாட்டில் படைத்தளங்களிலிருந்து புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் தாக்குதல்
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை மிக உக்கிரமான ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
பலாலி, வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சி படைத்தளங்களிலிருந்தே இந்த அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளன.
மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்தத்தாக்குதல் நள்ளிரவு 11.30 மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முகமாலை, பளை, இயக்கச்சி மற்றும் பூநகரிப் பகுதி நோக்கியும் வடமராட்சி கிழக்கு நோக்கியுமே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளும் நீண்ட நேரம் பெரிதும் அதிர்ந்து கொண்டிருந்தன.
இவ்வேளையில் படை முகாம்களிலிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம், ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை
வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்வதற்காக மீனவர்கள் கடற்கரைக்குச் சென்றபோது அவர்களைப் படையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல்

தமிழ்ப் பிரதிநிதிகளையும்' ம,உ பேச்சாளர் செல்வி

தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி
[செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 08:00 ஈழம்] [பா.பார்த்தீபன்]
ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி, கடுமையான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டு, அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களையும் மீறிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக இதற்கு அழைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளுக்குத் தன்னுடைய ஆதரவை வழங்கியதுடன், களநிலைமைகளின் யதார்த்தங்களையும் அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம், ஆழிப்பேரலைக்குப் பின்னரான நிலைமைகளையும், மனித உரிமைகள் நிலவரத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமானால் எதிர்காலத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் அழைப்பது அவசியமாகும்.
ஆழிப்பேரலையால் தாக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஆழிப்பேரலைக்குப் பின்னரான திட்டங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். 40,000 பேர் கொல்லப்பட்ட அதேவேளையில், 6,00,000 பேர் தமது வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளானார்கள்.
பல்வேறு அமைப்புக்களும், உள்ளுர் தலைவர்களும் இந்த இடம்பெயர்ந்தவர்களினதும் மற்றும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களினதும் துன்பங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
வடபகுதியில் 3,50,000-க்கும் அதிகமானவர்கள் வடபகுதியிலுள்ள முகாம்களில் தொடர்தும் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படையினர் முன்னெடுத்துவரும் தாக்குதல்கள் காரணமாக அங்குள்ள இடம்பெயர்ந்தவர்கள் யுத்த நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அனைத்துலக கண்காணிப்பின் மூலமாகவே மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், மனிதாபிமானச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்திருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்பு மின்னஞ்சல் உங்கள் கருத்து அச்சுப் பிரதி

புதினம்