Wednesday 19 November 2008

சொல்லி அழடா எட்டப்பா! புலியை ஏன் பிடிக்க வில்லை என்று.

நீ பிறந்த காரணத்தை நீ மறந்ததால்
நீ அழுத காரணத்தை யார் அறிகிலார்
புலி பிறந்த காரணத்தை இன்றும் புலி சுமப்பதா
நீ அழுத காரணம் சொல்லி அழடா எட்டப்பா.

உன் துப்பாக்கியின் கனவைச் செய்யும் இன்னொரு துப்பாக்கி
உன் பாதையின் குறுக்கே வந்ததால்
உன்கனவுக்கு காலன் நீயே ஆனதோ
என்ன வென்று சொல்லி அழடா எட்டப்பா?

ஐயோ! ஐயோ! என்று வேறு ஏன் அழுதாய்
சொல்லி அழடா எரி கொள்ளி வாயா
MGR அள்ளிக் கொடுத்த ஆயுதங்கள் தான்
அத்தனை அமைப்புக்களையும் கோவணத்தோடு
ஓட்டம் எடுக்க வைத்த ஒரே காரணம் என்றா?
அடமொக்கா புலிகளுக்கும் அதே நிலையை
சிங்களம் இன்னும் படைக்காமல் இருப்பது
அந்த அளவு ஆயுதங்களை இன்னும் காணாமைதானோ!
உன்பதிலேதானேடா உன் மொக்குத்தனத்தை
குட்டுடைத்து நாறவைக்குது.

“அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்
தொலைந்தான் புலி.”
“அடிக்கின்றான் அடிக்கின்றான் இந்தியன்
அழிந்தான் புலி”
மீண்டும் “அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்
தொலைகின்றான் புலி”
என்று கைதட்டல் புலிச்சண்டை செய்யும் வீரன்
சிறீரங்கன் வேண்டுமோ உனக்கு பாலூட்ட?

வளர்ந்த பல்லு ஆடி ஊர் பேரும் காலத்துக்கு வந்தும்
புலி ஓடுது கதையை ஓட்டிக் கொண்டே இருக்கும்
இரயாகரன் வேண்டுமா தாலாட்ட?

குடிக்க நீ கேட்பது மகிந்தாவின் வெள்ளம்
தின்னக் கேட்பது பிச்சைக்காறன் மிச்சம்
எந்த நாய் சபித்த பாவமடா உன் மனத்தாசைக் கோலம்!

Monday 3 November 2008

பார்பானிய துவேசம் என்பது பெரியாரின் வறட்சி அரசியலின் விதை நெல்லா?

என்ற எண்ணம் இன்னும் உலகத்தில் மிச்சம் இருந்தால் இதோ அந்த மிச்சங்களையும் தெளியவைக்க உழைக்கின்ற பார்பான் நெறியைப் பாருங்கள்!
தமிழா! நீ ஈழத்தில் என்ன செவ்வாயில் இருந்தாலும் எம் நோக்கங்களும் குறிக்கோளும் என்றும் ஒன்றுதான் என்று உரைக்கின்ற செயல் வரிசைகளில் தினமலரின் பங்கை இப்போது பார்ப்போம்!

தினமலரின் தமிழ் உணர்வுமீதான துவேசம் சிங்களதேசத்தின் அதர்மங்களுக்கே காவடி எடுக்க வைக்கின்றது.
யார் இந்த சங்கரி?
சொந்த இனத்தின் உண்மைகளை உலகிற்க்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்க்காக எந்த ஊடகர்கள் அந்தப் படையால் வேட்டை ஆடப்பட்டார்களோ அவர்களின் ஜீவாதாரக கடமைகளில் ஒன்று இந்த சங்கரியாருக்கு வளங்கும் பாதுகாப்பு.
பெயருக்கு அருகில் போடும் பட்டம் த.வி.கூ இது எங்கே இருக்கின்றது?
நடைமுறையில் இருக்கின்ற அமைப்பிற்க்கு இவர் தலைவரும் அல்ல கடைத் தொண்டனும் அல்ல அப்போது வேறு என்ன அடிப்படையின் பொருட்டாம்?
கழுத்தைப் பிடித்து வெளியேற்றி விட்டது அந்த அமைப்பு, பின்னால் சுயேட்சையாய் நின்று தேர்தலை எதிர் கொண்டார் கட்டுக் காசை இழந்தும் உலகம் காணாத தோல்வி மக்கள் பரிசாய்க் கொடுத்தார்கள், இந்தப் பின்னணி ஒன்றே விளக்குகின்றதே இவர் குரல் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் என்று, இவை தெரியாமலா இவர் வாந்தியை தினமலர் நாளேடு தன் பக்கங்களில் கொட்டி அகமகிழ்கின்றது?