Thursday 18 December 2008

தினமலரில் சீமானின் மேடைப்பேச்சு!

தினமலர் சீமானை நோக்கி அண்மைய மேடைப் பேச்சு சார்பாக மிகக்கடுப்பாக கருத்து வெளியிட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பின்னூட்டங்களும் அதேபாணியில் தொடர்ந்திருக்கின்றன.
புலிஎதிர்ப்பு நியாயமா? அநியாயமா என்பதைக் கூட வாதாடப்போவதில்லை.
முழுபூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் புலிஎதிர் நிகழ்ச்சி நிரலுக்காக தமது ஊடகதரத்தை இத்துணைக்கு தரம்தாழ்த்துவதை எண்ண பரிதாபமாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஒரு சில சிங்கள ஊடகங்களே நாட்டு பற்றாளர்கள் என்ற பரிசை மக்களிடம் இருந்து வாங்காது விட்டாலும் பறவாயில்லை அரசுதரும் செய்திகளைக் கொட்டி தமது செய்திகளுக்கு இருக்கும் உண்மையின் தரத்தை கெடவிடாமல் பாதுகாக்கும் பணியை முக்கியமாகக் கருதும் போது,
இந்திய புலிஎதிர்ப்புவான்கள் தமது பத்திரிக்கையின் துணுக்கு செய்திபகுதிக்காக ஒட்டுமொத்த தமது ஊடகத்தரத்தை கேவலப்படுத்த துணிகின்றார்களே, இந்த முயற்சியின் ஊற்றுத்தான் பதில் சொல்ல முடியாது மாட்டுப்படும் பார்ப்பானின் கள்ளம்.
கடந்தகால தினமலர் இலங்கைச் செய்திகளைப் பார்ப்போம்.
“பிள்ளையான் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த நந்தகுமார் இனம்தெரியா நபரால் கொல்லப்பட்டார், இது புலிகளின் செயல் என கருணா குற்றம் சாட்டுகின்றார்” என்று தொடர்கின்றது செய்தி.... பாதிக்கப்பட்ட தரப்பு சொல்வதை சேர்த்தார்களா? இல்லை அவர்களால் குற்றவாளியாய் காணப்பட்ட தரப்பு ஆகிய கருணா சொல்வதை செய்தியில் சேர்திருக்கின்றார்கள் ஒருவேளை கருணாவால் புலிதவிர்ந்த வேறு எவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் தினமலர் அதை செய்தியாக்கியிராது,
அதன் பக்கங்களுக்கு செய்தியாகும் தகுதி என்பது புலியை வசைபாடும் எந்தப் பச்சைப் பொய்யாகவும் இருக்கலாம்.
நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் நடந்த சம்பவம் இது. தமிழ் இனத்துக்கு பாதகமான ஒரு சட்டம் சிங்கள அரசால் கொண்டு வரப்பட அதை எதிர்த்து 21மொத்த தமிழ் நாடாளுமன்ற உப்பினரக்ளும் எதிர்த்து வெளிநடப்புச் செய்தனர்,
தினமலரில் பார்ப்பான் வித்தையில் இந்தச் செய்தி இப்படி வந்தது.
“இந்த சட்டத்துக்கு எதிராக 21 தமிழ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள், இலங்கை நாடாளுமன்றின் மொத்த உறுப்பினர் தொகை 240 எனவே இது மிகச் சிறிய எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றது” தமிழரைப் பாதிக்கும் முடிவுகளுக்கு தமிழ் உறுப்பினர்கள் தானே பதிலளிப்பார்கள் அந்த ஒட்டு மொத்த தமிழர் பிரதிநிதித்துவத்தின் எதிர்ப்பை எப்படி மலினப்படுத்தி இருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி ஒருவன் பொய்யாக மோசமான கதைகளை பரப்பித்திரிகின்றான் என்றால் அவற்றை எதிர்க்க நான் நல்லவன் என்ற கருத்தை பரப்புவதைவிட அவன் மோசமானவன் என்ற உண்மையை வெளியிற்க்கு பரப்பிவைத்தால் போதும்.
அது போலவே புலியைப் பற்றி நல்லதைக் கதைக்காமலே இந்தப் பார்ப்பான் விசத்தை இறக்க முடியும் அவர்கள் செயற்பாடுகளைக் கொண்டே.

பாம்பின் விசத்தை விடக் கொடியது பார்ப்பான் விசம் என்று பெரியார் சொன்னார்,
அவர் காலமான பின்பும் சொன்ன வார்த்தைகள் மதிப்பு பொய்த்துவிடக் கூடாது என்று மானிடதர்மத்தின் மீது இன்றும் தீண்டிக்கொண்டே இருக்கும் பார்ப்பான் நெறிதனை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இல்லை என்றால் இந்தக் காலாதிடம் பெரியார் ஒரு பைத்தியக்காறனாகியிருப்பார் மனிதன் நம்பமுடியாத ஒரு பொய்தனை சொல்லிவைத்தாரே என்று.

Wednesday 19 November 2008

சொல்லி அழடா எட்டப்பா! புலியை ஏன் பிடிக்க வில்லை என்று.

நீ பிறந்த காரணத்தை நீ மறந்ததால்
நீ அழுத காரணத்தை யார் அறிகிலார்
புலி பிறந்த காரணத்தை இன்றும் புலி சுமப்பதா
நீ அழுத காரணம் சொல்லி அழடா எட்டப்பா.

உன் துப்பாக்கியின் கனவைச் செய்யும் இன்னொரு துப்பாக்கி
உன் பாதையின் குறுக்கே வந்ததால்
உன்கனவுக்கு காலன் நீயே ஆனதோ
என்ன வென்று சொல்லி அழடா எட்டப்பா?

ஐயோ! ஐயோ! என்று வேறு ஏன் அழுதாய்
சொல்லி அழடா எரி கொள்ளி வாயா
MGR அள்ளிக் கொடுத்த ஆயுதங்கள் தான்
அத்தனை அமைப்புக்களையும் கோவணத்தோடு
ஓட்டம் எடுக்க வைத்த ஒரே காரணம் என்றா?
அடமொக்கா புலிகளுக்கும் அதே நிலையை
சிங்களம் இன்னும் படைக்காமல் இருப்பது
அந்த அளவு ஆயுதங்களை இன்னும் காணாமைதானோ!
உன்பதிலேதானேடா உன் மொக்குத்தனத்தை
குட்டுடைத்து நாறவைக்குது.

“அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்
தொலைந்தான் புலி.”
“அடிக்கின்றான் அடிக்கின்றான் இந்தியன்
அழிந்தான் புலி”
மீண்டும் “அடிக்கின்றான் அடிக்கின்றான் சிங்களவன்
தொலைகின்றான் புலி”
என்று கைதட்டல் புலிச்சண்டை செய்யும் வீரன்
சிறீரங்கன் வேண்டுமோ உனக்கு பாலூட்ட?

வளர்ந்த பல்லு ஆடி ஊர் பேரும் காலத்துக்கு வந்தும்
புலி ஓடுது கதையை ஓட்டிக் கொண்டே இருக்கும்
இரயாகரன் வேண்டுமா தாலாட்ட?

குடிக்க நீ கேட்பது மகிந்தாவின் வெள்ளம்
தின்னக் கேட்பது பிச்சைக்காறன் மிச்சம்
எந்த நாய் சபித்த பாவமடா உன் மனத்தாசைக் கோலம்!

Monday 3 November 2008

பார்பானிய துவேசம் என்பது பெரியாரின் வறட்சி அரசியலின் விதை நெல்லா?

என்ற எண்ணம் இன்னும் உலகத்தில் மிச்சம் இருந்தால் இதோ அந்த மிச்சங்களையும் தெளியவைக்க உழைக்கின்ற பார்பான் நெறியைப் பாருங்கள்!
தமிழா! நீ ஈழத்தில் என்ன செவ்வாயில் இருந்தாலும் எம் நோக்கங்களும் குறிக்கோளும் என்றும் ஒன்றுதான் என்று உரைக்கின்ற செயல் வரிசைகளில் தினமலரின் பங்கை இப்போது பார்ப்போம்!

தினமலரின் தமிழ் உணர்வுமீதான துவேசம் சிங்களதேசத்தின் அதர்மங்களுக்கே காவடி எடுக்க வைக்கின்றது.
யார் இந்த சங்கரி?
சொந்த இனத்தின் உண்மைகளை உலகிற்க்கு சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்க்காக எந்த ஊடகர்கள் அந்தப் படையால் வேட்டை ஆடப்பட்டார்களோ அவர்களின் ஜீவாதாரக கடமைகளில் ஒன்று இந்த சங்கரியாருக்கு வளங்கும் பாதுகாப்பு.
பெயருக்கு அருகில் போடும் பட்டம் த.வி.கூ இது எங்கே இருக்கின்றது?
நடைமுறையில் இருக்கின்ற அமைப்பிற்க்கு இவர் தலைவரும் அல்ல கடைத் தொண்டனும் அல்ல அப்போது வேறு என்ன அடிப்படையின் பொருட்டாம்?
கழுத்தைப் பிடித்து வெளியேற்றி விட்டது அந்த அமைப்பு, பின்னால் சுயேட்சையாய் நின்று தேர்தலை எதிர் கொண்டார் கட்டுக் காசை இழந்தும் உலகம் காணாத தோல்வி மக்கள் பரிசாய்க் கொடுத்தார்கள், இந்தப் பின்னணி ஒன்றே விளக்குகின்றதே இவர் குரல் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் என்று, இவை தெரியாமலா இவர் வாந்தியை தினமலர் நாளேடு தன் பக்கங்களில் கொட்டி அகமகிழ்கின்றது?

Tuesday 21 October 2008

புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!

கடவுளே இல்லை என்ற கொள்கை உடையவன் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் வரைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
அதுபோலவே புலிகளை விமர்சிப்பவர்கள் அவர்களின் தகவல் களஞ்சியமாக இந்திய, சிங்கள அரசுகளின் ஊடகங்களே விளங்கும் போது உங்கள் விமர்சனங்களின் மரியாதை மிகவும் மட்டரகமாகவே ஈழத்தவர்களுக்கு விளங்குகின்றது. ஏன் என்றால் உங்கள் கருத்து தளத்தின் அடிப்படையே எங்களுக்கு உடன்பாடானதாய் இல்லை!
ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற கருத்திற்க்கு உடன்படுகின்றீர்களா?
· ஆம் என்றால் அந்த மக்களின் எண்ணங்களுக்கு கைகொடுப்பது உங்கள் கடமையா? இல்லையா?
· இல்லை என்றால் உலகமே பகையாக விளங்கும் அந்த அமைப்பை முப்பது ஆண்டு காலமாய் ஒரு அரசு உலகத்துணையோடு வெல்ல முடிய வில்லை என்றால் அதன் ஆதாரமாய் இருப்பது மக்கள் என்றுதானே பொருள். புலத்திலே புலிஆதரவை உணர்த்த கூடும் பிரமாண்டமான கூட்டங்களின் அடிப்படை என்னவாக இருக்கும்.
இந்தியா புலியைத்தான் விரோதிக்கின்றது மக்களை அல்ல என்ற கருத்திற்க்கு உடன்பாடானவரா?
· அப்படி என்றால் புலிவிரோதத்தின் துவக்கப் புள்ளி என்ன? ரஜீவின் மரணமோ அல்ல அமைதிப்படைக் கால கசப்புக்களோ என்றால் உங்களால் விவாதிக்க ஓரளவு அடிப்படை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை அல்லாமல் அந்த புலிவிரோதம் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்டது அமைதிப்படை வரவிற்க்கும் முந்தைய ஆண்டுகளில்த்தான் என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. புலியை அழிக்க வளர்த்து ஏவிய பிற குழுக்கள் இந்தியக் கரைகளில் துண்டங்களாக ஒதுங்கிய போது, தீவிர ஆதரவுச் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்தது என்ன காரணத்தினால் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்போது புலி தன் மக்கள் நலனில் காட்டிய உறுதிதான் பகையானது என்று சொல்ல வேறு என்னதான் காரணங்கள் வேண்டும். பின் அமைதிப்படையாய் ஈழத்தில் வந்த பிறகு துரோகப் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த அரவங்களைக் கொண்டுதான் பொதுசன நாசவேலைகள், புலிஅழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன.
பயங்கரவாதப் பண்பு கொண்டது புலிகளின் போராட்டம் என்ற கருத்து கொண்டவரா?
· புலிகளை அழிக்கும் இங்கையின் போருக்கு பின் உதைப்புக்களைப் பொருட்படுத்தாமலே அதன் ஆயுதவலிமைக்கு தோள்கொடுக்கின்றது இந்திய அரசு. அப்படி என்றால் ஊடகப்போரில் அதன் வசதிக்கு எத்துணை இலகுவாக கழுத்தறுப்பு செய்யமுடியும், ஒரு குழுவாக இருக்கு புலிகளுக்கு அந்த வசதி எத்துணை தூரமானாது. சிங்களம் ஒரு ஊரையே படுகொலை செய்யும் போது அதை மறைக்கின்ற வேலைகளயே இந்தியாவும் சேர்ந்து செய்கின்ற போது புலிகளின் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட சம்பவங்களை எந்த அளவிற்க்கு உயரமாக இரு அரசின் உபயத்திலும் உலகை வலம் வரும் அவைகள்.
· புத்தகத்திற்க்கு என்று எழுதும் கருத்துக்களை உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வசதியால் கூட கடைப்பிடிக்க முடியவில்லை தன் சொந்தககாலின் பலத்தில் மட்டும் நிற்க்கும் புலிகளுக்கு அவை பொருந்த வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் எனக்கு புரியவில்லை என்ன காரணத்தின் பொருட்டு உங்கள் அடம்பிடித்தல்கள்.

மகிந்தாவின் போர் புலிகளுக்கே எதிரானது மக்களுக்கு எதிரானாது அல்ல என்று நம்புகின்றீர்களா?
· போரின் தாக்கம் தேசத்தின் உயிரையே காவுகொள்ளக் கூடிய அளவு பெருந்தாக்கம் கண்டுள்ளது இந்த நிலையில் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று சொல்லும் அளவில் தமிழின உரிமைமீது செலுத்துகின்ற கவனம் விளங்குகின்றது சிங்களத்திற்க்கு. புலியின் அழிவிற்க்கு பின்னால்த்தான் கொடுக்கப் போவதையே என்ன வென்று காட்டுவோம் என அடம்பிடிக்கின்றது சிங்களம். சரி உலகத்தின் ஆதரவு உங்கள் தோள்களுக்கு வேண்டும் புலியை அழிக்க அவர்கள் மக்களுக்கு வளங்கும் உரிமையை அறிய என்ன குடுக்க உடன்படுகின்றீர்கள் என்பதை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை. புலிஅழிவின் பின் தமிழர்தரப்பிற்க்கு காட்டும் முழங்கையிற்க்கு அப்போது இவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதானே.
· புலிகள் கேட்கின்ற எதை சிங்களத்தால் தரமுடியாது, பணத்தையா அல்ல பதவிகளையா இல்லையே மக்களின் உரிமைதவிர வேறு எதைத்தான் கேட்டாலும் சிங்களம் அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கியே கொடுக்க ஆயத்தமாக உள்ளது. தம்மால் உடன்பட முடியாததைக் கேட்பதுதான் பயங்கரவாதம் என்பதே ஒவ்வொரு இனவாத அரசினதும் கொள்கையாகும்.

Sunday 19 October 2008

வீசும் காற்றே தூது செல்லு! தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு!

வளர்ந்த நம்கூடுகள் பிரிந்து நாம் தவிக்கின்றோம்
வானக் கூரையில் வாழ்வை நாம் களிக்கின்றோம்
வீதியில் வாழ்கை விதி எமக்காம்
ஊர்கள் தொலைத்தவர் ஊர்வல வீதியில்
எம் வாழ்கைக்கு கூடு ஒரு மரநிழல்தான்

கோழிவிலையை முட்டைக்கு கேட்கிறார்கள்
ஒருகை அரிசிக்கு வாழ்கை தவிக்கின்றது
பசி ஒன்றுதான் எமக்கு கடவுள் - இல்லை என்றால்
நாம் வாழ்ந்த வாழ்கை நினைவுகளே எமக் கொல்லும்
அதை அருகில் வரவிடாத, கூடவே எம்மோடு
வாழும் பசிதான் எமக்கு கடவுள்.

பட்டினியும் எதிரி எம்மேல் ஏவிவிட்ட ஏவுகணை
மிகை ஒலிக்காலன் வருகையில் அண்டமும் அதிரும்
குண்டுகள் தான் இறைத்தால் அணுவிலும் உயிர் சிதறும்
பசியில் வாடிக்கொண்டிருந்த உயிர்கள் சாவூரில் தஞ்சம் பெறும்
மனித உழைப்பின் தேட்டங்கள் யாவும் கற்குவியல்களோடு போகும்.

எங்கள் கண்ணீர் உங்கள் நெஞ்சைத்தொட
தடை செய்கின்றது அம்மாவின் அரசியல்
இங்கே பிணங்களைக் குவிக்கின்ற
சிங்களர் கொடுமைக்கு
ஆசீர்வாதங்கள் இவைதான் அல்லவா?

கடைசித்தமிழனின் உயிர்வரைக்கும் காவுகொடுக்கப்படும்
போரின் விலையிலும் புலிஅழிப்பு சிங்களத்திற்க்கு பெறுமதியானது.
ஆனால் அம்மாவின் அரசியலுக்கும் இது எப்படி பெறுமதி
கொழிக்கும்? புரியாதபுதிரே இது இன்றும் எமக்கே.

பச்சைத்தமிழன் வாக்கிலே அவர்
பதவியை வாழ்பவர் அல்லவா?
அவர்களின் உணர்வினையே தூசுக்கா மதிப்பதா?
காசுக்கா அழுகின்றது தமிழினம் இங்கே
உரிமைவாழ்விற்க்கு அல்லவா?
உங்கள் தோள்களுக்கும் பணி இதில் இல்லையா?

Friday 17 October 2008

வைகோவை நோக்கிய இந்தக் கேள்விகள்!

உங்கள் பாசத்தில் பழுதைக் காண்பதல்ல எங்கள் நோக்கம்,
அநாதைகள் துன்பத்தை ஆதரித்த உங்கள் தோள்களை
உயிர் பிரியும் வலியில் கூட மறக்கும் இதயங்கள் அல்ல நாங்கள்!
புலியைக் கொல்ல பழிகிடக்கும் கட்சியுடன் சேர்க்கை வைத்தீர்கள்
அதன் விலையாக விளையும் துன்பங்களின்
வலியை அடைகாக்கின்றோம் பாசக் காணிக்கையாக,
ஒருவன் பழி இன்று வரை சொன்னான் இல்லை ஈழத்தில்
உண்மை அன்பிற்க்கு உயிரைக் கொடுத்தல்கூட ஈடு இல்லை அல்லவா?
தன் கையைக் கொண்டே ஈழத்தின் கண்ணைக் குத்துவது போன்றது அல்லவா?
அம்மா கூட்டணியில் உங்கள் கட்சிப் பங்கு சுமக்கப் போகின்ற பாவம்.
உங்கள் கட்சியின் உயிர் மூச்சாய் விளங்கும் கொள்கையில்
மலிந்த அரசியல் செய்யும் உங்கள் கூட்டணியின் போக்கு
உங்கள் கட்சி உறவின் முக்கியத்துவத்தை
காலில் ஒட்டிய தூசிற்க்கு மதிக்கின்றது என்பதை அல்லவா காட்டுகின்றது.
பேச்சுக்களைக் கூட தட்டிக் கேட்க முடியாத உங்கள் முக்கியத்துவத்தின் எடை
அதிகாரத்தில் அம்மாவின் அலங்கோல ஆட்சியை நெறிப்படுத்தவா முடியும்.
நாளும் சாவுகளைக் காணும் மண்ணின் வாழ்விற்க்கு போராட
சிறியளவு காலம் ஆவது உங்கள் உள்ளூர் பிர்ச்சினைகளை மூட்டை கட்டி
எங்களுக்காக மட்டும் உங்கள் அரசியல் உழைத்திட வேண்டுகின்றோம்.


தொடர இருக்கும் பதிவு “ அம்மாபக்தி தமிழன் முதுகுக்கு கத்தி!”

Thursday 16 October 2008

அம்மாவின் சும்மாத்தன அரசியல் என்பது இதுதான்!

ஒரு அப்பாவியை கொலை வெறியுடன் ஒருவன் தக்குதல் செய்துகொண்டு இருக்கின்றான், இவ்வேளை இன்னொருவன் தாக்குதளாளிக்கு ஆயுதம் தருகின்றான், வேறொருவன் அந்த தாக்குதலை நிறுத்த வருகின்றான்.
நியாயம் பேசவென்று இன்னொரு குரலும் அங்கே சேருகின்றது,
ஆயுதம் வளங்கியதை குற்றம் என்று என்ன அடிப்படையில் குற்றம் காண்கின்றதோ அதே அடிப்படை சமரை நிறுத்தியதும் நியாயம் என்று காணும் அல்லவா?
ஆனால் அப்படி இல்லாமல் இருவரையும் குற்றவாளிக் கூண்டி ஏற்றுகின்றது இந்த நியாயத்தின் குரல் இதுதான் வெற்றுத் தோட்டாக்களின் அரசியல் பாரம்பரியம் என்பது.

மத்தி போருக்கு உதவுவதால் அதனுடன் பங்கெடுக்கும் கலைஞ்ஞர் கட்சியை கண்டிக்கின்ரார் வைகோ, ஆனால் புலிஅழிப்பை முழுமுதற் கொள்கையாக கொண்டுள்ள கட்சியில் அவர் பங்கெடுக்கின்றார். யார் கட்சி மிகப் பெருந் தீங்கை ஈழத்திற்க்கு தாரை வார்க்கக் காத்திருக்கின்றது என்பதை உணரமாட்டாதவரா அவர்.

ஈழத்திற்க்காகத் துடிக்கும் ஒவ்வொரு இதயமும் அதன் முதற்க்கட்ட காணிக்கையாக செய்ய வேண்டியது கலைஞ்ஞர் ஆட்சியின் பலத்தில் பங்கெடுப்பது ஒன்றுதான், இந்த ஒரு வழியினூடே ஈழத்திற்க்கு விடிவைப் பறிப்பிக்க முடியும் என்றே நாம் நம்ப வேண்டி உள்ளது.

ஈழத்தின்பால் நல்ல உள்ளத்தைக் கொண்டிருப்பவர்களின் பொறுப்பு என்பது ஈழத்தின் விருப்பங்களுக்கு தோளை வளங்குவதே தமது உண்மையான நிலைப்பாட்டிற்க்கு சாட்சியாகும் செயற்பாடுகளாகும். அப்படி அல்லாமல் தம் விருப்பங்களை ஈழத்தின் தோள்களில் சுமப்பித்தல் என்பது பச்சைப் பித்தலாட்டத்தனமான நிலைப்படுகளாகும்.

ஜெயாவின் புலிஎதிர்ப்பு என்ற கொள்கை பல கள்ளங்களின் கலவையால் ஆனது.
ஈழத்தின் ஒட்டுமொத்த உயிரையும் கொல்லத்தக்க பாவத்தால் செய்யப்பட்ட கொள்கைதான் இந்தியாவின் புலிஎதிர்ப்புக் கொள்கை. அந்த மக்களை வெறுக்கின்ற ஜெயா இதையே தனது அதிகார போசிப்பிற்க்கு கருவியாய் பயன்படுத்துவது தமிழிச்சியாய் இராத அவ மனசாட்சிக்கு உறுத்தல் தராத விடயம்.
ஈழத்தின் ஒவ்வொரு இதயத்திலும் தன் உயிரினும் மேலான இடத்தில் வாழ்வது புலிமேல் இயற்கையாக வந்த பாசம் இதை புரியாதவராக ஜெயா இருப்பவர் என்பது அல்ல எங்கள் எண்ணம். தமிழ்உணர்வு என்ற கோட்பாடு மீதிருக்கும் வெறுப்பின் அடிப்படையே அவரிடம் புலிஎதிர்ப்பு என்ற கொள்கையை இனிப்பாகக் காட்டுவது. எனவே ஈழத்தமிழர்கள் தமது வாழ்வின் ஆதரமே புலிகள்தான் என்ற உண்மை ஜெயாவின் முனால் உடைத்துக் காட்டப்படும் போது ஜெயாவின் அடிமனதுக்குள் இருந்து வந்த இரகசியஉண்மை தமிழ் உணவிற்க்கு ஆகாத போக்கு என்பது வலிய தானே வெளிப்படும்.

தேர்வு 1. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை ஆதரிக்கின்றார்கள்.
தேர்வு 2. ஈழத்தவர்கள் ஒட்டு மொத்தமாக புலியை வெறுப்பவர்கள்.

தேர்வு 1 உண்மையானால் ஈழத்திற்க்கு சிங்களத்தை ஒத்த ஒரு எதிரி ஜெயா என்பது முடிவாகிறது.
தேர்வு 2 உண்மையானால் ஜெயாவின் போக்கு ஈழத்திற்க்கு இணக்கமானதாக இருக்கும்
தேர்வு 1 ,2 ம் முடிவு தெரியாத போது முடிவு இதுவாகத்தான் இருக்கும்.
ஈழத்தின் நன்மைகளை இதுவரை சுமந்து அறியாத ஜெயாவின் அரசியல், மக்கள் துன்பங்களுக்கு பாராமுகமாக இருந்துவந்த போக்கும் ஈழத்தை அடிமனதில் இருந்தே வெறுப்பவர் என்பதே வெட்ட வெளிச்சமாகின்ற உண்மை!

Friday 10 October 2008

உலகத்தமிழனின் திருநாள் இதுதான் அல்லவா?

தமிழீழம் பிரசவிக்கும் திருநாளும்,
எம்தாய்க்கொடி உறவுகள் எமை அணைக்கும் திருநாளும் -வரலாற்றில்
தமிழர் மகிழ்ச்சிக்கடல் பொங்கி எழவைத்த பொன்நாட்க்கள்
செய்தியாய் வரும் தமிழ்நாட்டு எழுச்சியிலே
எம்மண் பட்ட மரங்களில்கூட புத்துயிர் துளிர்க்கின்றது.
உடைந்து கற்குவியலான மாடங்களில் கூட
தெரிகின்றது மீள் புத்தமைப்பிற்க்கான தவிப்பு,
செங்குருதி நீர்பாய்ச்சி நாம் வளர்த்த உரிமைப்பயிர்
சூரிய உதயதயம் அதை உறவாய்க் கொண்டு விட்டது
உலகமே நீ இனி ஒன்றாய் வரினும் உன் பகைக்கு நாம் இனி அஞ்சமாட்டோம்!

Monday 6 October 2008

இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!

நூறுபேர் கொண்ட கூட்டத்தில் 99 பேருக்கும் உடன்பாடான ஒரு கருத்தை ஒருவன் பழித்துப் பேசுகின்றான் என்றால் அவன் கருத்தை கழிப்பு என்று ஒதுக்கிவிடலாம். ஏனெனில் விளக்கம் மீதிப்பேருக்கு வேண்டியதும் இல்லை, முரண்பாட்டாளனுக்கும் உபயோகப்படப் போவதும் இல்லை!
இதனால்த்தான் உங்கள் பக்கங்களுக்கு (புலித்துவேசிகளின்) பதில் எழுதுவதானது விழலுகு இறைக்கும் நீர் என நினைத்துதான் எவரும் அதை செய்ய முயற்சிக்க வில்லை
புலிவெறுப்பு ஒருவன் உள்ளத்தில் குடிபூர வேண்டும் என்றால்,
ஒன்று தமிழ் உணர்வுக்கு ஆகாதவனாய் இருத்தல் வேண்டும் அன்றி
ஊருக்கு சோறுபோடும் ஒரு தவத்தை, தான் உணவாக் உட்கொள்ளும் புழுவைப் போன்றவனாய் இருத்தல் வேண்டும்.
புலித்தூசிப்பு என்பதற்க்கு அடிப்படையாய் ஒரு கொள்கை இருந்தது கிடையாது,
பன்முக அடிப்படை கொண்ட இதற்க்கு இருக்கும் ஒரே ஒற்றுமை புல்லித்தூசிப்பு ஒன்றில் மட்டுமே!
ஒரு தளம் சொல்லும் புலிக்கு பின்னால் மக்கள் கிடையாது என்று.
இன்னொன்று இத்தனை அழிவுகளுக்கும் புலிக்கு பின்னால் நிற்க்கும் போக்கு ஒன்றுதான் பொறுப்பு என்று மக்களை நோக்கி.
ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகின்றது அது புலிஎதிர்ப்பு கொள்கைக்கு மனிதாபிமானத்தின் உறவு ஏழுகடல் தூரம் கொண்டது.
இரயாகரன் புலிஎதிர்பிற்க்கு கொக்கொகோலா பானம் வரை போனது கலியாணவீட்டில் சீப்பை ஒளிப்பதை போன்ற ஒரு முயற்சியே!
எல்லாப் போரட்டங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை பயங்கரவாதம்தான். இவையே உங்கள் கதையளப்பிற்க்கு கருவாகின்றமைதான் எமக்கு விசித்திரமாகின்றது.
இரத்தம் ஓடுகின்ற வீதிதான் போராட்டத்தின் பாதை இவையே உங்கள் விளம்பரத்துக்கு சாட்சி ஆக்குகின்றீர்கள், கருத்தியல் வறுமையின் பரிதாப்படத்தக்க எல்லை.
போராட்ட அமைப்பு மக்களவலங்களை தடுக்க முடியாமை போராட்ட அமைப்புக்களுக்கு இருக்கும் இயல்பான குறைபாடு, ஜனனாயகம் என்ற பெயர் உபயோகத்தில் சக அரசுகளிடம் பிச்சை எடுத்து இந்த கொடிய செயலைச் செய்யும் அரசுகளை நோக்கி எய்ய வேண்டிய கணை இது ( என்ன செய்வது கொடுப்பவனை நோக வைக்கக் கூடாதே )
கடல் தண்ணியை எடுப்பது போல் அரசின் ஆயுதபலம்
உலக அரசியல் அதன் கைப்பொம்மை
ஆள்வலியோ எம்சனத்தொகைக்கு ஈடானது
இருந்தும் சிங்களம் வாகை சூடுவது வாய் வார்த்தைகளில்த்தானே
முப்பது ஆண்டுகளுக்கும் பழகிக்போன வாசகங்கள்தானே!
உங்கள் வாசிப்புக்களும் இதுபோலத்தானே!

Saturday 4 October 2008

புலிகளின் தோல்விகளால் அச்சமடையும் இந்தியாவின் புலிஎதிர்ப்பு அரசியல் கூடாரங்கள்!

ஒரு சிங்கள இனவாததிக்கு ஈழத்தமிழரின் மேல் இருக்கத்தக்க வெறுப்பிற்க்கு ஈடான வெறுப்பை கொண்டிருக்காத ஒருவனுக்கு காரணங்கள் ஆயிரம்தான் இருந்தாலும் கசப்பு மிகுதியான ஒரு அரசியலாகவே புலிஎதிர்ப்பு என்பது அவனுக்கு இருக்கும்.
இல்லை என்று கையை உயர்த்த எவராவது வந்தால் நான் அவர்களிடம் கேட்க்கப் போவது, சரி இவர்கள் ஈழத்தவர்களுக்கு எதிரி இல்லை என்று சொல்கின்றார்களே அன்றி, ஈழத்தவர்கள் சொல்கின்றார்களா எதிரியின் கூட்டணியில் இல்லாதவர்கள் இவர்கள் என்று, ஆக மகிந்தா கூட தமிழ் மக்களை நோக்கி சொல்லிக் கொண்டிருபது போல்
இவர்களும் சொல்லிக் கொண்டிருப்பவை அதே வகுப்பிற்க்குள்தான் வரும். அழிவுவெள்ளத்துக்குள் முக்குளித்துக் கொண்டிருக்கும் இனத்தின் பச்சையாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்காக ஆவது இவர்கள் குரல்கள் ஒலித்திருக்கின்றாதா எப்பவாவது? அந்த நேரங்களில் கூட மக்கள் நலன்களுக்கு வரும் காயங்களை விட சிங்கள அரசிற்க்கு வரும் காயங்களின் கவலைதான் இவர்களுக்கு மிகுதியான அக்கறையுடன் கூட விளங்குகின்றது. எனவே இவர்கள் எப்படி ஈழத்தவரின்மேல் பகை இல்லை என்று சாதிக்க முடியும்?

உலகத்தின் ஆதரவு இல்லாமல் புலியை அழிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த சிங்களம் ஆள்பிடிக்கும் முயற்சியின் பொருட்டு புலிவேறு மக்கள் வேறு என்ற போக்கை தமது போர் கொள்கைக்கு கொடி ஆக்கினார்கள்.
83 இல் வெறும் இருபதுவரையான ஆள் வலியுடன் இருந்த புலிப்படையின் இராணுவத் தாக்குதலுக்கு தமிழர் தேசத்தை எங்கும் மனிதப் பிணங்களின் காடாக்கினார்கள். ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாய் நான் ஒரு சிங்கள மக்களின் ஜனாதிபதி அவர்களின் உணர்வே எனது உணர்வுமாகும் என்று முழங்கினார் J R ஜெவர்த்தனா, மட்டும் அல்லாமல் தமிழர்களுக்கு போர்தான் பிடிக்கும் என்றால் போருக்கும் நான் தயார் என்று போர் பிரகடனமும் செய்தார்?
போர் செய்யும் இலட்சணம் இதுதானா அப்பாவிகளுடனா?
இன்றய நிலவரம்களின் அடிப்படையில் அவர்களின் கணக்கில் புலிஆட்டம் அடங்கிவருவதாக கொள்ளும் அவர்களின் மனக்கணக்கின் பாதிப்பால் இதுவரைகாலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இனவெறிப்பிசாசு மெதுவாக வெளிச்சத்துக்கு வருகின்றது,
ஜனனாயக வேசம் இதுவரை போட்டிருந்த இந்தப் பிசாசை ஈழத்தின் விடிவிற்க்கு வழியாக காட்டிகொண்டுவந்த இந்திய புலிஎதிர்ப்பு கட்சிகள் அது தனது சொந்த வேசத்தை காட்டும் நிலைமையை அடைந்தமையை இட்டு கலக்கம் கொள்கின்றன ஏன் என்றால் உடைபடப் போவது ஈழத்தில் பாசம் என்ற குட்டு மட்டுமா? தமிழ் உணர்வில் பாசம் என்ற குட்டும் அல்லவா?

Friday 3 October 2008

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்? - தங்கபாலு

இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்.இந்தியாவில் ஒரு கட்சிதான்இ அதுவும் காங்கிரஸ் கட்சிதான் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. ராஜீவ் காந்தியை பறிகொடுத்திருக்கிறோம். இதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும்.மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று சில கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தவறு.தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறோம். பிரதமரும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்திய மீனவர்கள் இந்திய எல்லையில் மட்டுமல்ல இலங்கை எல்லையிலும் மீன்பிடிக்கலாம் என்ற உரிமையையும் பிரதமர் வாங்கியிருக்கிறார். அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும். சுய நிர்ணய உரிமை ஆட்சியிலும், அதிகாரத்திலும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் ராஜபக்சேவிடம் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எனவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மிக பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸும், மத்திய அரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. அதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களை பொருத்தவரை மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கலாம். அப்படி அனைத்து கட்சிகளும் வந்தால் நாங்களும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து இந்த பிரச்சனையில் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார், கே.வி.தங்கபாலுநன்றி யாகூ தமிழ் (மூலம் – வெப்துனியா (தூக்கல் யாழ்களத்தில் இருந்து)


ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்?
சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சிகள் வளங்குகின்றோமே!
புலிகளின் கடற் செயற்பாடுகள் பற்றி தகவல்கள் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
ஆயுதங்கள் மிக நவீன ராடர்களும் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
சிங்களக் காடையர்கள் அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு கொல்லும் போது ஒரு சொல் கண்டனத்தை ஆவது அரசுக்கு எதிராக விட்டு இருக்கின்றோமா?
யாரைப் பார்த்து சொல்கின்றீர்கள் நாம் ஈழத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று?
இலங்கை அரசின் போக்கில் ஈழத்தவர்களை பாதுகாக்கும் பணி எந்த வகையானதோ எம்முடைய கொள்கையில் கூட அதுவே பொருத்தமாகப் படுகின்றது. அதனால்த்தான் நாமும் ஈழத்தமிழரின் சார்பின் எதைப் பேசுகின்றோமோ அதுவே சிங்கள அரசின் பேச்சாகவும் ஈழத்தமிழர்களின் சார்பில் இருப்பதர்க்கு காரணமும் ஆகும்!

Wednesday 1 October 2008

புலத்தில் பொங்கி எழும் மக்கள்கடல்!

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வாறு செயல்வடிவப்படுத்துவதைத் தவறவிடும் பட்சத்தில் அவர்களின் நடுநிலைமையும் நீதித்தன்மையும் கேள்விக்குரியானதாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் சார்பில் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
32 மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.






Tuesday 30 September 2008

சிறீலங்கா ஒரு பௌத்த நாடு! வெல்ல வருவோர்க்கு புதைக்கும் சுடுகாடு!

சிறீலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம்: எமது ஆட்சியில் புலிகளுக்கு இறுதித்தீர்வைக் காண்போம் -பிரதமர்
சிறிலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம். எனவே, இங்கு ஒருபோதும் பயங்கரவாதம் வெற்றிபெற முடியாது. பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும். எமது ஆட்சிக் காலத்திற்குள் விடுதலைப்புலி பயங்கரவாதத்திற்கு இறுதித்தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சைப்பிரசுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போனது. ஆனால், எமது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண்போம்.
எதிர்கால சந்ததியினர் சுமுகமாக வாழும் சூழலை உருவாக்குவோம். கிழக்கு மாகாணத்தை எமது படையினர் மீட்டெடுத்தனர். தற்போது அங்கு வாழும் மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் வடபகுதியிலும் இந்த நிலைமையே ஏற்படுத்துவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
வடக்கில் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும். இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.பௌத்த தர்மத்தின் அடிப்படையில் எமது நாடு அமையப்பெற்றுள்ளது.
மும்மணிகளின் ஆசீர்வாதங்களும் எமக்கு உண்டு. இது பௌத்த நாடு. எனவே, பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
(பதிவில் இருந்து http://www.pathivu.com/?p=4537)

ஐயா ரட்ணசிறிநாயக்கா!
இது பௌத்த நாடு இல்லை என்று சொல்லுகின்ற எதுவோ அதுதான் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வருமா?
பௌத்த தர்மம் எப்போது ஐயா தன் பொறுப்பை துப்பாக்கிகளிடம் ஒப்படைத்தது?
பௌத்த நாடு பயங்கரவாதத்தால் வெல்லப்பட முடியாது என்று உரைப்பது ஏனைய மதத்தை பழிக்கின்ற பொருள்தான் கொண்டிருக்கின்றது என்பது மறைபொருள் அல்லவா?

Monday 29 September 2008

சம்பூரே சாட்சி!

சிங்கள மண்ணில் மூன்றடி நிலத்தின் நிம்மதியாக ஒன்றுக்கு இருக்குக் உரிமை பறிபோய்விட்டால்கூட ஒரு நாட்டுக்கே வாழ்வுதரும் அமைதியை குலைத்து போர் புரிவது நியாயமானது.
தமிழ் மண்ணின் மொத்தமும் ஒன்றுக்கும் உரிமை இல்லாது அலைந்தாலும் அவர்கள் போரில் குதிப்பது நியாயம் துளியும் இல்லாதது.
இதுதான் சம்பூரில் துவக்கி வைத்த போரின் அறிவிப்பு!
இவை தமிழ் அடிவருடிகளின் அறிவுக்கூர்மைக்கு எட்டாதது.
‘கருத்தாளன் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் கருத்துக்கு இருக்கும் உரிமை மதிக்கப்படுகின்றதாம்’ என்று தேசம்நெற் தனக்குள்ளே சந்தோசப்படுக் கொள்கின்றது.
பரிதாபம் என்னவென்றால் அங்கு பதில் இடுவது அரிவரி வகுப்பினரே என்பதால் விசயஞானம் தூக்கலானவை நீக்கப்பட்டுவிடும்.
சத்தியக்கடுதாசி முகப்புக் குறள் ‘அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவோம்!’
இது செயலுக்கு சம்பந்தமில்லாக் குறள், அப்படி சம்பதந்தமானது இந்தக் குறள்தான்
‘தாயே என்றாலும் பணம் தந்தால் வேசி என்று பழிப்போம்!’
என்ன சத்தியக் கடுதாசி இக்குறளை மாற்றும் என்று நம்பலாமா?
அடுத்து இரயாகரன்;
ஒவ்வொரு பதில்களுக்கும் கேள்வி என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒன்று. செகிடு விசரில் புலம்புவதை ஒத்தது.
ஐயா உண்மை மருந்தளவுதான் உங்களிடம் இருந்தால் கூட விவாதத்திற்க்கு உங்களை இந்தளவு தொலைவில் ஒளித்துவைத்திருக்க வேண்டிய அவசியம்தான் வருமா?

அப்பாவிப் பிணங்களை எண்ணும் போட்டியில் பிராந்திய அரசுகள்!

தேர்தல் ஜனனாயகத்தின் சின்னம்தான் மறுக்கவில்லை,
துப்பாக்கிகளால் வலிந்த பிரசவம் செய்யப் படுகின்ற தேர்தல் முடிவுகளுக்கு பாராட்டுக்களை மூட்டை மூட்டையாக அனுப்பும் இந்த அரசுகள்,
அங்கே முடமாக்கப் பட்ட மனித உரிமைகள் பற்றி வாய்திறப்பார்களா?
அந்த விடுதலை நோக்கிய தவத்தை பயங்கரவாதம் என்று சேறுபூசம் அருகதை உண்டா இவர்களுக்கு!
இதோ பாருங்கள் ஊட்டி ஊட்டி உங்களால் வளர்க்கப்படும் அரசபயங்கரவாதம்,
அதன் பற்றக்ளுக்குள் தொங்கும் பாலகர் உடம்புகளை,
வயதான உடலங்களாய் இருந்திருந்தால் பயங்கரவாதி என்ற ஒரு சொல்லால்
உங்கள் கரவோசத்தை வாங்கிவிடுவார்கள்.
இதற்க்கும் ஒரு பொய்யால் முழங்காலையும் தலையையும் சேர்த்து முடிச்சு போடுவார்கள் ஏன் என்ற கேள்வி இல்லாத இடத்தில் பிழைப்பது அவர்கள் பதில்கள் அல்லவா?
பிராந்திய அரசுகளின் அட்டூளியம் எம்மண்ணில் இதோ பாருங்கள்!





Friday 12 September 2008

இந்தியாவின் பழைய இரும்புகளுக்கு கடையாகின்றதாம் இலங்கைப் படை!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலகத்திலும் நேற்றுக் காலை நடைபெற்றன. இச்சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்குமிடையிலான வெளிவிவகார மட்டத்திலான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன என்றும் 1952 ஆம் ஆண்டு இறப்பர், அரிசி மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை தொடர்ந்தும் இன்றுவரை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளமை குறித்து இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றும் அரச தகவல்கள் தெரிவித்தன

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

புரியாத புதிராய்த்தொடரும் புலிவிமானத்தின் துணிச்சல்களினால் குளம்புகிறது திவயின!

புலிகளின் விமானத்தை செலுத்தியவர்கள் தொடர்பாக சந்தேகம் தெரிவிப்பு

அண்மையில் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள கடற்படைத் தலைமையகத்தைக் குறிவைத்து புலிகள் இயக்க விமானப்பிரிவினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல் பற்றிய உயர்மட்ட விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின்போது புலிகள் இயக்கத்தின் விமானத் தாக்குதல்கள் பற்றி பல சந்தேகங்கள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தவகையில் மேற்படி திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலின்போது புலிகள் இயக்க விமானத்தைப் புலிகள் இயக்கத்தின் விமானப்பிரிவு உறுப்பினர்கள்தான் செலுத்தி வந்தார்களா எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, சம்பவத்தின்போது திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தலைமையகம் மற்றும் அண்டிய அனைத்துப் பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் இந்நிலையில் கடற்படைத் தலைமையகத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீச்சை நடத்தியிருப்பதாகவும் இவ்வாறு இருளிலும் தாக்குதல் இலக்கைத் தேடித் தாக்குதலை மேற்கொள்ள முடிந்திருப்பதே மேற்படி பாதுகாப்பு உயரதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறையின் குறித்த உயர்மட்டம் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப, புலிகள் இயக்கம் திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தின் மீது தொடுத்துள்ள விமானத் தாக்குதலின்போது விமானத்தை புலிகள் இயக்கத்தின் விமானமோட்டி செலுத்தாது வெளிநாடு ஒன்றைச்சேர்ந்த விமானமோட்டிகள் செலுத்தியிருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, புலிகள் இயக்கம் அதன் விமானத்தைச் செலுத்த வெளித்தரப்பிலிருந்து விமானமோட்டிகளை கூலிக்கு அமர்த்தியிருக்கலாம் என்பதே மேற்படி பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகமாகும். இந்த சந்தேகத்தின் சார்பில் புலிகள் இயக்கத்தின் உத்தேச விமானமோட்டிகள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டவர்களா, வெளிநாட்டவர்களாயின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்தத் தகவல்களும் பாதுகாப்பு உயரதிகாரிகள் தரப்பிலிருந்து தெரியவரவில்லை.

திவயின: 07.09.2008 ( தினக்குரலில் இருந்து)

இந்தியாவிடம்கூட இல்லாத பலம் தங்களிடம் என்கிறது திவயின!

சக்தி வாய்ந்த ஏவுகணைப்பலம் இந்தியாவிடம் இல்லை


கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமடைந்த நிலையில் சிறிலங்கா அரசு அரச படையினரின் யுத்த நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு அத்தியாவசியமான நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துவருகிறது. இவ்வாறு சில மாதங்களின் முன்னர் செக்கோஸ்செலவக்கியா நாட்டிலிருந்து யுத்த களத்தில் தீவிர தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த கிராட் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சிறிலங்கா அரசு செக்கோஸ்செலவக்கியா அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தது.
இதையறிந்த புலிகள் இயக்கம் உடனடியாக ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் பிரதிநிதிகள் பிரமுகர்கள் மூலமாக இந்த கிராட் ஏவுகணைகளின் கொள்வனவைத் தடுப்பதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இவ்வாறு ஒரு நாடுகளிலிருக்கும் புலிகளுக்குச் சார்பான பிரபல அரசியல்வாதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகவும், அத்துடன் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகளுக்கெதிராக எதிர்ப்பைத் தெரிவித்தும் இவ்வாறு பல வகையிலும் செக்கோஸ்செலவக்கியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகள் வழங்கப்படுவதைத் தடுக்க உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் சிறிலங்கா அரசு ஏனைய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வாங்குவதையிட்டு பொதுவாகவே அதிருப்தியடையும் அண்டைய நாடாகிய இந்தியாவும், மேற்படி கிராட் ஏவுகணைகளை செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து சிறிலங்கா அரசு வாங்குவதையிட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது. இந்நிலையில் இந்திய அரசும் இவ்வாறு சிறிலங்காவுக்கு செக்கோஸ்செலவக்கியா அரசு கிராட் ஏவுகணைகள் வழங்குவதைத் தடுக்க மறைமுகமாக முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. ஆயினும், புலிகள் இயக்கத்தின் மேற்படி ஆதரவு வட்டாரங்களின் முயற்சிகளோ அல்லது வேறு நாடுகளின் அரசு சார்ந்த முயற்சிகளோ பயனளிக்கவில்லை. சிறிலங்காவுக்கு கிராட் ஏவுகணைகளை வழங்குவதென்று தீர்மானத்தை செக்கோஸ்செலவக்கியா அரசோ அல்லது பாதுகாப்புத் துறையோ மாற்றவில்லை. இதன் பயனாக அண்மையில் கிராட் ஏவுகணைகளை சிறிலங்கா அரசு பெரும் எண்ணிக்கையில் செக்கோஸ்செலவக்கியாவிலிருந்து பெற்றது. தற்போது இந்த கிராட் ஏவுகணைகளை வன்னி யுத்த நடவடிக்கைகளில் அரச படையினர் பயன்படுத்தி வருவதாகவும், இந்த கிராட் ஏவுகணை பலம் முன்னர் புலிகள் இயக்கத்தினர் ஆணையிறவு மீது தாக்குதல் மேற்கொண்டபோது அரச படையினரிடம் இருக்கவில்லை எனவும் இருந்திருந்தால் புலிகள் இயக்கத்தின் ஆணையிறவுத் தாக்குதலை முற்றாக முறியடித்திருக்கலாம் எனவும் உயர் மட்ட இராணுவத் தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யுத்தகளத்தில் தீவிர யுத்த நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணை வகைகளில் கிராட் ஏவுகணைகள் மிகக் கூடுதலான தாக்குதல் பலம் வாய்ந்தவை எனவும், இவ்வாறான கிராட் ஏவுகணை பலம் இந்தியாவிடம் கூட கிடையாது எனவும் மேற்படி இராணுவ உயர் மட்ட தகவல் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளன.

திவயின: 7.09.2008 (தினக்குரலில் இருந்து)

Thursday 7 August 2008

அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்

தினமினவில் வரும் செய்திகள் சூடு ஆறாமலே இரயாகரனின் வாந்தியாய் வரும், எனவே இரண்டையும் தனித்தனியாய் ஆராய வேண்டிய தேவை எனக்கு இல்லாமல் போகின்றது.
“போர்வெற்றி பற்றிய மாயை அடியோடு சாய்ந்து போய் விட்டது”,
“தொடர்தோல்விகளின் மனஉளைச்சல்களால் களத்தளபதிகளிடையே முரண்பாடு வலுவடைந்து கொண்டுவருகின்றது.”
“ அரசபடைகள் நிலங்களை மீட்டுக்கொண்டுவரும் அதேவேளை புலிகள் உதிரிகளாக காடுகள் நோக்கி ஓட்டம் எடுக்கின்றார்கள், மிகப் பெரிய அளவிலான புலிகள் தமது அமைப்புக்களில் இருந்து தலைமறைவாகிக் கொண்டிருக்கின்றார்கள்,”
இப்படி அரசஊடகங்கள்
பொய்மையின் உச்சத்தை போராட்டத்தின் மிக ஆரம்பத்திலேயே பயன்படுத்திவிட்டார்கள்.
இந்தக் கூற்றுக்கள் எப்போது சொல்லப்பட்டது?
ஜயசிக்குறு வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்த போதா?
இல்லை யாழ்மண் ஆக்கிரமிக்கப்பட்ட நடவடிக்கையின் போதா?
இல்லை அதற்க்கும் முந்தைய பாரிய நடவடிக்கைகளின் போதா?
இல்லையே எல்லாவற்றுக்கும் முன்னதாக மேற்க்கொள்ளபட்டிருந்த மிகச்சிறிய நடவடிக்கையின் போது.
மிச்சம் பின்னுக்கு என்று வைக்காமல் மொத்தமாய் பொய் சொல்லிவிட்டார்கள்,
எனவேதான் பின்னால் வரும் நடவடிக்கைகளுக்கு புதிய வழிமுறையை பின்பற்றுகின்றார்கள். அவை இப்படித்தான்,
நேற்றுவரை இருந்து வந்த உண்மயான போராடும் வலு இந்த நடவடிக்கையால் அடியோடு தகர்க்கப்பட்டு விட்டது.
நேற்றுவரை இருந்த மக்களாதரவு புலிகளின் தளம்பல் கொண்ட நிலைப்பாடுகளால் கைவிரிக்கத் துவங்கிவிட்டது.
பின் வரும் கூற்று இரயாகரன் வாய்மொழியில்..........

பி. இரயாகரன்.
உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு
பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?
நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான
அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.பலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக்
கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க.......................,


அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில்
முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.
புலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்து, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான
ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது.



ஐயா இன்னும் ஒரு கேள்வி !
ஒரு சிறியநாடுகூட தனது போக்கிற்று குறுக்கீடுசெய்யாத நிலையில் சர்வவல்லமை கொண்ட போரசசுகள் துணையுடன் போர் புரியும் ஒரு அரசை எதிர்த்து தனக்கென நிலத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தக்கவைக்கின்ற அமைப்பின் உறுப்பினர் தொகையை கும்பல் என்று பெயரீடு செய்வது
தமிழ் இலக்கணத்துக்கு அமைவாகவா இல்லை இரயாரன்விருப்பத்துக்கு மரபு அமைதியாகின்றதா?

Thursday 31 July 2008

உங்களால் பயன்பெறுவது மக்களா? அம்மக்களின் எதிரியா?

மக்களுக்காக உழைக்கின்ற ஒரு அமைப்பிற்கு சொத்து அம்மக்களின்
உணர்வுகள்தான்!
இன்று புலிஎதிர்ப்புவாதம் எல்லாம் தம்தலையில் அடித்து ஒப்புவிப்பது என்ன? தமது அமைப்புக்களின் வாழ்வே மக்களுக்கு பயன்படத்தான் என்பது.
வரிக்குவரி இவர்களின் புலிஎதிர்ப்பு வாய்பாடுகளில் நம்பகத்தன்மைக்கு ஆயிரம் ஓட்டைகள் இருப்பினும், எமது கேள்வி இவைகளின் ஆணிவேரை பிடுங்கிப் பார்க்கவே விரும்புகிறது.
மக்கள் போற்றுவது புலிகளையா? இல்லை புலிஎதிர்ப்புவாதத்தையா? என்ற கேள்வியின் பதிலில்: உண்மையை வெளிச்சத்துக்கு தரும் நியாயம் இருக்கின்றது,
புலத்தில் புலிகளின்பால் பொங்கி எழும் மக்கள் ஆதரவு, உலகத் தமிழர்களின் புலிஆதரவுக்கு சாட்சியாய் விளங்குகின்றது.
மக்கள் ஆதரவு எமது பக்கமே உண்டு என்பது மகிந்தாவின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன? புலிஎதிர்ப்புவாதத்தின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன?
நெருப்பென்ற சொல்லு சுடுவதில்லைப் போல்த்தானே இதுவும்.
இரயாகரன் முதல் அனைத்து அடிவருடிகளும் மக்கள் ஆதரவுப்பலத்தில் புலிகளைவிட நாம்தான் சிறந்து விளங்குகின்றோம் என்று நிரூபிப்பதே, அவர்களின் பயன் மக்களுக்கா, இல்லை அவர்தம் எதிரிகளுக்கா என்ற உண்மை முகத்தைக் காட்டப் போதுமான ஆதாரம். எங்கே! முடியுமா எவருக்காவது?

Wednesday 30 July 2008

இந்தி(ய)க் கொள்கையும் ஈழமும்!

இந்தியவாதம் தமிழர் இனப்பிரச்சினையை எப்படிக் கையாண்டது?
மனிதாபிமானம் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றதா?
சொந்த தேசநன்மையின் பொருட்டு அடுத்ததேசியத்தின் உணர்வுகள் உதாசீனம் செய்வது உலக அரசியலின் மரபு தானே என்று வாதிடலாம்?
கையாண்ட முறை இந்தியாவுக்கு உரியதாய் அல்லாமல் இந்தி-யாவுக்கு உரியதான இயல்பு தெளிவாகத் தெரிகின்றமைதான் எமது விவாதத்தின் அடிப்படையே!
இந்தியா என்ற அரசியலில் தமிழ்நாட்டின் பங்குக்கு மரியாதை கிடைக்கின்றதா? என்பதே முன்னுரிமை அளித்து விவாதிக்கப் படவேண்டிய விடயம்.
ஈழத்தில் குயறாத்தியோ, இந்திகாறரோ வாழ்ந்திருந்தால்
வாழும் உரிமைக்கு போராடி குற்றுயிராய் கிடக்கும் தன் இனத்தை
அதற்க்கு காரணமான அந்த ஆபத்திடமே கூட்டிக் கொடுக்கும் ஒரு வியாபாரத்தை இந்தியக் கொள்கை என்று இந்த அரசு செய்திருக்குமா?

எனவே இந்த ஈனத்தனத்துக்கு காரணமான இந்திய செயற்பாடுகளை ஒருதமிழனாய் இருந்து ஆதரவாகப் பேசுகின்றான் என்றால் அவன் தமிழ் உணர்வுக்கு சந்ததிப்பகை கொண்ட ஒருவனாய்த்தான் இருக்க வேண்டும்!

Monday 28 July 2008

சில அற்பங்களின் புலிஎதிர்ப்பும் அதன்மீதான பார்வையும்!

இதர அமைப்புக்களின் செயற்பாடுகளை ஒரு முடக்கநிலைக்கு கொண்டு வந்த அந்தக்காலம்,
முப்பத்தைந்து வருட முதிர்ச்சியில் பெருவிருட்சமாய் விளங்கும் புலிஅமைப்பு
அன்று அதன் வளர்ச்சி நிலையில் ஒரு செடிபோல் இருந்தகாலம்,
இவர்கள் சொந்த அநுபவம் கொண்டு புலியை அறிந்தது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் வருகின்ற ஒரு சிறிய காலப்பகுதி மட்டும்தான்.
புலிகளின் காலத்துக்குள் முழுமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு
இந்த அற்பங்கள் புலியிசம் பற்றி கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனமா? அல்ல அங்கு வாழ்கின்ற அனைவரும் விளங்காதவர்கள் என்ற எண்ணமா?
தமிழீழத்தை மீட்கும் போர் இன்று ஒரு கடினமான பாதையில் நிற்கின்றது என்றால்
அதன் இயக்கமாக இருக்கும் புலிகளின்பால் உள்ள பொறுப்பு பறிய ஆராட்சியை தற்காலிகமாக தள்ளி வைத்து தனியே தமிழீழத்தின் புதுப் பிறப்பு ஏற்படுத்தும் பாதிப்புக்கு பூகோழ அரசியல் காட்டப்போகும் மறுதாக்கம் என்ன?
நிட்சயமாக எந்த ஒரு பிராந்திய சக்தியும் உபயோகப்படும் சாத்தியமே இல்லை.
எனவே இது கல்லில் நார் உரிக்கும் ஒரு விதியாகவே இருக்கப் போகின்றது.
எனவே இத்தகைய பாதகமான ஒரு சூழலில் போராட்டத்தின் ஆயுள் தக்கவைப்பு என்ற ஒன்றே அதன் செம்மையான நடதையை வெளிச்சப்படுத்த போதுமானது.
பணத்தால் போராட்டம் வாங்கப்பட முடியவில்லை என்பதுதானே காலம் எழுதிய வரலாறாய் உள்ளது.
படை பலம் கொண்டு எந்த சக்தியாலும் அணைக்க முடியாத கொள்கைப் பற்று, அதுதான் புலிகளினுடைய மூச்சு என்பது பாரத்தின் சோதனையில் தெரிவான முடிவு. இது உலகமே அறிந்து வைத்திருக்கும் உண்மை அல்லவா?

ஒரு பைத்தியம் போதைகொண்டு பிதற்றுவதற்கு ஈடான தகவல்களின் தராதரம் கொண்ட ஒரு பத்திரிகைதான் தினமின எனும் சிங்களப் பத்திரிகை இதற்கு, ஈடாகவே இங்கும் புலிக்காய்ச்சல் பீடித்த சில அற்பங்கள் புலிஎதிர்ப்பில் ஊடக யுத்தம் செய்கிறார்கள்,
இரயாகரன்,
சிறீரங்கன்,
சோபாசக்தி,
இந்த வரிசையில் இன்னும் பலர்
பணத்தாசை ஊட்டி வளர்த்த அந்தக் கொள்கைதான் உங்கள் பகுத்தறிவை விலங்கிடுகின்றதா?
ஐயா! புலிவாழும் காலம் வரைக்கும்தான் துரோகிகள் காட்டுக்கு மழை!

Sunday 27 July 2008

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள்!


புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்




பி.இரயாகரன் - 2008

Written by பி.இரயாகரன்
Sunday, 27 July 2008 11:46
தமிழ் மக்களுக்கு விடிவு கிடையாது. எந்த சுபீட்சமும் கிடையாது. எந்த நம்பிக்கையும் கிடையாது.
இருண்டு போன பாசிச சூழலுக்குள், மக்கள் மீள மீள அழுத்தப்படுகின்றனர்.

புலிபாசிசத்துக்கு எதிரான வரலாறு, மிக வேகமாக மக்களால் எழுதப்படுகின்றது.
மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் சாகடித்து விட்டு, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள்,
அதன் சொந்த விளைவையே தான் அனுபவிக்கின்றனர். முடிவின் (புலிப்பாசிசத்தின்) நாட்கள் எண்ணப்படுகின்றது.


புலிகள் அழிந்துபோவார்கள் என்ற கனவுவானில் மிதப்பவர்கள் எவராவது அந்தக் கனவுக்கு புதிய வரவாக இருந்தால் எமது விளக்கம் அவர்கள் அறிவு நிலைக்கு தேவையாகலாம், அவ்வாறு இல்லாமல் முப்பதுவருடங்களுக்கு மேலாக ஒரேவரியைத் திரும்ப திரும்ப சொல்பவர்களுக்கு அது அவசியமே இல்லை இன்னும் சொல்லபோனால் கனவுப்பைத்தியங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இழப்புக்களும், பழையநிலைக்கு மீளமுடியாத தோல்விகளும் புலிகள் கொள்கையின் பாதையைத் தீர்மானிப்பவைகளாக இருந்திருந்தால் அது பாரதப்படையின் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் ஏன் எனில் அப்போதுதான் தமது ஆட்சியில் சிறுநிலமும் இல்லாமல் காட்டில் மறைந்து வாழ்தல் கதியாக இருந்தது.
அந்த நிலையில் கூட கொண்ட கொள்கையின் மாற்று குறையாமல் காப்பாற்றிய புலிகளுக்கு வாயை அன்றி வேறு ஒன்றுக்கும் வக்கில்லாத நாய்கள் வழி சொல்கிறார்களாம்.
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டார் இரயாகரன் இது சிறுபிள்ளைத்தனமான உபாயம்.
புலிஆதரவை உள்ளங்கையளவாக அளவீடு செய்து கொண்டிருக்கின்றார். எங்கே புலிஎதிர்ப்பு அதைவிட எத்தனை மடங்கு பெரியது அல்ல சிறியது என்று ஆதார பூர்வமாக சொல்ல முடியுமா? இந்த நிலையே அவர் அறிவின் கோளாற்றை வெளிப்படுத்தும் போதிய ஆதாரம்.
தனிமனித தாக்குதல்கள் செய்கின்றோம் என்று முனகிக் கொள்கின்றாராம்!
அவர் இணையபக்க ஆரம்ப காலங்களில் எழித்தறிவு உள்ளவனுக்கு இருக்கும் தராதரத்தைக்கூட மறந்து ஒரு குடிவெறிப் புலம்பலுக்கு இருக்கும் கீழ்த்தரமான வார்த்தைகளை இறைத்தார் தனிப்பட்ட மனிதர்களுக்கு எதிராக உதாரணம் “சாந்தன் அண்ணா பற்றிய விமர்சனத்தில்”

ஒரு தமிழ் ஊடகம் ஒன்றில் சிங்கள அரசுக்கு எதிராக போடும் கூச்சல் அது சிங்களத்தர்புக்கு எந்த மாற்றத்தையும் விளைவிக்க முடியாத ஒரு வினையே ஆகும்.
ஏன் எனில் அது தமிழ்தரப்புக்கு பச்சையாகாத் தெரியும் உண்மை. ஆதலால் இரயாகரன் போன்றோர் சிங்களஅரசுமீது காட்டும் கடும் விமர்சனம் தமது கருத்தியல்நிலையின் நம்பகத்தன்மை இலாபத்துக்காகவே ஆகும்.

சிங்களஅரசின் உண்மையான விரோதம் புலிகள்மீதா?
அவர்களிடம் இருக்கும் தமிழீழ இலட்சியப் பற்றின்மீதா?
இலட்சியத்தை அவர்கள் கை துறக்கத்தாயார் என்றால் சிங்களம் என்ன விலையும் கொடுக்கத் தயார் அவர்தம் உறவுக்கு, எனவே இன்று சிங்களம் தன் சக்திக்கு முடியாத அளவிலும் போரை சுமக்கின்றார்கள் என்றால் புலிகளின் இலட்சியப் பற்றுக்கு கிடைத்த வெற்றியாகும்!
இன்று ஒவ்வொரு சிங்களவனுக்கும் பயங்கரவாதமாகத் தெரிவது புலிகளின் நடைத்தை அல்ல அவர்கள் மண்ணில் கொண்டாடும் நிலஉரிமை.
தமிழீழம் என்ற கனவு எவனுக்கு இருக்கின்றதோ மரணம் அவனுக்கு ஒரு தண்டனையாகத் தகும் இதுவே அவர்களுக்கு இயல்பான எண்ணமாகிறது.
என்வரையின் இரயாகரனின் கும்மாளம் பச்சையாக சிங்கள அரசுக்கு குண்டிகழுவும் செயலேயாகும் இதில் சந்தேகமே இல்லை.
சிங்கள அரசை அச்சம் கொள்ளச் செய்யும் சக்தி புலிகளை அன்றி வேறொன்று இல்லை அப்படி மாற்று சக்திகள் போல் இருப்பவை எல்லாம் புலிகளை அழிக்கும் திட்டத்தின் குட்டித்திட்டங்களாக அரசசக்தியாலேயே உருவாக்கப் பட்டவைதான்.

தமிழ் இனத்தின் அக்கறையில் உதயமான ஒரு சக்திக்கு அந்த இனத்தின் சாவை வியாபாரம் செய்ய முடியுமா?
புலிகளை அழிக்கும் முடிவு இன உரிமையின் விடியலுக்கு வாசல் என்று சொல்கின்ற இவர்கள் ஏன் அந்த உரிமைகளைத்தரும் கதவுகள் புலிகளை வைத்துக் கொண்டே திறக்கக்கூடாதாம்? புலிகள் கண்ணுக்கு முன்னால் ஏன் திறக்கப் பயப்படுகின்றார்களாம்?

Thursday 12 June 2008

நடைமுறைக்குச் செல்லாத புலம்பல்கள்!

இனப்பிரச்சினை முடிவைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டம் என்ன?
சரி இப்போது தமிழினத்தின் உரிமைமீட்பு நடவடிக்கைக்கு பாதகமான காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.
தெற்கின் சிங்கள அரசியலின் மரபுதான் என்ன?
ஏறும்பு கொல்லப்படுவதைக்கூட விரும்பாத துறவி போருக்கு புறப்படுகின்ற போக்கு சொல்லுகின்ற செய்தி என்ன?
தமிழர்களை புலிப்பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பதற்க்காகவா?
பௌத்த இராட்சியத்தை விட்டு எந்த நிலமும் பறிபோகக்கூடாதே என்பதற்க்காகவா?
இதுதான் தெற்கின் சிந்தனைவாதம் ‘குழிநிலம் கூட சொந்தம் என்று தமிழர்களால் சொல்லப்படுவது’, உடம்பு முழுவதும் நெய் ஊற்றி எரிப்பதுபோல் கோவம் கொப்பழிக்கின்ற விடயம்.
அப்படி ஒரு சிந்தனைதான் ஏகமாக தமிழர்களிடம் இருக்கும் என்றால் அந்த கடைசி ஒருதமிழனின் அழிவு வரைக்கும் செய்யும் இனப்படுகொலை தெற்கிற்க்கு இனிப்பாகவே இருக்கும்.
எனவே ஒரு இனத்தின் உரிமை மீட்புக்கு படுகொலையையே அஸ்திரமாக பயன்படுத்தும் ஒரு அரசிடம் தன் உயிரின் இருப்பையே மேல்நாட்டின் தயவில் காப்பாற்றும் இரயாகரன் போன்றோர் சொல்லும் மண்ணாங்கட்டித் தீர்வுகள் நடைமுறைக்குச் செல்லுமா?
21ம் நூற்றாண்டிலும் புதிய, புதிய ஆயுதங்களின் கண்டு பிடிப்புக்கள் ஊடாகவே ஏனய அரசுகளை மிரட்டிக் கொண்டிருப்பதே இறமை உள்ள அரசுகளுக்கே மரபாகிப் போன பாணி, அந்த நாடுகளே வன்முறை தீர்வுக்கு வழிஆகாது என்று மற்றவர்களுக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
எந்த அரசும் இன்னொருநாட்டின் பிரச்சினைக்குள் மூக்கை நுளைக்கும் போது தமது சொந்தக்கருத்தை உண்மைக்காக பொழிகிறார்களா? அல்லது அரசியல் ஆக்குகிறார்களா?

Monday 2 June 2008

விடுதலைக்கு மாற்றுப் பாதை காட்டும் மண்ணாங்கட்டிகள்!

எதிரி ஒரு யானை ஆக இருக்கின்ற பொழுது பூனையின் அளவுக்கு இருக்கின்ற ஒன்று அதன் பகையை சம்பாதிக்கின்றது என்றால் அதன்
நோக்கத்தின் முதன்மைக் காரணமான வெற்றி குறிவைக்கப் படுவதற்கு பதிலாக வருமானம் ஒன்றே அதன் வேசத்துக்கு குறியாய் இருக்க முடியும்.
புலிச்சார்பு கருத்துவாதம் என்றால் அதை அனுமதிப்பதும் பதிலளிப்பதும் அவசியமே இல்லாதது என்ற கருத்துடையவர் இரயாகரன். இதுதான் அவர் அறிந்தவரையான கருத்து சுதந்திரத்தின் பண்பு என்பதனாலோ, பதிவர்களிடம் இருந்து வாங்கிக்கட்ட முடியாது என்பதனாலோ தெரியவில்லை.
இரயாகரனுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பின் அதே நகல் தானோ இந்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் இருக்கின்றது புலிகளின் மீது
ஒரு தேசத்தின் இறைமையை ஊறு செய்கின்ற விதியாக இருப்பதுதான் இந்திய, சிங்கள புலிஎதிர்ப்புக்கள் இவற்றின் வலையில் மாட்டுப்படாமல் இருக்கின்ற திறமைதான் அதன் இலட்சியம் விலை போகாமையைக் காட்டுகின்ற காட்டி!
எங்கே இதை எல்லாம் சோத்துக்கு கதை எழுதுபவர்களுக்கு நான் அளந்து கொண்டிருக்கின்றேன் வேலை இல்லாமல்!

Sunday 10 February 2008

சுகவாழ்விடம் சரணடைந்த தமிழ் ப்பிரதிநிதிதுவம்

சிங்கள அரசின் கூட்டதுக்குள் அவர்களோடு சேர்ந்து கொடிபிடிக்கும்
தமிழர்களின் பிரதிநிதிகள் என்று தாங்களே சொல்லித்திரியும்
அந்த தமிழர்களின் செயல்ச்சிறப்புக்களை மேடை ஏற்ற இன்னும் ஒரு உதாரணம் தேடவே வேண்டாம் அல்லவா?
இந்த திருத்தம் சொன்னாலே சிங்களதரப்பின் மனம் வாடும் என்று வாளாதிருக்கின்ற தாராள மனம் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் அல்லவா?

Monday 7 January 2008

எட்டப்பநோய்களும் தமிழனும்!

தேர்தலில் தமிழ்மக்களால் தண்ணி தெளித்து விடப்பட்டவர்கள்தான்
இந்த சங்கரி, டக்களஸ், மற்றும் ஒட்டுக்குழுக்கள் என்பவை.
காட்டப்பட்ட சிங்கள விசுவாசத்துக்கு போடப்பட்ட பிச்சைகளாக வைத்திருக்கும் பதவிகள்.
தீர்வை கண்ணில் காட்டினால் மகிந்தா வீட்டுக்கு போவார் என்ற அரசியல் சூழல் வெளிச்சதுக்கு வந்து விட்டது. இந்த நிலை ஒருபுறம், மறுபுறம் போர்பிரகடனம் புலியோடு. இப்படிப் போகுது சிங்களத்தலமை.
சங்கரி என்ற சொறிநாய் என்ன சொல்கிறது. சிங்களவர்களில் 99 வீததினர் தமிழர்களுக்கு உரிமை கொடுக்க உடன்பாடாக இருக்கின்றார்கள், ஆக இதுவரை போர் செய்து சிங்களவன் செத்துக்கொண்டிருப்பது உரிமை கொடுப்பதற்க்காகத்தான்.

அடுத்து டக்ளஸ் இது சொல்கிறது ஜனனாயக போட்டி அரசியலை எதிர்கொள்ள முடியாத புலிப்பாசிசம் போட்டுதள்ளுதலையே வழியாய் கொண்டுள்ளது.
அட நாயே ஜனனாயக தேர்தலில் தோல்விக்கு வரலாறாக அல்லவா உனது வாக்குகள் எண்ணப்பட்டன. உன்வாய்க்கு ஜனனாயகம் பேச என்ன யோக்கிய்தை இருக்கிறது. சிங்கள விசுவாசத்துக்கு கிடைத்த பிச்சையாக சிங்கள அரசால் தேசியப்பட்டியலூடு அமைச்சன் பதவி. நாயே உன்பதவி சிங்களவனுக்கு குரைக்காமல் வேறு தமிழனுக்கா குரைக்கும்.

அடுத்து சிறீரங்கம், ரயாகரம் இது இரண்டும் எட்டப்ப நோய்கள்!
கண்டதைத்தின்னும் நாயகள்!
புலிப்போருக்கு வயது முப்பது இதை
தோளில்தாங்க ஒரு அரசில்லை இன்னும்
எதிரியைத்தாங்க முரண்பாடுகள் மறந்து கூட்டமாய் வல்லரசுகள்
இந்த சாதகத்தை எதிரி அநுபவிப்பதற்க்கு காரணமும் புலியின் நடைப்பிழை அல்ல
இலங்கையின் பூகோழ நிலை ஒன்றுதான்.
இருநூறாயிரம் இராணுவம் மானியமாய் பெற்ற வல்லரசின் போர்த் தளபாடங்களுடன், விஞ்ஞான நுட்பத்தின் உச்சத்தை பயன் படுத்தும் தொழில்நுட்பத்துடன் முப்படைகளுமாய் முப்பது வருடப் போரில் என்னத்தைக் கிளித்தார்களாம்.
கதைதான் அளக்கின்றார்கள் காலம் காலமாய்.
கோடு போட்டு நிறுத்தி வைத்திருக்கும் புலிப்பலத்தை
விஞ்ஞான வித்தைகளுக்கு பலிக்காத அந்த அற்புதத்தை
உலகம் படிக்கைவைத்த அந்த தமிழன் தொழில்நுட்பத்தை
என்றும் காலங்கள் புகழ்பாடும் எங்கள் தலைவனின் வீரத்தை.

அடைக்கோழியின் கொக்கரிப்புக்களாக
கையாலாகாத்தனங்களின் வாய்க்கு வந்த வியாதிகளாக
வாசல்கள் அண்டாத சொறிநாய் பிழைப்புக்களாக
தமிழன் மானத்துக்கு வந்த சிரங்குகளாக
தாயைக்கூட விற்கும் ஈனப்பிழைப்புக்களாக
மனிதன் என்ற பேர்வாங்க நடத்தைகளில் துளி மானம் இல்லை எடைக்கு
புலிஎதிர்ப்பு பிச்சை எடுப்பது தமிழன் எதிரிகளிடம்
ஈழத்தமிழனின் ஆதரவைக் கொண்ட ஒருவன் புலிஎதிர்ப்பை உச்சரிக்க காட்டுவாயா?
நாலுபேர மதிக்கும் நிலையை முதலில் ஒருவன் நடைத்தை பெற்றால்
அவன் பேச்சுக்கு தகுதி தானாய் வரும்.
நாய்களே உங்கள் நடத்தைகள் நாறும் சாக்கடைகள்
வயிற்றுக்கு எதையும் விக்கும் கால்நடைகள்
நவீன திருவோட்டு வாதிகள், பொதுவுடமை வாதமா இப்போது ஜெபிப்பது
“அம்மா பிச்சை” என்னும் வசனம் தொலைந்து விட்டதா?