என்ன தேவைகள் அதன் அடிப்படையாக கொள்ளத் தக்கதாகும்.
சிங்களத்தின் போக்கில் தானாக வந்திருக்கத்தக்க நல்ல மாறுதல்களை புலிகளின் நடவடிக்கைகள் கெடுத்து விட்டது என்பதாலா?
காகிதங்களில் முடிவுவரை எட்டிய தீர்வுகள் ஜனனாயகத்தின் செங்கோல்களால் பரிதாப கரமாக கிளித்தெறியப் பட்டமைக்கு யார் காரணம் தமிழ்துவேசமா, புலித்துவேசமா?
புலிகருவுற்றதே அந்த சம்பவங்களின் பின்னாட்களில்த் தானே!
இன்று கூட இனப்பிரச்சினை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவதில்கூட தன் பொறுப்பை காட்ட தயங்கும் சிங்களத்திடம் கையேந்தும் போக்கு பெற்றுத்தரும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது அல்லவா?
புலிப்போரின் சேதாரங்கள் சிங்கள் ஆட்சியின் அத்திவாரம் வரை ஆட்டம் காணச்செய்தும்,
தமிழர்களின் உரிமைகளின் மீதுள்ள அந்த உடும்புபிடியில் மட்டும் மாற்றம் எதுவும் ஏற்படாமை என்னத்தை சொல்லுகிறது?
சிங்களவாதம் தனக்கு அகிம்சையில் உள்ள பற்றுறுதியைக் நிலைநாட்டுவதற் காகவா அந்த உடும்புப் பிடி புலிப்பயங்கரவாதத்தின் இம்சைக்குள் தவம் கிடக்கிறது என்பதையா?
சுத்தமான ஜனனாயகம் வாழும் நாட்டின் காட்டு மிருகங்களின் கொலைகள் கூட தடுக்கப் படுகிறது.
அரச சிறைக்குள்ளே கூட்டம் கூட்டமாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், "வெளியில் இருந்து வந்த ஆயுத தாரிகளால் கொல்லப் பட்டார்கள்" என்று அரசு தருவது பொறுப்பான பதில்களா?
சிங்கள நிர்வாகத்தின் பாதுகாப்புக் கூட பாதுகாக்க முடியாது தமிழன் உயிர் என்றால்
தமிழனை தன்வீட்டு நாயாக வைத்திருக்கவா சிங்கள ஜனனாயகம் ஆசைப் படுகிறது.
மெலிந்த இனத்தை வலிந்த இனம் ஆடும் நரவேட்டை ஜனனாயகம்,
வலிந்த இனத்திடம் மெலிந்த இனம் செய்யும் தற்க்காப்பு பயங்கரவாதம். தமிழரின் தலைமைப் பொறுப்பு புலிகளின் கையில் சேருவது என்பது சிங்களத்துக்கு உடம்பு முழுவதும் கசக்கின்ற விடயம், ஏன் எனில் பலதலைமுறைகளாக வெற்றியை சாதனையாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் ஏமாற்று வித்தைக்கு புலிப்போராட்டமே அதன் புதைகுழிகள் என்பதனாலா? இல்லை தமிழன் துன்பங்களின் மேல் கொண்டுள்ள அக்கறைகளினாலா?
துரும்பைக் கூட தமிழனுக்கு கொடுக்கத் தயார் இல்லை என்ற போக்குக்குத்தான் தமிழர் தலைமை புலிகளிடம் இருப்பது பிடிக்கவில்லையோ? அல்ல தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட சிங்களவர் கொள்கைக்குத்தான் புலித்தலைமை வெறுப்பாகின்றதோ?
நல்லது செய்வதே உண்மையானால் தலைமையை முடிவு செய்கின்ற போறுப்பு தமிழர் தரப்பினதே என்று விலகிப் போகலாமே, புலிகளின் தலைமைக்கு உலக அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற பயம் ஒன்றால்த்தானே தமிழர் பிரதேசத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரைகாலமாக அரச போக்கு முட்டுக்கட்டையாக இருப்பதன் அடிப்படை நோக்கம். எனவே தமிழ்த்தரப்புக்கு புலிகளின் தலைமையை எந்த அளவுக்கு சிங்களம் வெறுக்கிறது என்பது தமிழர் உரிமையைக் ஒப்படைக்க எந்த அளவு தூரம் மறுக்கிறார்கள் என்பதனால் அல்லவா அளக்கப் படுகிறது.
புலிகள் தவிர்ந்த வேறு ஒரு தலைமையாக இருந்திருந்தால் ஈழத்துக்கு இணக்கமானதாகவே இந்தியப் போக்கு இருந்திருக்கும்.
சரி இன்று நூறு காரணங்கள் சொல்ல வைத்திருக்கிறார்கள் புலி வெறுப்புக்கு, எனவே இதன் துவக்கத்துக்கு வந்தால் என்ன காரணம் சொல்ல முடியும்? இந்திய எடுப்பாரின் கைப்பிள்ளையாக ஆக வில்லை இந்த புலிப் பிள்ளை இது ஒன்று தானே அதன் மூல மந்திரம். சமாதானத்தின் நடுவனாக வந்து முதுகில் குத்திய சதியிடம் எமது இருப்பை காப்பாற்றியது நன்றி கெட்டதனமா? சிங்கள இனத்துவேசம் வேட்டையாடிக் கொன்று கொண்டிருக்கிறது தமிழன் உயிர்களை தன் இனத்தின் இரத்தப் பெருக்கை தடுப்பாதற்க்காக அந்த இனம் போராட்டத்தை துவக்குகிறது. இந்த இரத்தச் சகதிக்குள்ளே ஒரு வெளி விவகாரக் கழுகு ஒன்று தன் தேசநலன் என்ற ஏரை இறக்குகிறது. நாம் எம் இனத்தின் இருப்பைத் தக்க வைக்க அதற்க்கும் ஒரு புதிய பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. தமிழனின் தீர்வு கனமாக இருந்து விடக்கூடாது என்று ஏங்கும் இந்தியச் சிந்தனைவாதத்துக்கு புலிகளின் தலைமைதானாம் ஈழத்தினுடைய துன்பதுக்கு தம்மை எட்டநிற்க்கவைக்கிறதாம்.
வட இந்தியா ஒரு தனிநாடாக இருந்திருந்தால் அதன் வெளிவிவகாரக் கொள்கை எப்படி இருந்திருக்கும், அதன் தேசநலன் என்ற கருதுகையின் போக்கு எப்படி இருந்திருக்கும். அதுவே இந்த இந்தியா என்ற நாட்டுக்கும் தேசக் கொள்கைகளாக திணிக்கப் படுகிறது. தமிழ் நாட்டின் உணர்வுகளைப் புறக்கணித்து ஈழத்தவனின் இரத்தத்தில் இந்திய பழி(வெளி)விவகாரம் தேசநலன் என்ற அறுவடைக் கொள்கையை களம் இறக்கியது. நாம் பல ஆண்டுகளாக இரத்தம் கொடுத்து காப்பாற்றிய போராட்டத்தின் கொள்கைகளை தன் தேசநலனுக்கு தூசுதட்டியாக உபயோகப் படுத்த முனைந்தார்கள் நாம் மறுத்தோம் பிடிவாதம் செய்தார்கள், மோசமான அவர்கள் கொள்கைக்கு பலியாகாமையை பயங்கரவாதம் என்று சாதிக்கிறார்கள்.
அகிம்சையால் சுதந்திரத்தை வாங்கியவர்கள் வங்கதேசத்துக்கு போருக்கு சென்ற போது அதை மறந்து விட்டு விட்டா சென்றார்களா? இலங்கை அரசுக்கு எதிராக தமது நாட்டில் பயங்கரவாதத்துக்கு பயிற்சிகள் கொடுத்த போதும் அதை ஞாபகாத்தில் இருந்து அழித்து விட்டா செய்தார்கள்? குறித்த தூரம் வரைக்கு இந்திய விடுதலைப் பயணத்துக்கு காந்தி தேவைப் பட்டார், விடுதலை என்ற சந்திக்கு அப்பால் இந்தியப் போக்குக்கு அவரே முதல் எதிரியானார் அவரால் விதை நட்டு விருட்சமாக்கிய கொள்கைகள் அனைத்தும் அவரோடு கூடவே சமாதி ஆக்கப் பட்டன. ஆங்கிலேயனை முரண்பட்டு தப்பிய உயிர் பிராமணனை முரண்பட்டு உயிர் வாழும் தகுதியை இழந்தது அகிம்சையின் பெருமையை யார் பேசவேண்டும் என்று இனியாவது புரிந்து கொள்வீர்களா?
No comments:
Post a Comment