Monday, 2 June 2008

விடுதலைக்கு மாற்றுப் பாதை காட்டும் மண்ணாங்கட்டிகள்!

எதிரி ஒரு யானை ஆக இருக்கின்ற பொழுது பூனையின் அளவுக்கு இருக்கின்ற ஒன்று அதன் பகையை சம்பாதிக்கின்றது என்றால் அதன்
நோக்கத்தின் முதன்மைக் காரணமான வெற்றி குறிவைக்கப் படுவதற்கு பதிலாக வருமானம் ஒன்றே அதன் வேசத்துக்கு குறியாய் இருக்க முடியும்.
புலிச்சார்பு கருத்துவாதம் என்றால் அதை அனுமதிப்பதும் பதிலளிப்பதும் அவசியமே இல்லாதது என்ற கருத்துடையவர் இரயாகரன். இதுதான் அவர் அறிந்தவரையான கருத்து சுதந்திரத்தின் பண்பு என்பதனாலோ, பதிவர்களிடம் இருந்து வாங்கிக்கட்ட முடியாது என்பதனாலோ தெரியவில்லை.
இரயாகரனுக்கு புலிகள் மீதுள்ள வெறுப்பின் அதே நகல் தானோ இந்திய அரசிடமும், இலங்கை அரசிடமும் இருக்கின்றது புலிகளின் மீது
ஒரு தேசத்தின் இறைமையை ஊறு செய்கின்ற விதியாக இருப்பதுதான் இந்திய, சிங்கள புலிஎதிர்ப்புக்கள் இவற்றின் வலையில் மாட்டுப்படாமல் இருக்கின்ற திறமைதான் அதன் இலட்சியம் விலை போகாமையைக் காட்டுகின்ற காட்டி!
எங்கே இதை எல்லாம் சோத்துக்கு கதை எழுதுபவர்களுக்கு நான் அளந்து கொண்டிருக்கின்றேன் வேலை இல்லாமல்!

No comments: