இனப்பிரச்சினை முடிவைக் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமான திட்டம் என்ன?
சரி இப்போது தமிழினத்தின் உரிமைமீட்பு நடவடிக்கைக்கு பாதகமான காரணிகளைப் பற்றிப் பார்ப்போம்.
தெற்கின் சிங்கள அரசியலின் மரபுதான் என்ன?
ஏறும்பு கொல்லப்படுவதைக்கூட விரும்பாத துறவி போருக்கு புறப்படுகின்ற போக்கு சொல்லுகின்ற செய்தி என்ன?
தமிழர்களை புலிப்பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பதற்க்காகவா?
பௌத்த இராட்சியத்தை விட்டு எந்த நிலமும் பறிபோகக்கூடாதே என்பதற்க்காகவா?
இதுதான் தெற்கின் சிந்தனைவாதம் ‘குழிநிலம் கூட சொந்தம் என்று தமிழர்களால் சொல்லப்படுவது’, உடம்பு முழுவதும் நெய் ஊற்றி எரிப்பதுபோல் கோவம் கொப்பழிக்கின்ற விடயம்.
அப்படி ஒரு சிந்தனைதான் ஏகமாக தமிழர்களிடம் இருக்கும் என்றால் அந்த கடைசி ஒருதமிழனின் அழிவு வரைக்கும் செய்யும் இனப்படுகொலை தெற்கிற்க்கு இனிப்பாகவே இருக்கும்.
எனவே ஒரு இனத்தின் உரிமை மீட்புக்கு படுகொலையையே அஸ்திரமாக பயன்படுத்தும் ஒரு அரசிடம் தன் உயிரின் இருப்பையே மேல்நாட்டின் தயவில் காப்பாற்றும் இரயாகரன் போன்றோர் சொல்லும் மண்ணாங்கட்டித் தீர்வுகள் நடைமுறைக்குச் செல்லுமா?
21ம் நூற்றாண்டிலும் புதிய, புதிய ஆயுதங்களின் கண்டு பிடிப்புக்கள் ஊடாகவே ஏனய அரசுகளை மிரட்டிக் கொண்டிருப்பதே இறமை உள்ள அரசுகளுக்கே மரபாகிப் போன பாணி, அந்த நாடுகளே வன்முறை தீர்வுக்கு வழிஆகாது என்று மற்றவர்களுக்கு உபதேசம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.
எந்த அரசும் இன்னொருநாட்டின் பிரச்சினைக்குள் மூக்கை நுளைக்கும் போது தமது சொந்தக்கருத்தை உண்மைக்காக பொழிகிறார்களா? அல்லது அரசியல் ஆக்குகிறார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment