Thursday 6 August 2009

திமுகவின் புலிஅபிமானம்.

தமிழ் இனத்தின் மேன்நிலையான வாழ்கைநிலையின் புத்தெழலை திமுகவின் கரம் கொண்டு இந்திய அரசு சாவடித்திருக்கின்றது.
எந்தப் பாவத்தின் பயனிலும் வெற்றி ஒன்றே கட்சியின் உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்ட திமுக; இந்தப் பாவத்தையும் செய்து முடித்திருக்கின்றது. ஆனால் கட்சி பேர்வாங்கும் புரட்சிகரமான கதைகள் பேசிக்கொண்டிருந்த நிலைக்கு ஒர் பேரிடி பின்னுதைபாகி விட்டது.
இதுவரை புலிஆதரவுநிலை வைதுக் கொண்டிருக்க என்ன காரணம் இருந்திருக்க முடியுமோ,
அதை கைவிடவும் அதே காரணத்தின் அடிப்படையில் தானே ஒன்றைச் சொல்ல வேண்டும்.
ஒருவன் ஒரு பெண்ணை அவளின் நல்லமனம் என்ற காரணத்தால் காதலிக்கின்றேன் என்று சொல்கின்றான், சிறிது காலத்தின் பின்னால் அவளை வெறுப்பதாகச் சொல்கின்றான், ஏன் என்ன காரணம் என்றால் அழகில்லாதவள் எனச் சொல்வது, அறிவில்லாத்தனமான பதில் அல்லவா? 1. அழகில்லாதவள் என்பது காதல் துவங்கிய போது இல்லாமல் இடையில் வந்திருக்கத்தக்கதா?
2. காதலிக்க நல்லமனமே காரணமாக இருந்தால், வெறுக்கவும் அதன் அடிப்படையிலேயே காரணம் இருக்க வேண்டாமா?

இவை போல்த்தான் திமுக புலிகளின் பேரில் வைக்கும் ஒப்பாரி.
புலிகளின் சிறப்பிற்கு என்ன காரணம் அடிப்படையாக இருந்ததோ அது தன் அழிவு என்ற கோடு வரைக்கும் அதுவாகவே இருந்தது. திமுகவும் எந்த ஈனத்தனத்திலும் அரசியல் செய்யும் அதன் இயல்பு அப்படியே இருக்கின்றது.
கட்சி ஆதரவிற்கு உணர்வு முதலாவது ஒரு வகை, பணம் முதலாவது இன்னொரு வகை.
அப்படி பணம் முதலாகக் கொண்டவர்கள்; பச்சைப் பாதகம்தான் தம் கண்முன்னே தான் ஆதரிக்கும் கட்சி செய்கின்ற போதும், அந்த ஆதரவில் வரட்சி என்பது வரவே வராது. மனிதப் பாவங்களில் பணம் சம்பாதிக்கின்ற இந்த இழிநிலையை ஒருவன் கொண்டிருந்தால் அவன் மனைவிகூட இவனை அருவருப்பாள். ஒரு வேளை அன்னியன் ஒருவனால் அவளிற்கு அவலம் நிகழ்ந்தாலும் அவன் நீட்டும் பணத்திற்காய் இவன் பணத்திற்காய் சொந்த மனைவி மீதே பழியைக் கொட்ட தயங்காதவனாய் இருப்பான். இத்தகையவர்கள் நடமாடும் பிணம் என்றே சொல்ல வேண்டும்.

No comments: