Saturday 10 January 2009

இலங்கைப் படையின் சாதனையைக் கண்டு வயிற்றெரிச்சலில் பிதற்றும் இந்தியா!

மேற்கு நாடுகளும் இந்தியாவும் இலங்கை அரசபடையினரிடம் பாடம் கற்கவேண்டும்'
[10 - January - 2009] [Font Size - A - A - A]
சிறிலங்காத் தமிழர் பிரச்சினையைப் பெரிதுபடுத்தியும், யுத்தத்தை நிறுத்தி உடனே பேச்சுவார்த்தை நடத்தும்படியும் சிறிலங்கா தமிழர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உடனடியாக அரசியல்தீர்வை ஏற்படுத்தும்படியும் இவ்வாறு பல்வேறுவகையிலும் அழுத்தங்களை வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்குக்கு இடைவிடாது கொடுத்துவருவதற்கு காரணம் அந்தநாடுகளால் சாதிக்க முடியாத பயங்கரவாத ஒழிப்பை வீரமிக்க சிறிலங்கா அரசபடையினர் வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதும் தொடர்ந்து பயங்கரவாதிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காக வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுமே ஆகும்.
இவ்வாறு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறிலங்கா ஈட்டிய, ஈட்டிக்கொண்டிருக்கும் வெற்றிகளால் உலக வல்லரசு ஸ்தலத்தில் இருக்கும் ஐக்கிய அமெரிக்கா,பிரிட்டன் போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் இந்தியாவும் பாதுகாப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் காழ்ப்புணர்வும் கடும் பொறாமைக்கும் உள்ளாகியிருப்பதையே அண்மைக்காலங்களில் அந்த நாட்டு அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட சிறிலங்கா பிரச்சினை சம்பந்தப்பட்ட அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிப்படையாக கூறினால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் மேற்படி வல்லரசுகளால் பெற்றுக்கொள்ளமுடியாத பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் குவித்துக்கொண்டிருப்பதை மேற்படி வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே யதார்த்தமாகும். இதன் அடிப்படையில் சிறிங்காவில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதன் மூலம் பயங்கரவாத ஒழிப்புப்போரில் அரசபடையினர் பெற்றுவரும் மாபெரும் வெற்றிப்பயணத்தைத் தடுப்பதன் மூலம் வல்லரசுகளால் இயலாத பயங்கரவாத ஒழிப்பு வெற்றிகளை சிறிலங்கா அரசபடையினர் பெற்றிருப்பதை உலகத்திற்கு மறைக்கவும் அதேவேளை, அந்த நாட்டுப்பாதுகாப்புத்துறைகள் தொடுத்துவரும் பயங்கரவாத ஒழிப்புப்போர்களில் வெற்றிபெறமுடியாத இயலாமை பற்றி உலகம் ஏளனம் செய்வதைத் தவிர்ப்பதற்குமாகவே மேற்படி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற வல்லரசுகள் முயன்றுவருகின்றன.
இதற்காகவே புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தீட்சண்யமான தீவிரமான முறையில் தொடுத்திருக்கும் யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்படி வல்லரசுகள் அழுத்தங்களையும் அறிக்கைகளையும் விடுக்கின்றன. யுத்தத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும் சிறிலங்கா தொடுத்திருக்கும் போர் தமிழனத்தை ஒழிப்பதற்கான போர் எனவும், தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனித உரிமைமீறல்கள் நடந்துவருவதாகவும் எனவே யுத்தத்தை நிறுத்தி புலிகள் இயக்க பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும் படியும் தெரிவிக்கும் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் மேற்படி வல்லரசுகள் தொடர்ந்து விடுத்தவண்ணம் உள்ளன.
இவ்வாறு அந்த நாடுகள் தாம் அழுத்தங்களை கொடுப்பதற்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு,ஐக்கிய நாடுகள் சபை ,செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் சர்வதேச பொது அமைப்புகளையும் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு தூண்டிவருகின்றன. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான பாரதூரமான மனிதஉரிமைகள் நிகழ்ந்துவருவதாகவும், இலட்சக்கணக்கில் தமிழர்கள் அகதிகளாக வெளியேறி உணவு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்து வறுமையில் உழலுவதாகவும், இறந்துகொண்டிருப்பதாகவும் அறிக்கைகளை விடுத்து முதலைக்கண்ணீர் வடிக்கின்றது. அத்துடன் பயங்கரவாதிகளுடன் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தும்படியும் உடனடியாக அரசியல் தீர்வு காணும்படியும் வற்புறுத்துகின்றன. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் ஜீ.எஸ். பி. பிளஸ் திட்டத்தின் கீழான சலுகைகளைப் பகடைக்காய்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்த்தியுள்ளன. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைகளை இழப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசு பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிடும் என்பதே அந்த நாடுகளின் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறே ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைகள் சபை மற்றும் அமைப்புகளும் சிறிலங்காவுக்கு அறிக்கைகளை விடுத்து யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி மனிதப்பேரழிவைத்தடுக்கும் படியும் புலிகள் இயக்கம் பயங்கரவாதிகளுடன் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிக்கும்படியும் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்கும்படியும் கூறிவருவதுடனும் இல்லாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை மூலமான உதவிகள் நிறுத்தப்பட்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துவருகின்றன.
ஐக்கிய அமெரிக்காவும் சிறிலங்கா அரசிடம் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தும்படியும் அதிகாரப்பகிர்வு மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் கூறி வருவதுடன் இதுவரை வழங்கிவந்த பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை மட்டுப்படுத்தியும் , சில உதவிகளை முற்றாக நிறுத்தியும் உள்ளது.இவ்வாறு பாதுகாப்பு மற்றும் நிதி உதவிகளை ஐக்கிய அமெரிக்காவும் படைகளாக நகர்த்தியுள்ளது. இதேவேளை, இந்தியாவும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்தும்படியும் சமஷ்டி முறைமூலம் அல்லது சமஷ்ட்டியை ஒத்தமுறைமூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்படியும் சிறிலங்கா அரசை வற்புறுத்தி அறிக்கைகளை விடுத்துள்ளது. பிரிட்டனும் அதன் பாராளுமன்றத்தில் சிறிலங்கா பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளை தனியான பாராளுமன்றக்குழுவை அமைத்து அரசியல் தீர்வுக்கான அடித்தளங்களைக் கொடுத்து வருவதுடன் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் கூறிவருகிறது.
இவ்வாறு மேற்படி உலகின் முன்னணியிலுள்ள ஐக்கிய அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் மேற்கிந்திய வல்லரசுகளும் இந்தியாவும் சிறிலங்காவில் அரசபடையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுத்திருக்கும் தீவிர யுத்தத்தை நிறுத்தி அரசபடையினர் பயங்கரவாத ஒழிப்புப் போரில் பெற்றுவரும் மாபெரும் வெற்றிகளைத் தடுக்க முனைகின்றன. உண்மையில் அந்தநாடுகள் செய்யவேண்டியவை யாதெனில் சிறிலங்கா அரசபடையினரிடம் பயங்கரவாதிகளை ஒழிப்புப்போரில் எவ்வாறு வெற்றிபெறுவது என்று பாடம் படிக்க வேண்டுமே அன்றி சிறிலங்கா படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பெற்றுவரும் வெற்றிகளைத் தடுக்க முயலக்கூடாது. இதன் மூலமே உலக பயங்கரவாதத்தை அவர்கள் கட்டுப்படுத்தி வெற்றிகாணமுடியும்.
லங்காதீப விமர்சனப் பகுதி: 08/01/2009


நன்றி; தினக்குரல்.

No comments: