Sunday 11 January 2009

இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது;

இந்தியாவின் நாட்டுப்பற்று என்பது,
இலங்கைவாழ் இந்திய தமிழர் ஐந்து இலட்சம் பேரின் மனித உரிமைகளைகால்நடைகளின் உரிமைகளாக கருதி அவர்களை நாடுகடத்திய பண்டா, சாத்திரி ஒப்பந்தம் அதை செய்வத்ர்க்கு காரணமான இந்திய அரசியல்கலாச்சாரத்தை போற்ற வேண்டிய தமிழனின் கடமையை, இந்தியாவின் நாட்டுப்பற்று என்று சொல்லலாமா?
தமிழ்நாட்டு மீனவனின் வயிற்றில் நெருப்பைக் கொட்டி சிங்கள உறவுக்கு தாம்பூல தெட்சனயாய் கச்சதீவை தாரைவார்த்த மத்தியின் அரசியல்கலாச்சாரம்
ஒவ்வொரு தமிழின உணர்வாழனையும் நாட்டுப்பற்றுணர்வு பொங்கி எழச்செய்யும் அல்லவா?
தன் கடலெல்லையை பாதுகாக்க கண்ணிகளை சிங்களம் விதைத்த போது, மரணத்தை விலைகொடுக்கின்ற பாதிப்பு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு என்று தெரிந்துமே, கண்டனத்திற்க்கு பதிலாக பாராட்டை பதிலளித்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழக மீனவனின் எலை மீறும் குற்றத்திற்க்கு சிங்களவனின் தீர்ப்பாகும் மரணத்தை ஏற்றுக் கொள்கின்றது என்பதல்லவா வாய்மொழியா கருத்தாக நிற்க்கின்றது. இத்தகைய பச்சைப் பாதகத்தை இந்திய நாட்டுப்பற்று என்று நாம் கொண்டாட வேண்டாமா?
தலைப்பாகைப் பிரச்சினைகே உரியநாடுகளுடன் உயிர்நோகக் கத்தி தம் கோபாவேசத்தை வெளிப்படுத்தியவர்கள், நாளும் கரையொதுங்கும் தமிழ்மீனவனின் உயிர் பிரச்சினைக்கு என்ன செய்தார்கள்? புத்தன் பெயரில் என்ற திரைப்படமே அயல்நாட்டு உறவிற்க்கு ஆகாதது என்று தடை செய்த இந்தியதேச பெருந்தன்மைக்கு சிங்களமோ பிணங்களால் கைமாறு செய்கின்ற இந்த அறநெறியைப் போற்றி சிங்களத்திற்க்கு, மேலும் மேலும் தொண்டு செய்யும் இந்த மத்தியின் அரசியல் கலாச்சாரம், தமிழனின் பெருமைக்குரியது என்று சொல்வதுதான் இந்திய நாட்டுப்பற்று அல்லவா?
எனவே இத்துணை சுகாதாரமான அரசியலை தமிழ்நாட்டுக்கே படியளந்த மத்தியின் அரசியல்களாச்சாரம் ஈழத்தவனின்பாட்டில் மட்டும் பங்கெடுக்காதா? ஈழ்த்தவனின் நெஞ்சில் குத்துகின்ற ஒவ்வொரு குத்தும், அப்பாவித்தனமான தமிழ்நாட்டு தேசவிசுவாசத்தின் செஞ்சில் காலை உதைத்து குத்துகின்றது. இந்த துரோகத்தனத்தைத்தான் நாட்டுப்பற்று என்று தமிழனே கொண்டாட வேண்டுமாம்.
புலி அழிவை கொண்டாடுகின்ற போக்காளர் நாட்டுப்பற்றால் என்று திரிக்கின்றார்கள், புலிப்பகையை சம்பாதித்த வகையை, அதன் உண்மையை இருட்டுக்குள் வைக்கின்றார்கள். புலியின் அழிவுக்கு பழிகிடக்கும் தமது ஆசையை நியாயப்படுத்த புலி எல்லாருக்கும் வேண்டாதவர்களாக நிறுவல்கள் செய்ய தலைகீழாய்
நிற்கின்றார்கள், இடையனின் மேல் கொண்ட கோபத்தை முதலையின் வாயால்தான் பழிமுடிக்கலாம் என்ற அடிப்படையால், ஒவ்வொரு வெள்ளாடாக இரையாகிக்
கொண்டிருக்கும் போதும், முதலைக்கே சார்பாக வாதிடும் போக்கில் உறுதியோடு இருக்கின்றார்கள். சிங்களத்தலைமையே தமிழ் இனத்தித்திற்க்கு அடைக்கலம் என்று நம்பவைக்கின்ற முயற்சி, அடிப்படையே இல்லாத வெறும் புலி ஒழிப்பை மட்டுமே சாதிக்க வல்லது என்பது எவரையும் அதிசயிக்க வைக்கின்ற ஒரு உண்மை அல்ல.
புலியே உருவாகியிராத போது, சிங்களத்திடம் தமிழின உரிமை கோரலுக்கு, என்ன பதிலோடு இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருக்கின்ற போது,
அதற்க்கான பழி புலிகளின் தலையில் போடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. புலி எப்போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதோ, அப்போதே உருவான சிங்களச் சார்பான இவர்களது போக்கு, சிங்களத்தை மந்திரித்துவிட்டா மனம் மாற்றியிருக்க முடியும்?. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்ற யதார்த்த அடிப்படையான போக்கு, எனவே என்ன அடிப்படை உங்களிடம் இருக்க முடியும், இப்போது மக்கள் கூட்டத்தை சிங்களத்துக்கு பின்னால் நிற்பதாக கட்டுரைகளில்
முடிச்சு போடுவதற்க்கு?
மக்கள் புலியின் ஆட்சிக்குள் சிக்குப்பட்டு அவஸ்த்தைப் படுகின்றார்கள் என்றால் அந்த திருவாக்கை சிங்களத்தின் வாயால்தான் ஏன் வாங்குகின்றீர்கள்? நேராகவே தமிழ்நாட்டுக்கு புலம்பேர்ந்தவர்களைக் கேட்க்கலாமே! சசப்பான உண்மைகளைவிட உங்கள் செவிகளுக்கு இனிப்பான பொய்களைத்தான் உங்களின் பத்திரிகைக்கு செய்திகளாகுமா? பாதிக்கப்பட்ட இனத்துக்கு தன் தேவையை தீர்மானிக்கின்ற பொறுப்பு இருக்கின்றதா? பொறுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு இருக்கின்றதா அவன் தேவை என்ன என்று எடுத்துச் சொல்கின்ற பொறுப்பு?
போராட்டம் அகிம்சைவழியில் இருந்திருந்தால் தமது ஆதரவு என்றுமே அதன் பக்கம் இருக்குமாம். படு பச்சையாய் மக்கள் படுகொலைகளை இஸ்ரேல் செய்யும் போது தனது இஸ்ரேல் ஆதரவுப் போக்கை படு பச்சையாய் அமெரிக்கா காட்டிக் கொண்டே இருப்பதானது ஜனனாயகத்தின் யோக்கியத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவில்லையா? எனவே அரசியல் சூதாடிகள் யார்பக்கம் என்பதற்க்கு தர்மத்தின் பாத்திரம் வேறு குட்டு வாங்குகின்றதா? எம்போராட்டத்தின் துவக்கத்தில் ஆயுதமும், பயிற்சியும் வளங்கிய உங்களின் அன்றைய காலப்பகுதி ஏன் காந்தியையும், அகிம்சைப் பாரம்பரியத்தையும் மறந்தது. இல்ங்கை இந்திய ஒப்பந்தத்தில் நடுவர் பணியேற்ற உங்களுக்கே வன்முறையே தீர்வை திணிக்கச் செய்ய ஒரு வழியாக இருந்ததே அப்போது கூட நினைவிற்க்கு வரவே இல்லையா காந்தீயம்? அன்றைய ஒப்பந்தம் இன்று எவளவு இலகுவாக கிளித்தெறியப் பட்டும், முப்பதுவருட போராட்டத் தவத்தை கூட்டிக்கொடுத்த முயற்சி என்பதை இன்னுமா ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன்க்களால்? இடிகூட காதில் வீழ்ந்தாலும் அறியா செகிடனின் காதில் சொல்லி கேட்டு வாங்கு என்று சொல்லி அனுப்புபவன் மோசடி அல்லவா? எம்மை வாழாது இருந்து சாகச் சொல்லும் ஆசையின் நிமித்தம் ஆல்லவா இப்படிக் கூறுவது.

No comments: