Tuesday, 11 December 2007

முட்டையில் மயிர் பிடுங்கும் தத்துவவாதம்!

தத்துவபூர்வமான பார்வை அளவிடும் ஒரு அமைப்பின் நடத்தையியல்பு என்பது ஒரு பொது சமன்பாட்டு விதிகளுக்குள்ளேயே அடக்கப்படுகிறது.இந்திய வல்லரசு ஈழதில் களமிறங்கிய போது, தத்துவார்த்த பார்வையின் கணிப்பீடுகளின்படி, புலிஅமைப்பின் வரலாறு மீது புல் மிழைத்துவிட்டதாகவே கருத்துக்கள் ஆரூடம் கூறப்பட்டன.
அது போலவே தத்துவார்த்தபார்வையின் கண்ணுக்கு ஒரு அமைப்பின் நடத்தை மீது அடுக்கப்படக் கூடிய குற்றப் பிரேரணைகள் எவையோ? அப்படியே அதன் அடி ஒற்றி புலிஎதிர்ப்புவாதம் புலிஅமைப்பு மீது குற்றப் பிரேரணைகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றது.

புலிகளின் எதிரியார்?
தமிழீழ இலட்சியத்தின் குறுக்கே வரும் எந்த சக்தியுமே ஈழபோராட்டதின் எதிரிகளேதான். டக்ளஸ் எப்படி தமிழினத்துக்கு எதிரியானாரோ? அது போன்ற ஒரு சூழலுக்குள் குடியேற தயாராகும் எந்த சக்தியுமே தமிழர்களின் எதிரியேதான்.அதுவும் சொந்த கொள்கைகளே இல்லாமல் பிராந்தியவாத சக்திகளின் தூபத்தில் வளர்பவைகள் போராட்டம் என்று சொல்வதில் அர்தமே இல்லை,. வல்லரசின் அடிஆட் குழுக்கள், றவுடிக்கூட்டங்கள் என்பதுதான் பொருத்தமானது. இவைகளை களை எடுக்கவேண்டிய்து தமிழீழ இலட்சியத்துக்கு மிக அவசியமான காலத்தின் தேவையாகவே அன்று இருந்தது.

இதர அமைப்புக்களின் இழப்பால் ஈழம் என்ன நட்டத்தை அடைந்து விட்டது?வயலின் ஒரு வரம்பை வெட்டிவிட்டால் தண்ணீர் மறுவயலுக்குள்தானே போகும் அது போலவே, மனிதவலுக் கணக்குக்கு எந்த பாதிப்பும் வந்து விடவில்லை. எனவே புறம்போக்கு வாதங்களின்படி தொட்டுக்காட்டப்படும் பாதிப்பு என்ன?வினைத்திறன் கொண்ட உயர்ந்த தலைமைகளின் மூளைச்செல்வம் தனிஅரசு நோக்கிய ஏற்பாடுகளை இலகுவாக்கி இருக்கும்.காலநோய் கொண்டுபோக இருந்த ஒருவனின் உயிரை சிலதினங்கள் முன்பாய் எதிர்பாராத விபத்து கொண்டு போனது போலவேதான், இந்த அமைப்புக்களின் மீது விதி விதிக்கப்பட்ட அழிவு இயற்கையானது. புலிகளின் கரம் அந்த பழியை ஏற்றமை ஒரு விபத்துபோல் ஆன கதைதான். புலி என்ற அமைப்பின் பலம் இராணுவ மூகாம்களை சிறையில் அடைத்து பூட்டி வைத்திருக்கின்றது. நாட்டுக்குள் இவர்கள் தர்ப்பார், ஆளாளுக்கு போராட்டம் என்ற கொம்பனிகளை ஆரம்பிக்கின்றார்கள். அன்று புலிகள் பலம் இராணுவங்களை திறந்து விட்டிருந்தால் அனைத்து உயிர்களையும் இராணுவங்களுக்கு காவு கொடுத்திருப்பார்கள். ஏன் எனில் அனைத்து அமைப்பினரும் ஒன்றாகவே சேர்ந்தும் புலிகளையே எதிர்க்கும் படைவலுவே இல்லாதிருக்கும் போது எப்படி இராணுவத்தினரை எதிர்திருக்க முடியும்.
ஆக சொந்த இருப்பின் பிழைப்பையே காப்பாற்ற முடியாதவர்களிடம் எப்படி மக்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கொடுக்கமுடியும்?

ஏனைய அமைப்புக்களில் இல்லாதிருந்த, புலிஅமைப்புக்களிடம், மட்டுமே இருந்த ஒரு அளவுகோலே என்னை மிகவும் கவர்ந்தது. அது புலி அமைப்பினால் உள்வாங்கப்படும் ஒவ்வொரு புதிய உறுப்பினனும், கல்வி, சாதி, உறவுநிலை அனைத்தும் ஒடித்து போடப்பட்டு ஒரு சமத்துவநிலையில் விடப்பட்டுகிறான். அவன் உயிர்க் கொடைப்பண்பில் மேல்படும் வெளிச்சத்தால் அவன் உயர்வு இனங்காணப்படும் அந்த அமைப்பால்.
இதுவே எந்த வல்லரசின் இடிகளுக்கும் நொருங்காத இரும்பின் உறுதி கொண்ட அத்திவாரங்களாக தாங்குகிறது அந்த அமைப்பு.

இந்தக்கருத்தை உண்மை என்று எப்படி நம்பலாம்?
மாத்தயா, கருணா போன்றவர்களுக்கும் பொருந்த வேண்டுமே இந்த வாதம் எனக் கேட்கலாம்.
போராளிகளின் தடயத்தை சகதிக்குள் சிக்கவிடாத வீதிதான் புலிஅமைப்பின் கட்டுப்பாடு. அதை ஆன்மார்த்தமாக விரும்பி ஏற்பவர்களை அன்னியச்சதி நெருங்க முடியாது. அதை கடனுக்காக ஏற்வர்களை சோரம் போகச் செய்வதென்பது பெருமுயற்சியாய் இராது.
மூளைச்சலவை என்கிறார்களே அது எந்த சவர்காரத்தல் செய்யப்படுகிறது.மூளையில் உள்ள அழுக்கு தேடிக் கண்டு பிடிக்கப் படுகிறது. பின் அந்த அழுக்குக்குள் அவன் கொட்டப்படுகிறான்.
இவன் இயற்கை வயப்பட்டு செய்யப்படும் தவறுகள் புலித்தண்டனையில் இருந்து ஒழித்தோட வேண்டிய புதிய சூழலுக்கு ஒரே காரணமாகின்றது, இன்னிலையில் முன்னால் விடப்பட்டுக்கிடக்கும் ஒரே வழியாக எதிரியிடம் சரணடைதல் என்ற விபரீதம் சதிமுயற்சிக்கு விளைச்சலாகிறது.

தத்துவார்த பார்வை ஒரு போராட்டத்தின் நடத்தையை விமர்சனம் செய்வதர்கு பயன்படுத்தும் பிரதான அஸ்திரங்கள்.

1. பிழைப்புவாதம்
2. அதிகாரபோதை.

இந்த இரண்டு அஸ்திரங்களுக்கும் குறிபிழைக்க வைத்துவிட்ட வரலாறுகளாக புலிகள் இருப்பது உலகம் அறிந்த உண்மை.
இந்திய வல்லரசின் இராணுவம் ஈழத்தில் களம் இறங்கிய போது, அதன் பகையை வாங்க போதிய விலையாக இருக்கத்தக்கது தமிழீழ இலட்சியம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் புலிகளிடம்.சாவின் விலையில் பணம் பண்ணும் கிறுக்கன்கள் உலகில் எங்கும் உண்டா?
போர் என்பது தன்னை வேரோடும் அழிக்கும் விதியின் முடிவு என்பது தெரிந்தும், போரை முடிவாய் எடுத்தது தலைவனின் கொள்கைப் பிடிக்குள் கிடந்தது தமிழீழம் என்ற கனவுதான் என்பது, மூளை என்ற ஒன்று இருக்கின்ற எவனுக்கும் விளங்க கடினமாய் இருக்காது.

எனவே ரயாகரன், சிறீரங்கன் போன்ற கூட்டதினர் தத்துவார்த்தமான ஒரு எழுத்துவாததில் தான் இறங்கியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் கைகளுக்கு கொடுக்கப் பட்டிருப்பது புலிஅமைப்பு என்பதனால், “முட்டையில் மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்தம்” என்று அவர்கள் எழுத்துவாதம் சொல்லப்படலாம்.

No comments: