Thursday 31 July 2008

உங்களால் பயன்பெறுவது மக்களா? அம்மக்களின் எதிரியா?

மக்களுக்காக உழைக்கின்ற ஒரு அமைப்பிற்கு சொத்து அம்மக்களின்
உணர்வுகள்தான்!
இன்று புலிஎதிர்ப்புவாதம் எல்லாம் தம்தலையில் அடித்து ஒப்புவிப்பது என்ன? தமது அமைப்புக்களின் வாழ்வே மக்களுக்கு பயன்படத்தான் என்பது.
வரிக்குவரி இவர்களின் புலிஎதிர்ப்பு வாய்பாடுகளில் நம்பகத்தன்மைக்கு ஆயிரம் ஓட்டைகள் இருப்பினும், எமது கேள்வி இவைகளின் ஆணிவேரை பிடுங்கிப் பார்க்கவே விரும்புகிறது.
மக்கள் போற்றுவது புலிகளையா? இல்லை புலிஎதிர்ப்புவாதத்தையா? என்ற கேள்வியின் பதிலில்: உண்மையை வெளிச்சத்துக்கு தரும் நியாயம் இருக்கின்றது,
புலத்தில் புலிகளின்பால் பொங்கி எழும் மக்கள் ஆதரவு, உலகத் தமிழர்களின் புலிஆதரவுக்கு சாட்சியாய் விளங்குகின்றது.
மக்கள் ஆதரவு எமது பக்கமே உண்டு என்பது மகிந்தாவின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன? புலிஎதிர்ப்புவாதத்தின் வாய்ச்சொல்லில் வந்தால் என்ன?
நெருப்பென்ற சொல்லு சுடுவதில்லைப் போல்த்தானே இதுவும்.
இரயாகரன் முதல் அனைத்து அடிவருடிகளும் மக்கள் ஆதரவுப்பலத்தில் புலிகளைவிட நாம்தான் சிறந்து விளங்குகின்றோம் என்று நிரூபிப்பதே, அவர்களின் பயன் மக்களுக்கா, இல்லை அவர்தம் எதிரிகளுக்கா என்ற உண்மை முகத்தைக் காட்டப் போதுமான ஆதாரம். எங்கே! முடியுமா எவருக்காவது?

No comments: