Friday 12 September 2008

புரியாத புதிராய்த்தொடரும் புலிவிமானத்தின் துணிச்சல்களினால் குளம்புகிறது திவயின!

புலிகளின் விமானத்தை செலுத்தியவர்கள் தொடர்பாக சந்தேகம் தெரிவிப்பு

அண்மையில் திருகோணமலை துறைமுகப் பகுதியிலுள்ள கடற்படைத் தலைமையகத்தைக் குறிவைத்து புலிகள் இயக்க விமானப்பிரிவினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல் பற்றிய உயர்மட்ட விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளின்போது புலிகள் இயக்கத்தின் விமானத் தாக்குதல்கள் பற்றி பல சந்தேகங்கள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தவகையில் மேற்படி திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலின்போது புலிகள் இயக்க விமானத்தைப் புலிகள் இயக்கத்தின் விமானப்பிரிவு உறுப்பினர்கள்தான் செலுத்தி வந்தார்களா எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, சம்பவத்தின்போது திருகோணமலைத் துறைமுகம், கடற்படைத் தலைமையகம் மற்றும் அண்டிய அனைத்துப் பிரதேசங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் இந்நிலையில் கடற்படைத் தலைமையகத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீச்சை நடத்தியிருப்பதாகவும் இவ்வாறு இருளிலும் தாக்குதல் இலக்கைத் தேடித் தாக்குதலை மேற்கொள்ள முடிந்திருப்பதே மேற்படி பாதுகாப்பு உயரதிகாரிகளின் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இதுபற்றி பாதுகாப்புத்துறையின் குறித்த உயர்மட்டம் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப, புலிகள் இயக்கம் திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தின் மீது தொடுத்துள்ள விமானத் தாக்குதலின்போது விமானத்தை புலிகள் இயக்கத்தின் விமானமோட்டி செலுத்தாது வெளிநாடு ஒன்றைச்சேர்ந்த விமானமோட்டிகள் செலுத்தியிருக்கக்கூடும் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, புலிகள் இயக்கம் அதன் விமானத்தைச் செலுத்த வெளித்தரப்பிலிருந்து விமானமோட்டிகளை கூலிக்கு அமர்த்தியிருக்கலாம் என்பதே மேற்படி பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகமாகும். இந்த சந்தேகத்தின் சார்பில் புலிகள் இயக்கத்தின் உத்தேச விமானமோட்டிகள் உள்நாட்டவர்களா அல்லது வெளிநாட்டவர்களா, வெளிநாட்டவர்களாயின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்தத் தகவல்களும் பாதுகாப்பு உயரதிகாரிகள் தரப்பிலிருந்து தெரியவரவில்லை.

திவயின: 07.09.2008 ( தினக்குரலில் இருந்து)

4 comments:

Anonymous said...

சிங்களவனுக்கு விமானம் ஓட்டுறவன் வெளிநாட்டுக்காரன். அதுபோல புலிகளையும் நினைத்து விட்டார்களோ? புலிகளின் திறமைக்கு இதுவும் ஒரு சாட்சி.

சிங்கள அரசுக்கு இந்தியா பாகிஸ்தான் சீனா ரஸ்யா இன்னும் பல நாடுகள் ஆயுத உதவி ஆள் பல உதவி செய்கிறது. ஆனால் புலிகள் தங்கள் மக்கள் பலம் ஒன்றையே நம்பி துணிந்து நிற்கிறார்கள். கூலிக்காரர் வைத்து விமானம் ஓட்ட அவர்கள் என்ன குபேரர்களா?

தேவன் said...

Tamilan said...
சிங்களவனுக்கு விமானம் ஓட்டுறவன் வெளிநாட்டுக்காரன். அதுபோல புலிகளையும் நினைத்து விட்டார்களோ? புலிகளின் திறமைக்கு இதுவும் ஒரு சாட்சி.

சிங்கள அரசுக்கு இந்தியா பாகிஸ்தான் சீனா ரஸ்யா இன்னும் பல நாடுகள் ஆயுத உதவி ஆள் பல உதவி செய்கிறது. ஆனால் புலிகள் தங்கள் மக்கள் பலம் ஒன்றையே நம்பி துணிந்து நிற்கிறார்கள். கூலிக்காரர் வைத்து விமானம் ஓட்ட அவர்கள் என்ன குபேரர்களா?

எம்போராளிகளின் பெருமையினை அவர்கள் வாய்ச்சொல்லில் கேட்பதுதானே பெருமைக்கே பெருமை சேர்க்கும் விடயம்!
தூசித்துக் கொண்டு இருந்தவர்களைக்கூட தமிழர்வீரத்தை பேசவைத்த போராளிகளின் தீரத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை!

பனிமலர் said...

தேவன், சிங்களம் ஒரு காகித படையணி என்று ஒவ்வொரு முறையும் புலிகள் நிரூபித்துக்கொண்டு தான் ஒருக்கிறார்கள். ஆனால் சிங்களமோ அவர்கள் காகித புலிகள், இதோ நசுக்கி விட்டோம் அப்படி இப்படி என்று காகிதத்தில் தான் கத்தி சண்டை போடுகிறார்கள். அதுவும் இவர்களை தவிர வேறு யாரும் எழுதகூடாது என்று சொல்லி வைத்துக்கொண்டு. ஒரே ஒரு மாணவன் இருக்கும் வகுப்பில் அவன் தான் முதல் மத்திப்பெண் எடுத்தான் என்று சில பெற்றோர்கள் பரப்புவதை போல. பாவம் அவர்களால் வேறு என்ன தான் செய்ய முடியும்.

இவ்வளவு நடந்த பின்பும், இன்னமும் சரத்பொன்சகோ அறிக்கை விடாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு பிறகு அறிக்கை விடுவாரோ என்னமோ....

தேவன் said...

உண்மைதான் பனிமலர்.
அவர்களுக்கு இருக்கும் அரசு என்ற தகுதி தம்விருப்பங்களை செய்திகளாக உலகத்திடம் திணிக்க முடிகின்றது.
இருந்தும் புலிகளின் தகவல்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அனைத்தையும் தோற்கடிக்கின்றது.