Friday 12 September 2008

இந்தியாவின் பழைய இரும்புகளுக்கு கடையாகின்றதாம் இலங்கைப் படை!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிக்சிக்கு நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.சீனாவிடமிருந்து முப்பரிமாண ராடர்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சீன வெளிவிவகார அமைச்சருடன பேச்சு நடத்தினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் ஜாங் ஜிச்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.ஜனாதிபதியுடனான சந்திப்பு அலரிமாளிகையிலும் பிரதமருடனான சந்திப்பு பிரதமர் அலுவலகத்திலும் நேற்றுக் காலை நடைபெற்றன. இச்சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்குமிடையிலான வெளிவிவகார மட்டத்திலான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன என்றும் 1952 ஆம் ஆண்டு இறப்பர், அரிசி மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை தொடர்ந்தும் இன்றுவரை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளமை குறித்து இருதரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர் என்றும் அரச தகவல்கள் தெரிவித்தன

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108

No comments: