Tuesday 30 September 2008

சிறீலங்கா ஒரு பௌத்த நாடு! வெல்ல வருவோர்க்கு புதைக்கும் சுடுகாடு!

சிறீலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம்: எமது ஆட்சியில் புலிகளுக்கு இறுதித்தீர்வைக் காண்போம் -பிரதமர்
சிறிலங்கா ஒரு பௌத்த இராஜ்ஜியம். எனவே, இங்கு ஒருபோதும் பயங்கரவாதம் வெற்றிபெற முடியாது. பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும். எமது ஆட்சிக் காலத்திற்குள் விடுதலைப்புலி பயங்கரவாதத்திற்கு இறுதித்தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சைப்பிரசுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் போனது. ஆனால், எமது ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண்போம்.
எதிர்கால சந்ததியினர் சுமுகமாக வாழும் சூழலை உருவாக்குவோம். கிழக்கு மாகாணத்தை எமது படையினர் மீட்டெடுத்தனர். தற்போது அங்கு வாழும் மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்பட்டு அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் வடபகுதியிலும் இந்த நிலைமையே ஏற்படுத்துவோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
வடக்கில் சிறு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டும். இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் படையினருக்கு அரசாங்கம் வழங்குகின்றது.பௌத்த தர்மத்தின் அடிப்படையில் எமது நாடு அமையப்பெற்றுள்ளது.
மும்மணிகளின் ஆசீர்வாதங்களும் எமக்கு உண்டு. இது பௌத்த நாடு. எனவே, பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
(பதிவில் இருந்து http://www.pathivu.com/?p=4537)

ஐயா ரட்ணசிறிநாயக்கா!
இது பௌத்த நாடு இல்லை என்று சொல்லுகின்ற எதுவோ அதுதான் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் வருமா?
பௌத்த தர்மம் எப்போது ஐயா தன் பொறுப்பை துப்பாக்கிகளிடம் ஒப்படைத்தது?
பௌத்த நாடு பயங்கரவாதத்தால் வெல்லப்பட முடியாது என்று உரைப்பது ஏனைய மதத்தை பழிக்கின்ற பொருள்தான் கொண்டிருக்கின்றது என்பது மறைபொருள் அல்லவா?

No comments: