Wednesday 1 October 2008

புலத்தில் பொங்கி எழும் மக்கள்கடல்!

நோர்வே நாடாளுமன்றம் முன்பாக 32 மணிநேரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு
வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட அனைத்துலக உதவி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டமையைக் கண்டித்து நோர்வேயில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை காலை 8:00 மணிக்கு தொடங்கப்பட்ட அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நிறைவுபெற்றது.
தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின், குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கரிசனை பேச்சளவில் மட்டும் நின்றுவிடுவதைத் தவிர்த்து, செயலளவில் அக்கரிசனையை வெளிப்படுத்த வேண்டிய காலம் இதுவெனவும், அவ்வாறு செயல்வடிவப்படுத்துவதைத் தவறவிடும் பட்சத்தில் அவர்களின் நடுநிலைமையும் நீதித்தன்மையும் கேள்விக்குரியானதாகவே தமிழ் மக்களால் நோக்கப்படும் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் சார்பில் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
32 மணித்தியாலங்கள் நீடித்த மேற்படி கவனயீர்ப்பு நிகழ்வு நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்றது.






No comments: