Friday 3 October 2008

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்? - தங்கபாலு

இலங்கை தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்ற தோற்றத்தை உருவாக்க, சில அரசியல் கட்சிகள் முயல்வதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. தற்போது சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆகியவை வேறு எந்த அரசியல் கட்சிகளும் எடுக்க முடியாத அளவுக்கு ஈழத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதில் எந்த குறையும் நாங்கள் வைக்கவில்லை. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் கருணாநிதி நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகிறார்.இந்தியாவில் ஒரு கட்சிதான்இ அதுவும் காங்கிரஸ் கட்சிதான் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. ராஜீவ் காந்தியை பறிகொடுத்திருக்கிறோம். இதற்கும் மேல் என்ன செய்ய வேண்டும்.மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லை என்று சில கட்சிகள் குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என்று பிம்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அது தவறு.தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரதமரை சந்தித்து பேசியிருக்கிறோம். பிரதமரும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியிருக்கிறார். இந்திய மீனவர்கள் இந்திய எல்லையில் மட்டுமல்ல இலங்கை எல்லையிலும் மீன்பிடிக்கலாம் என்ற உரிமையையும் பிரதமர் வாங்கியிருக்கிறார். அதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும். சுய நிர்ணய உரிமை ஆட்சியிலும், அதிகாரத்திலும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் ராஜபக்சேவிடம் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.எனவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மிக பகிரங்கமாக தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸும், மத்திய அரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. அதை வன்மையாக கண்டிக்கிறேன். எங்களை பொருத்தவரை மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அனைத்து கட்சிகளும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்திருக்கலாம். அப்படி அனைத்து கட்சிகளும் வந்தால் நாங்களும் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து இந்த பிரச்சனையில் வலியுறுத்துவோம். இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றார், கே.வி.தங்கபாலுநன்றி யாகூ தமிழ் (மூலம் – வெப்துனியா (தூக்கல் யாழ்களத்தில் இருந்து)


ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களா நாங்கள்?
சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சிகள் வளங்குகின்றோமே!
புலிகளின் கடற் செயற்பாடுகள் பற்றி தகவல்கள் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
ஆயுதங்கள் மிக நவீன ராடர்களும் வளங்குகின்றோமே சிறீலங்காவுக்கு!
சிங்களக் காடையர்கள் அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு கொல்லும் போது ஒரு சொல் கண்டனத்தை ஆவது அரசுக்கு எதிராக விட்டு இருக்கின்றோமா?
யாரைப் பார்த்து சொல்கின்றீர்கள் நாம் ஈழத்தவர்களுக்கு எதிரானவர்கள் என்று?
இலங்கை அரசின் போக்கில் ஈழத்தவர்களை பாதுகாக்கும் பணி எந்த வகையானதோ எம்முடைய கொள்கையில் கூட அதுவே பொருத்தமாகப் படுகின்றது. அதனால்த்தான் நாமும் ஈழத்தமிழரின் சார்பின் எதைப் பேசுகின்றோமோ அதுவே சிங்கள அரசின் பேச்சாகவும் ஈழத்தமிழர்களின் சார்பில் இருப்பதர்க்கு காரணமும் ஆகும்!

6 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//இலங்கை அரசின் போக்கில் ஈழத்தவர்களை பாதுகாக்கும் பணி எந்த வகையானதோ//

இதனை நாங்கள் நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் தானே. எனக்கென்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

தமிழ் உதயன் said...

nandraga sonnirgal tholare...
congresskaran mathiri oru panchonthi intha ulagathil iruka vaippe illai.
tamil udhayan

தேவன் said...

நன்றி நிர்ஷன், உதயன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!

Anonymous said...

என்னா சொன்னா உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே!
அம்மா சோனியாவிற்கு லட்சக் கணக்கிலே உடனே கடிதம் எழுதி அனுப்புங்க.
இ மெயில் அனுப்புங்க

ஆழிக்கரைமுத்து said...

குழந்தை சிரிப்பு மிக்க தமிழ்செல்வன் அண்ணையை பாகிசுதான் விமானிகளும் இந்திய இராணுவ பொறியாளர்களும் இணைந்து கொன்றதைத்தான் இவ்வுலகம்தான் மறக்குமா? மனித இனம்தான் மன்னிக்குமா?

தேவன் said...

நன்றி ஆழிக்கரைமுத்து வரவிற்க்கும் கருத்திற்க்கும்!