Monday 6 October 2008

இனத்துரோக விசம் கக்கும் அரவங்கள்!

நூறுபேர் கொண்ட கூட்டத்தில் 99 பேருக்கும் உடன்பாடான ஒரு கருத்தை ஒருவன் பழித்துப் பேசுகின்றான் என்றால் அவன் கருத்தை கழிப்பு என்று ஒதுக்கிவிடலாம். ஏனெனில் விளக்கம் மீதிப்பேருக்கு வேண்டியதும் இல்லை, முரண்பாட்டாளனுக்கும் உபயோகப்படப் போவதும் இல்லை!
இதனால்த்தான் உங்கள் பக்கங்களுக்கு (புலித்துவேசிகளின்) பதில் எழுதுவதானது விழலுகு இறைக்கும் நீர் என நினைத்துதான் எவரும் அதை செய்ய முயற்சிக்க வில்லை
புலிவெறுப்பு ஒருவன் உள்ளத்தில் குடிபூர வேண்டும் என்றால்,
ஒன்று தமிழ் உணர்வுக்கு ஆகாதவனாய் இருத்தல் வேண்டும் அன்றி
ஊருக்கு சோறுபோடும் ஒரு தவத்தை, தான் உணவாக் உட்கொள்ளும் புழுவைப் போன்றவனாய் இருத்தல் வேண்டும்.
புலித்தூசிப்பு என்பதற்க்கு அடிப்படையாய் ஒரு கொள்கை இருந்தது கிடையாது,
பன்முக அடிப்படை கொண்ட இதற்க்கு இருக்கும் ஒரே ஒற்றுமை புல்லித்தூசிப்பு ஒன்றில் மட்டுமே!
ஒரு தளம் சொல்லும் புலிக்கு பின்னால் மக்கள் கிடையாது என்று.
இன்னொன்று இத்தனை அழிவுகளுக்கும் புலிக்கு பின்னால் நிற்க்கும் போக்கு ஒன்றுதான் பொறுப்பு என்று மக்களை நோக்கி.
ஒன்று மட்டும் மிகத்தெளிவாகத் தெரிகின்றது அது புலிஎதிர்ப்பு கொள்கைக்கு மனிதாபிமானத்தின் உறவு ஏழுகடல் தூரம் கொண்டது.
இரயாகரன் புலிஎதிர்பிற்க்கு கொக்கொகோலா பானம் வரை போனது கலியாணவீட்டில் சீப்பை ஒளிப்பதை போன்ற ஒரு முயற்சியே!
எல்லாப் போரட்டங்களும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அவை பயங்கரவாதம்தான். இவையே உங்கள் கதையளப்பிற்க்கு கருவாகின்றமைதான் எமக்கு விசித்திரமாகின்றது.
இரத்தம் ஓடுகின்ற வீதிதான் போராட்டத்தின் பாதை இவையே உங்கள் விளம்பரத்துக்கு சாட்சி ஆக்குகின்றீர்கள், கருத்தியல் வறுமையின் பரிதாப்படத்தக்க எல்லை.
போராட்ட அமைப்பு மக்களவலங்களை தடுக்க முடியாமை போராட்ட அமைப்புக்களுக்கு இருக்கும் இயல்பான குறைபாடு, ஜனனாயகம் என்ற பெயர் உபயோகத்தில் சக அரசுகளிடம் பிச்சை எடுத்து இந்த கொடிய செயலைச் செய்யும் அரசுகளை நோக்கி எய்ய வேண்டிய கணை இது ( என்ன செய்வது கொடுப்பவனை நோக வைக்கக் கூடாதே )
கடல் தண்ணியை எடுப்பது போல் அரசின் ஆயுதபலம்
உலக அரசியல் அதன் கைப்பொம்மை
ஆள்வலியோ எம்சனத்தொகைக்கு ஈடானது
இருந்தும் சிங்களம் வாகை சூடுவது வாய் வார்த்தைகளில்த்தானே
முப்பது ஆண்டுகளுக்கும் பழகிக்போன வாசகங்கள்தானே!
உங்கள் வாசிப்புக்களும் இதுபோலத்தானே!

6 comments:

சிவா சின்னப்பொடி said...

தம்பி தேவன் புலி எதிர்ப்பு என்பது இவர்களைப்பிடித்துள்ள குளப்பீசியா என்ற திருத்தமுடியாத மனநோய்.இந்த மனநோயாளிகளுக்கு பதிலெழுதவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை
http://sivasinnapodi1955.blogspot.com/

தேவன் said...

siva sinnapodi said...
தம்பி தேவன் புலி எதிர்ப்பு என்பது இவர்களைப்பிடித்துள்ள குளப்பீசியா என்ற திருத்தமுடியாத மனநோய்.இந்த மனநோயாளிகளுக்கு பதிலெழுதவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை
http://sivasinnapodi1955.blogspot.com/

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும் உண்மைதான் உங்கள் கருத்த,. இருந்தும் பொறுமையை இழக்கவைக்கும் கயமைத்தனங்களின் பாதிப்பே இவையாகும்.

Rajaraman said...

கடிதம் எழுதுவது, தந்தி கொடுக்க சொல்வது, மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழருக்காக என்று மீட்டிங் போட்டு, துதிபாடிகளை விட்டு தன்னை தானே புகழ்ந்து கொள்வது போன்ற Lip Service தவிர வேறு என்ன உபயோகமாய் கிழித்தார் அல்லலுறும் ஈழ தமிழருக்கு. ஐந்து முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்??? இதில் வேறு உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் என்று அடிவருடிகளை விட்டு கூச்ச நாச்சமின்றி பீத்திக்கொள்வது.. ஏதோ மத்திய அரசே இவரின் கண்ணசைவில் தான் நடக்கிறது என்று கதை அளக்கிரார்களே அப்புறம் எதுக்கு தந்தி வெங்காயம் எல்லாம் நேரடியாக ஆணை இடுவது தானே யார் தடுத்தது.

Anonymous said...

தேவன் சார்,
எல்லோரும் ஒத்த கருத்துக்கு வரும் வேளையில், ஊரை ரெண்டுபட வைக்க அரும்பாடுபடும் (மேலே பின்னூட்டமிட்டுள்ள ராஜாராமன் போன்ற) கூத்தாடிகளைப் பற்றியும் கொஞ்சம் நீங்கள் சொல்லியிருக்கலாம்.

நன்றி திரு Rajaraman உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும்.
என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பது எமக்கு உயர்ந்த பட்ச உபயோகபடத்தக்க கொள்கையாக இருக்கத்தக்கது கலைஞ்ஞர் கட்சியின் செல்வாக்கை ஆதாரமாக பற்றுவது ஒன்றே. பொதுவாக எல்லாக் கட்சிகளின் மேல்மட்டமும் எதிலும் அரசியல் ஆதாயம் என்றே மூலக் குறிக்கோளாக இருக்கும் அதுவே தி.மு.க வினதும் கொள்கையும் ஆகலாம், ஆனால் அதன் தொண்டரகளின் உணர்வுதான் எமக்காக உண்மையாக உழைக்கின்ற ஒன்று. என்வே கலைஞ்ஞரை வசை பாடுவதால் தீமைதான் விளைவு ஆகுமே அன்றி நன்மை இல்லை. வைகோவையும் அதன் தொண்டர்களையும் நம்பலாம் சந்தேகமே இல்லை ஆனால் அவர்கள் சக்தி இல்லாதவர்கள். கூட குடித்தனம் செய்யும் கட்சியே இவர் கொள்கைக்கு எதிரான செயலை சிறிதும் கவலை இன்றி கட்சியின் கொள்கையாக வரித்துக் கொண்டுள்ளது. எனவே எது எப்படியோ கலைஞ்ஞரை நேசிப்பவர்களின் விரோதத்தையாவது நாம் சம்பாதிக்காமல் இருப்பது நன்மைபோல் படுகின்றது எனக்கு.

தேவன் said...

Anonymous said...
தேவன் சார்,
எல்லோரும் ஒத்த கருத்துக்கு வரும் வேளையில், ஊரை ரெண்டுபட வைக்க அரும்பாடுபடும் (மேலே பின்னூட்டமிட்டுள்ள ராஜாராமன் போன்ற) கூத்தாடிகளைப் பற்றியும் கொஞ்சம் நீங்கள் சொல்லியிருக்கலாம்.

06 October 2008 04:41

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும்.
அவலத்தின் வலியில் பிறந்த கோபம் தான் திரு ராஜாராமனினது. ஒரு பிள்ளைக்கு தந்தையிடம் இருக்கும் போபம் கொள்ளும் உரிமையைப் போன்றதுதான் இது.