Tuesday 21 October 2008

புதிய அநுதாபிகளின் ஈழம் பற்றிய விவகாரமான பார்வகளுக்கு பதில்கள்!

கடவுளே இல்லை என்ற கொள்கை உடையவன் அணிலின் முதுகில் உள்ள கோடுகள் வரைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
அதுபோலவே புலிகளை விமர்சிப்பவர்கள் அவர்களின் தகவல் களஞ்சியமாக இந்திய, சிங்கள அரசுகளின் ஊடகங்களே விளங்கும் போது உங்கள் விமர்சனங்களின் மரியாதை மிகவும் மட்டரகமாகவே ஈழத்தவர்களுக்கு விளங்குகின்றது. ஏன் என்றால் உங்கள் கருத்து தளத்தின் அடிப்படையே எங்களுக்கு உடன்பாடானதாய் இல்லை!
ஈழத்தில் மக்கள்தான் புலிகள் என்ற கருத்திற்க்கு உடன்படுகின்றீர்களா?
· ஆம் என்றால் அந்த மக்களின் எண்ணங்களுக்கு கைகொடுப்பது உங்கள் கடமையா? இல்லையா?
· இல்லை என்றால் உலகமே பகையாக விளங்கும் அந்த அமைப்பை முப்பது ஆண்டு காலமாய் ஒரு அரசு உலகத்துணையோடு வெல்ல முடிய வில்லை என்றால் அதன் ஆதாரமாய் இருப்பது மக்கள் என்றுதானே பொருள். புலத்திலே புலிஆதரவை உணர்த்த கூடும் பிரமாண்டமான கூட்டங்களின் அடிப்படை என்னவாக இருக்கும்.
இந்தியா புலியைத்தான் விரோதிக்கின்றது மக்களை அல்ல என்ற கருத்திற்க்கு உடன்பாடானவரா?
· அப்படி என்றால் புலிவிரோதத்தின் துவக்கப் புள்ளி என்ன? ரஜீவின் மரணமோ அல்ல அமைதிப்படைக் கால கசப்புக்களோ என்றால் உங்களால் விவாதிக்க ஓரளவு அடிப்படை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை அல்லாமல் அந்த புலிவிரோதம் இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்டது அமைதிப்படை வரவிற்க்கும் முந்தைய ஆண்டுகளில்த்தான் என்பதற்க்கு ஆதாரங்கள் உண்டு. புலியை அழிக்க வளர்த்து ஏவிய பிற குழுக்கள் இந்தியக் கரைகளில் துண்டங்களாக ஒதுங்கிய போது, தீவிர ஆதரவுச் சிகிச்சை அளித்து உயிர் கொடுத்தது என்ன காரணத்தினால் என்று உங்களால் சொல்ல முடியுமா? அப்போது புலி தன் மக்கள் நலனில் காட்டிய உறுதிதான் பகையானது என்று சொல்ல வேறு என்னதான் காரணங்கள் வேண்டும். பின் அமைதிப்படையாய் ஈழத்தில் வந்த பிறகு துரோகப் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த அரவங்களைக் கொண்டுதான் பொதுசன நாசவேலைகள், புலிஅழிப்பு என்பன அரங்கேற்றப்பட்டன.
பயங்கரவாதப் பண்பு கொண்டது புலிகளின் போராட்டம் என்ற கருத்து கொண்டவரா?
· புலிகளை அழிக்கும் இங்கையின் போருக்கு பின் உதைப்புக்களைப் பொருட்படுத்தாமலே அதன் ஆயுதவலிமைக்கு தோள்கொடுக்கின்றது இந்திய அரசு. அப்படி என்றால் ஊடகப்போரில் அதன் வசதிக்கு எத்துணை இலகுவாக கழுத்தறுப்பு செய்யமுடியும், ஒரு குழுவாக இருக்கு புலிகளுக்கு அந்த வசதி எத்துணை தூரமானாது. சிங்களம் ஒரு ஊரையே படுகொலை செய்யும் போது அதை மறைக்கின்ற வேலைகளயே இந்தியாவும் சேர்ந்து செய்கின்ற போது புலிகளின் குற்றச்சாட்டுக்களைக் கொண்ட சம்பவங்களை எந்த அளவிற்க்கு உயரமாக இரு அரசின் உபயத்திலும் உலகை வலம் வரும் அவைகள்.
· புத்தகத்திற்க்கு என்று எழுதும் கருத்துக்களை உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வசதியால் கூட கடைப்பிடிக்க முடியவில்லை தன் சொந்தககாலின் பலத்தில் மட்டும் நிற்க்கும் புலிகளுக்கு அவை பொருந்த வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் எனக்கு புரியவில்லை என்ன காரணத்தின் பொருட்டு உங்கள் அடம்பிடித்தல்கள்.

மகிந்தாவின் போர் புலிகளுக்கே எதிரானது மக்களுக்கு எதிரானாது அல்ல என்று நம்புகின்றீர்களா?
· போரின் தாக்கம் தேசத்தின் உயிரையே காவுகொள்ளக் கூடிய அளவு பெருந்தாக்கம் கண்டுள்ளது இந்த நிலையில் கூட இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்று சொல்லும் அளவில் தமிழின உரிமைமீது செலுத்துகின்ற கவனம் விளங்குகின்றது சிங்களத்திற்க்கு. புலியின் அழிவிற்க்கு பின்னால்த்தான் கொடுக்கப் போவதையே என்ன வென்று காட்டுவோம் என அடம்பிடிக்கின்றது சிங்களம். சரி உலகத்தின் ஆதரவு உங்கள் தோள்களுக்கு வேண்டும் புலியை அழிக்க அவர்கள் மக்களுக்கு வளங்கும் உரிமையை அறிய என்ன குடுக்க உடன்படுகின்றீர்கள் என்பதை ஏன் உங்களால் காட்ட முடியவில்லை. புலிஅழிவின் பின் தமிழர்தரப்பிற்க்கு காட்டும் முழங்கையிற்க்கு அப்போது இவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதானே.
· புலிகள் கேட்கின்ற எதை சிங்களத்தால் தரமுடியாது, பணத்தையா அல்ல பதவிகளையா இல்லையே மக்களின் உரிமைதவிர வேறு எதைத்தான் கேட்டாலும் சிங்களம் அவர்கள் காலில் வீழ்ந்து வணங்கியே கொடுக்க ஆயத்தமாக உள்ளது. தம்மால் உடன்பட முடியாததைக் கேட்பதுதான் பயங்கரவாதம் என்பதே ஒவ்வொரு இனவாத அரசினதும் கொள்கையாகும்.

4 comments:

Anonymous said...

மக்கள் ஆதரவு இல்லாமல் புலிகள் இவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியுமா?
கரும்புலிகள் அனைவரும் தங்களைத் தாங்களே அற்பணித்துக் கொள்பவர்கள்,அதற்குச் சந்தர்ப்பம் வேண்டுமென்று காத்திருப்பவர்கள்(மூளைச் சாயம் என்று நீங்கள் சொல்லலாம்,உங்கள் தங்கை,மனைவி,உறவினர் உங்கள் கண் முன் கற்பழிக்கப் பட்டுக் கொல்லப் பட்டால் நெய்யும்,ஜ்லமும் விட்டுக் கழுவி வாழும் பரம்பரை அவர்கள் அல்ல).
ராஜிவ் கொலையில் சந்திரசாமி,சு.சுவாமியின் பங்கென்ன?
அந்தப் பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்தது தெரியுமா?
அவ்வளவு குண்டுகளும் மக்களை,மருத்துவ மனை,பள்ளிகள் என்று இனப் படுகொலை செய்யப் போடப் படுகிறதா இல்லையா?
சுனாமியில் முதலில் உதவி செய்தது புலிகள் தானே,அவர்களால் தானே உதவிகள் மக்களுக்குச் செய்யப் பட்டது.
இலங்கை அரசு சுனாமிக்கு அனுப்பியதை வட்க்கு,கிழக்கே செலவிட்டதா?
சிங்கள் குடியமைப்பால் தமிழ் மண் எவ்வளவு பறிக்கப் பட்டுள்ளது?
புலிகள் வேறு, மக்கள் வேறு என்று பேசுபவர்கள் சிங்களக் கைக்கூலிகள் தவிர வேறு யார்?
இதுவரை எந்த ஒப்பந்தத்தை சிங்கள் இனவாதம் நிறை வேற்றியுள்ளது?
உலகமே மனித உரிமை அநியாயங்கள் பற்றிச் சிங்கள அரசை ஏன் குறை கூறுகிறது?
தமிழ்,தமிழினம் என்றாலே ஏன் முகம் சுழிக்கிறீர்கள்.

வெத்து வேட்டு said...

SL gov is really onto something this time...we can see it from ltte sympathisers tears :)

தேவன் said...

வெத்து வேட்டு said...
SL gov is really onto something this time...we can see it from ltte sympathisers tears :)

19 November 2008 09:42

ஐயா வெத்துவேட்டு இது உங்கள் பிரார்த்தனையே அன்றி வேறல்ல.
சிங்களத்தின் தோல்வியில் முடிந்த நடவடிக்கைகள் எல்லாமே நிறைந்த நம்பிக்கைகளினூடே ஒவ்வொன்றினதும் துவக்கங்கள் விளங்கின.
ஆயுதபலமும் ஆட்பலமும் அவர்கள் நம்பிக்கைக்கு அடிப்படையாய் இருப்பதுபோல, தமிழர்தரப்பிற்க்கு புலிகளின் மதிநுட்பம் அடிப்படையாக இருக்கின்றது. அவர்தம் செயல்களால் சாதித்த கோட்டை அது.

தேவன் said...

Anonymous said...
மக்கள் ஆதரவு இல்லாமல் புலிகள் இவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியுமா?
கரும்புலிகள் அனைவரும் தங்களைத் தாங்களே அற்பணித்துக் கொள்பவர்கள்,அதற்குச் சந்தர்ப்பம் வேண்டுமென்று காத்திருப்பவர்கள்(மூளைச் சாயம் என்று நீங்கள் சொல்லலாம்,உங்கள் தங்கை,மனைவி,உறவினர் உங்கள் கண் முன் கற்பழிக்கப் பட்டுக் கொல்லப் பட்டால் நெய்யும்,ஜ்லமும் விட்டுக் கழுவி வாழும்

நன்றி பெயரிலி அவர்களே உங்கள் வரவிற்க்கும் கருத்து பகிர்விற்க்கும்.
இவர்களது இத்தகைய நிலைப்பாட்டிற்க்கு அடிப்படை அறியாமை யாகாது. விகாரமடைந்த மனிதவுணர்ச்சியின் பாதிப்பே இவையாகும்.