Saturday 4 October 2008

புலிகளின் தோல்விகளால் அச்சமடையும் இந்தியாவின் புலிஎதிர்ப்பு அரசியல் கூடாரங்கள்!

ஒரு சிங்கள இனவாததிக்கு ஈழத்தமிழரின் மேல் இருக்கத்தக்க வெறுப்பிற்க்கு ஈடான வெறுப்பை கொண்டிருக்காத ஒருவனுக்கு காரணங்கள் ஆயிரம்தான் இருந்தாலும் கசப்பு மிகுதியான ஒரு அரசியலாகவே புலிஎதிர்ப்பு என்பது அவனுக்கு இருக்கும்.
இல்லை என்று கையை உயர்த்த எவராவது வந்தால் நான் அவர்களிடம் கேட்க்கப் போவது, சரி இவர்கள் ஈழத்தவர்களுக்கு எதிரி இல்லை என்று சொல்கின்றார்களே அன்றி, ஈழத்தவர்கள் சொல்கின்றார்களா எதிரியின் கூட்டணியில் இல்லாதவர்கள் இவர்கள் என்று, ஆக மகிந்தா கூட தமிழ் மக்களை நோக்கி சொல்லிக் கொண்டிருபது போல்
இவர்களும் சொல்லிக் கொண்டிருப்பவை அதே வகுப்பிற்க்குள்தான் வரும். அழிவுவெள்ளத்துக்குள் முக்குளித்துக் கொண்டிருக்கும் இனத்தின் பச்சையாக மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்காக ஆவது இவர்கள் குரல்கள் ஒலித்திருக்கின்றாதா எப்பவாவது? அந்த நேரங்களில் கூட மக்கள் நலன்களுக்கு வரும் காயங்களை விட சிங்கள அரசிற்க்கு வரும் காயங்களின் கவலைதான் இவர்களுக்கு மிகுதியான அக்கறையுடன் கூட விளங்குகின்றது. எனவே இவர்கள் எப்படி ஈழத்தவரின்மேல் பகை இல்லை என்று சாதிக்க முடியும்?

உலகத்தின் ஆதரவு இல்லாமல் புலியை அழிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த சிங்களம் ஆள்பிடிக்கும் முயற்சியின் பொருட்டு புலிவேறு மக்கள் வேறு என்ற போக்கை தமது போர் கொள்கைக்கு கொடி ஆக்கினார்கள்.
83 இல் வெறும் இருபதுவரையான ஆள் வலியுடன் இருந்த புலிப்படையின் இராணுவத் தாக்குதலுக்கு தமிழர் தேசத்தை எங்கும் மனிதப் பிணங்களின் காடாக்கினார்கள். ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாய் நான் ஒரு சிங்கள மக்களின் ஜனாதிபதி அவர்களின் உணர்வே எனது உணர்வுமாகும் என்று முழங்கினார் J R ஜெவர்த்தனா, மட்டும் அல்லாமல் தமிழர்களுக்கு போர்தான் பிடிக்கும் என்றால் போருக்கும் நான் தயார் என்று போர் பிரகடனமும் செய்தார்?
போர் செய்யும் இலட்சணம் இதுதானா அப்பாவிகளுடனா?
இன்றய நிலவரம்களின் அடிப்படையில் அவர்களின் கணக்கில் புலிஆட்டம் அடங்கிவருவதாக கொள்ளும் அவர்களின் மனக்கணக்கின் பாதிப்பால் இதுவரைகாலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இனவெறிப்பிசாசு மெதுவாக வெளிச்சத்துக்கு வருகின்றது,
ஜனனாயக வேசம் இதுவரை போட்டிருந்த இந்தப் பிசாசை ஈழத்தின் விடிவிற்க்கு வழியாக காட்டிகொண்டுவந்த இந்திய புலிஎதிர்ப்பு கட்சிகள் அது தனது சொந்த வேசத்தை காட்டும் நிலைமையை அடைந்தமையை இட்டு கலக்கம் கொள்கின்றன ஏன் என்றால் உடைபடப் போவது ஈழத்தில் பாசம் என்ற குட்டு மட்டுமா? தமிழ் உணர்வில் பாசம் என்ற குட்டும் அல்லவா?

4 comments:

Anonymous said...

onnum piriyala...

Anonymous said...

உலகிற்கே சிங்கள் இன வாதத்தின் கொடூரம் நன்றாகப் புரிய வேண்டும் என்று பொறுமையின் சிகரத்திற்கே போய்விட்ட தலைவரின் கணிப்பு தமிழகத்திற்கும்,இந்தியாவிற்கும் புரியும் நாள் வந்து விட்டது.

பொறுத்தது போதும் என்று பொங்கியெழப் போகும் புலிகளிடம் உலகம் தமிழீழம் தவிர வேறு எதுவும் பேச முடியாது.

தேவன் said...

Anonymous said...
onnum piriyala...

04 October 2008 02:57

நன்றி பெயரிலி இனிவரும் பதிவுகளுக்கு உங்கள் ஆலோசனை உரமாகும் என்று நம்புகின்றேன்!

தேவன் said...

Anonymous said...
உலகிற்கே சிங்கள் இன வாதத்தின் கொடூரம் நன்றாகப் புரிய வேண்டும் என்று பொறுமையின் சிகரத்திற்கே போய்விட்ட தலைவரின் கணிப்பு தமிழகத்திற்கும்,இந்தியாவிற்கும் புரியும் நாள் வந்து விட்டது.

பொறுத்தது போதும் என்று பொங்கியெழப் போகும் புலிகளிடம் உலகம் தமிழீழம் தவிர வேறு எதுவும் பேச முடியாது.

உண்மைதான் நண்பரே நன்றி தங்கள் வரவிற்க்கும் கருத்திற்க்கும்,
களநிலை எதுதான் வரினும் புலிகள் பலம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாகவே எவருக்கும் விளங்குகின்றது.