குடாநாட்டில் படைத்தளங்களிலிருந்து புலிகளின் பகுதி மீது கடும் ஷெல் தாக்குதல்
[05 - June - 2007] [Font Size - A - A - A]
யாழ். குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை மிக உக்கிரமான ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
பலாலி, வடமராட்சி கிழக்கு மற்றும் தென்மராட்சி படைத்தளங்களிலிருந்தே இந்த அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் நடைபெற்றுள்ளன.
மாலை 5 மணியளவில் ஆரம்பமான இந்தத்தாக்குதல் நள்ளிரவு 11.30 மணிவரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முகமாலை, பளை, இயக்கச்சி மற்றும் பூநகரிப் பகுதி நோக்கியும் வடமராட்சி கிழக்கு நோக்கியுமே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இதனால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளும் நீண்ட நேரம் பெரிதும் அதிர்ந்து கொண்டிருந்தன.
இவ்வேளையில் படை முகாம்களிலிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே நேரம், ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை முதல் பருத்தித்துறை
வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க எவரும் அனுமதிக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலை மேற்படி கடற்பரப்பில் மீன் பிடிக்கச் செல்வதற்காக மீனவர்கள் கடற்கரைக்குச் சென்றபோது அவர்களைப் படையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தினக்குரல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Post a Comment