Sunday 17 June 2007

நேர்மை, நியாயம் எதைப் பற்றியுமே கவலை கொள்ளாதது துரோகம்!

1. தமிழ்தேசத்திடம் இனப்பிரச்சினை என்ற ஒன்று உண்டா?


2. ஆம் என்றால் அதை அகிம்சையால் பெற்றுத் தரக்கூடிய பண்பான அரசியல் பாரம்பரியம் கொண்டதா சிங்களவாத அரசியல்?


3. இல்லை என்றால் புலிவாதத்தின் போராட்டத்தை உள்வாங்கி தீர்வை பெற முயற்சி செய்வதா? புலியை புறந்தள்ளிக் கொண்டு அரசாய்த் தருவதை வாங்குவது சிறந்ததா? இலை மதிப்பான தீர்வை புலியை உள்வாங்கிக் கொண்டு பெற்றபின் புலியை புறந்தள்ள நினைக்கும் நவீன முயற்சியேன் உங்களிடம் இல்லாமல் போனது. புலிகளை அதன் பிறகு கழுத்தைப் பிடித்து தள்ளுவதென்பது மிகவும் கடினம், ஆதலால் உரிமையே இல்லாமல் போனாலும் பாதகமில்லை, சிங்களவன் கரத்தோடு எமதுகரத்தையும் பலப்படுத்தி புலிகளை அழிபதொன்றே உங்கள் புலிவிரோத-தேசியத்தின் தலையாய கொள்கையா?

ரயாகரன்; நீங்கள் கூறுவது புலிகளின் பயணம் பாவம் சுமந்தது என்று, நீங்கள் நிரூபிக்க வேண்டியது புலிகளின் பயணம் பாதை தொலைத்ததா என்றே!

அவர்களை அடக்குமுறையாளர் என்கிறீர்கள், நீங்கள் நிரூபிக்க வேண்டியது மக்கள்-ஆதரவு அவர்களை அநாதையாக்கிவிட்டதா என்பதனையே!

புலிச்சமர்களின் நிலை பாவம், பரிதாபம் என்கிறீர்கள். சமபலம் என்றபேச்சுக்கே எந்த விதத்திலும் அருகதியில்லாத புலிப்படையை அதன் இருபது மடங்கு ஆளணி, ஆயுதவளம் கொண்ட ஒரு அரசால் முப்பது வருடங்களாக வெல்லப்பட முடியவில்லையே அது ஏன் என்பதை விளக்க முடியுமா உங்களால்.
நடவடிக்கை என்பது வேறு, பேச்சு என்பது வேறு, வெறும் பேச்சுக்கு எல்லாம் வென்றுவிடும் திறமை உண்டு என நீங்கள் நினைத்தால் உங்களை வரவேற்க்கக் காத்திருப்பது கீழ்ப்பாக்கமோ, அங்கோடையோதான்!!!

No comments: