Thursday 7 June 2007

கொழும்புத்தமிழர் விரட்டிஅடிப்பு சிங்களவாத மனித உரிமை மீறல்களின் புதிய பரிமாணம்!

மகிந்தவின் கொழும்பு நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் கண்டனம்
[வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:31 ஈழம்] [செ.விசுவநாதன்]
தமிழ் மக்களை சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றிய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தால் கொழும்பு நகரில் வசித்து வந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வடக்கு - கிழக்குப் பகுதிக்கு திருப்பி அனுப்பியமையானது இனப்படுகொலையின் மற்றொரு செயற்திட்டமும் பாரிய மனித உரிமை மீறலுமாகும். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு அனைத்துலக சமூகம் குரல் கொடுத்து வரும் நிலையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தீவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இலங்கையில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது இத்தகைய செயற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்திருக்கும்.
நோயாளர்கள், இளையோர் மற்றும் முதியோரை கொடூரமாக தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியிருக்கும் இந்த பாரிய மனித உரிமை மீறலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<புதினம்>

No comments: