அங்கு நிகழும் ஒவ்வொரு மனித அவலங்களைய்யும் புலிக்கெதிராக சோடினை செய்யவே உங்கள் மொத்த சக்தியும் செலவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால், உங்கள் புலித்துவேசக் கொள்கைக்கு மக்கள் நலன் என்பது வெறும் காதில்குத்திக் கொள்வது மட்டும்தான்.
ரஞ்சன்வியயரட்ணா என்ற சிங்கள முன்னாள் இராணுவத்தளபதி அந்தப் பதவிக்கு குடிபுகுந்த நாட்ககளில் கூறி இருந்தார் இப்படி. "எமது இராணுவத்தின் கம்பீர அணிவகுப்பைப் ஒருமுறை பார்த்தாலே புலிப்பய்லுகளுக்கு மூத்திரம் இறைக்கும்". இதை கூறும் போது அவர் பகுத்தறிவு எட்டிக்கூட் ஒருக்கால் அவரைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது. ஏன் என்றால் இருபத்திஐந்து வருடங்களாக அந்தப் பயல்களால் தண்ணிகாட்டப் பட்டுக் கொண்டிருக்கும் படை யாருடையது?
புலிகளைப் பிடிப்பதும், பிடிக்காததும் அல்ல இப்போதய விடையம், பிடிக்கவில்லை என்றால் அவர்களது அறிவு அடிமட்டத் தரத்துக்கா தாழ்ந்துவிட வேண்டும்.
எந்த ஒரு நாட்டினது தயவும் இன்றி பலவல்லரசுகளின் கொழுத்தவளங்களின் துணையோடு வருகின்ற அரசஎதிரியை, எதிர்த்து தம் இருப்பை முப்பது வருடங்களாக தக்கவைத்திருக்கின்ற ஒரு அமைப்பை, ஒரு கிள்ளுக்கீரை தரத்துக்கு வர்ணிப்பது உங்கள் ஆத்மாவின் திருப்திப்பசிக்காகவா? பகுத்தறிவுகளுக்கு இவை விலைப்படவேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமேனும் இருப்பதில்லையா?
புலிப்போராட்டத்தின் பசி பணமா?, அதிகாரப்போதையா?
கடந்தகாலங்களில் நான் ஒருசாராருடன் போராட்டம் சார்ந்த பேச்சில் இறங்கும் போது, அவர்கள் எனக்கே பூச்சாண்டி காட்டுவார்கள் இது அந்த அமைப்பில் உள்ளவர்களின் வசதியான வாழ்வுக்கான ஆதாரம் என்று, ஒருவேளை இந்த கையாலாகாத்தனங்களின் வன்மையான வாய்ப்பேச்சு என்னை மூளைச்சலவை செய்துகூட இருக்கும்,
இந்த சம்பவம் நிகழ்ந்திராவிட்டால்.
இந்திய இராணுவம் எம்மண்ணில் கால் பதித்தபோது எம் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்கும் குழிதோண்டப் பட்டுவிட்டது தன் தேசியநல வியாபரப் பேரம்பேசலுக்கு எமக்குகிடைக்கவேண்டிய உரிமைகள் ஒவ்வொன்றாய் செலவு செய்யப்பட்டது. வல்லரசு மமதைக்கு புலிகளுக்கு கணக்குகாட்டவேண்டுமே என்று தோன்றவே இல்லை. மரணத்தை கழுத்தில் கட்டிக் கொண்டு திரிபவனுக்கு வசதிகளை ஆசைகாட்டி வழிப்படுத்த முனைந்தனர்,
கொட்டிய இரத்தத்தின் ஈரம் ஆறமுதலே போராட்டத்துக்கு சவப்பெட்டி அடிதது இந்தியா,
அந்த நேரம் தலைவன் போர் என்று முடிவை எடுத்தபோது, அதன்முடிவும் வெளிச்சமாகவும் மிகத்தெளிவாகவும் தெரிந்திருக்கும் தலைவனுக்கு, எனவே சாவென்ற நெருப்புக்குள் தீக்குளித்து சோரம்போகாத கொள்கை உறுதியையும், அடிமைப் படுத்தப்பட முடியாத தன்மானாத்தையும் உலகுக்குத் தரவந்த ஒரே அமைப்பு எமது போராட்டம்தான்.
எனவே இந்தப் பரீட்சையிலேயே வெற்றி அடைந்தவர்களை உங்கள் வக்கிரமன ஆசைகளுக்காக தரம் தாழ்த்தலாமா?
நான் அந்த நிர்வாகத்துக்குள் வளர்ந்த பாதிப்பே எனக்குள் புலிமரியாதையை கோபுரம்போல் வளர்த்தது பெரியார்சிந்தனைகள் என்னைச்செய்த பக்குவமே அதற்க்கு அடிப்படையாய் இருந்திருக்கும் எனநினக்கிறேன்.
மக்களாதரவு புலிகளை சீராட்டுகிறதா? இல்லை எட்டி உதைக்கிறதா? உங்கள் எதிர்வுகூறல் புராணங்கள் எல்லாம் தினமின தரத்தில் நம்பகத்தன்மைக்கு பிச்சை எடுக்கும் போது இங்கே அலசி ஆராயவேண்டிய தேவை ஒன்றுமில்லை இருப்பினும் உண்மைகளைக் காட்சிப்படுத்துவதற்கு திறமையும் தேவை இல்லை, கடுமுயற்சியும் தேவை இல்லை என்பதால் கூற வருகிறேன், வெறும் சிலநூறு புலிகள் காட்டுக்குள் அநாதைகளாக்கப் பட்டனர் இந்தியவல்லரசால் மிகச்சிறிய அளவான புலித்துவேசம் மக்கள் மத்தியில் இருந்திருந்தாலே புலிகள் இல்லாமல் ஆக்கப் பட்டிருக்க முடியும், ஆனால் அவ்வாறு இல்லாமல் பெரும் வைத்தியசாலைகள், பெரும் சந்தைகள் என்று மக்கள் பெரும் தொகையாக இராணுவ அட்டூளியத்தால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையின் தம் உயிரைப் பணையம் வைத்து வாழவைத்த போராட்டத்துக்கு, மக்களாதரவு இல்லை என்பது பகுத்தறிவுக்குச் செல்லாத பேச்சுக்கள் அல்லவா?
நான் மதநம்பிக்கை இல்லாதவன், ஆனால் எந்த ஒரு மதநம்பிக்கையையும் இம்சைசெய்யும் விதத்தில் விவாதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை அது அந்தசாராரின் உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பு. ஆனால் உங்கள் வார்தைகள் சபை ஏறும் தகுதி அலாத அசிங்கம் கொண்டவை. அவற்றால் தான் புலிஎதிர்புக்கு அர்சனை செய்யமுடியும் என்ற கருதியல் வறுமையை நினைக்கும் போது, குருடன் கோபம் சுவரோடு தலை மோதுவதைப் போன்ற பரிதாபத்துக் குரியதாகவே இருக்கிறது.
புலிஆதரவு பணத்தால வாங்கப்படுகிறதா? அவை எந்த அரசுகளால் சீராட்டப்படுகிறது புலிஎதிர்ப்புக்குத்தான் பல வல்லரசுகள் தோள் தருகிறார்கள், தன்சொந்த மக்களின் வியர்வையிலேயே வளருகின்ற அமைப்பை இப்படி அடிமட்டத்தனமான பொய்களைச் சொல்லி அற்பத்தனமான சந்தோசங்களில் உங்களை நீங்களே ஏமாற்றப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.
6 comments:
well said
Good post Thevan.
Keep it up.
கருத்தை கருத்தால் வெல்வோம் மனித நாகரீகம் சன நாயகம் வன்முறை கூடாது என்று வரிக்கு வரி வாரி விடும் இரயாகரனிற்கு எழுதும் போது கூட மற்றவர்களை லுசு பரதேசி ஆண்டி பன்னாடை என என்ன மரியாதையாய் எழுதுகிறார் அந்த மர்க்சிய மா மேதை அவரிற்கு எனது வாழ்துக்கள்
நன்றி! maike,வசந்தன், சாத்திரி உங்கள் வருகையும், பின்னூட்டமும் என்னை உற்சாகப்படுத்துகின்றது.
ரயாகரனின் சொல்லாளுமை அப்படிப் பட்ட அநாகரீகமான சொற்க்கொத்துக்களிடமே தஞ்சமடைய வேண்டி இருப்பது.
எழுத்தாளுமையின் இயலாமை,
கருத்தியல் வங்குறோத்துதனம்.
இல்லை புலித்துவேசப் பித்தம் உச்சிக்கு ஏறியதன் விளைவு!
புலிஆதரவு பணத்தால வாங்கப்படுகிறதா? அவை எந்த அரசுகளால் சீராட்டப்படுகிறது புலிஎதிர்ப்புக்குத்தான் பல வல்லரசுகள் தோள் தருகிறார்கள், தன்சொந்த மக்களின் வியர்வையிலேயே வளருகின்ற அமைப்பை இப்படி அடிமட்டத்தனமான பொய்களைச் சொல்லி அற்பத்தனமான சந்தோசங்களில் உங்களை நீங்களே ஏமாற்றப் பழக்கப்பட்டு விட்டீர்கள்.
thyavu sethu unmaya ariya avrathu puthakangalai vaasithu vitu vimarsanam pannalamee??
athudan ithu avar vaikum karuthukalai maruthalikaamal avari kochai paduthum pathivaha enaku padukirathu..aaatharamaana saanruhaludan vivthathi thodaralaamm..neengal unmayaha irukum patchathill
Ernesto ரயாகரனின் பார்வை என்ன? புலிகளின் பலம் பற்றி சிங்களவாதம் கற்பிதம் செய்வதையும் தாண்டி படு பிற்போக்குத்தனமாக அல்லவா இருக்கிறது. இது அவர் அறிவுக்கூர்மையின் தன்மையை வெளிப்படுத்தாதோ?
புலிஆதரவு புலிகளின் கூடாரத்துக்குள் இருந்து மட்டும்தான் உற்பத்தியாகும் என்று கருதுவதனால்த்தானோ புலி லூசு, பன்னாடை, பரதேசிகள் போன்ற வெறிவாயால் கொட்டும் சொற்க்களின் தரத்தில் பதிவுகளைப் படைக்கிறார்.
தமிழ் உணர்வுக்கு தன் உயிரில் துளி அளவுக்காவது இடம் கொடுத்தவன் யென்மப்பகைதான் புலிகளின் பேரில் இருந்தாலும் அவன் கரங்களையும் புலிகளின் பாதையில் பூக்களையே தூவ வைக்கும் அந்த தமிழ் உணர்வு அவனை.
அளவுகதிகமாகவே இருந்த குரங்குத்தனத்தால் சூடுவாங்கிய பழைய காயத்தின் அரிப்பும், பண அரிப்பும் சேர்ந்து ரயாகரனை கண்டபடி எழுதவைக்கிறது. களவையே தொழிலாய் செய்வன்கூட சொல்ல ஒரு நியாயம் வைத்திருப்பதைப் போல் ரயாகரனுக்கும் ஆயிரன் நியயங்கள் முட்டு கொடுக்கவரும்.
Post a Comment